Saturday, March 31, 2007

யாகூவும் கூகிளும் இணைந்தன



யாகூவும் கூகிளும் யாரும் எதிர்பாராத விதமாக தாம் இணைந்து கொண்டதாக சற்றுமுன் அறிவித்தன இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்த இருநிறுவனங்களின் தலைவர்களும் அதனை உறிதிப்படுத்தும் விதமாக இரு தளங்களையும் பிரதிபலிக்க தக்க வகையில் ஓர் தேடு பொறியையும் அறிமுகம் செய்தனர் http://www.gahooyoogle.com/ ஆனாலும் அந்தந்த தேடு பொறிகள் தொடர்ந்து இயங்குமெனவும் தத்தம் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல இங்கே நகர்த்தப் படுவார்கள் எனவும் அறிவித்தன ஏன் திடீர் முடிவு எனக் கேட்ட செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த யாகூவின் தலைவர் தாம் இதற்கு முன் micro soft உடன் messenger தொடர்பாக ஒர் ஒப்பந்தம் செய்திருந்தோம் அதன்பின் சில காரணங்களுக்காக எமக்கு முறிவு ஏற்பட்டது அதன் வெளிப்பாடே இது வெகுவிரைவில் மின்னஞ்சல் புளொக் போன்றவற்றிலும் இணைந்து செயற்படுவோம் என்றார் micro softக்கு எதிராக வெகுவிரைவில் அனைத்திலும் இணைந்து சிறப்பாக செயற்படுவொம் இயங்குதளம் சார்பான ஆராட்சியிலும் ஈடுபடுவொம் என்றும் கூறினார்
இது பற்றி மேலதிக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன அவர்கள் இணைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றுடன் மீண்டும் விரிவாக எழுதுகிறேன்
இச்செய்தியால் பில்கேட்ஸ் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் விழிப்பார் என்று தெரிகிறது

நன்றி இது தமிழ்பித்தனின் முட்டாள் தினச் செய்தி அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ஆனால் ஏதே அந்தத் தளம் மட்டும் உண்மை யாரோ வேலையற்றவன் தயாரித்து வெளிவிட்டான் 7 மாதங்களுக்கு முன் அதை இப்படியாக சிந்தித்து வெளிவிட்டேன்

Thursday, March 29, 2007

blogக்கு வருவோரிடம் திட்டு வாங்க


எத்தனை நாளாக இந்த தமிழ்ப் பித்தனை திட்டித்தீர்க்க வேணும் என்று நினைத்திருப்பியள் இவ்வளவு நாளாக அடக்கிவைத்ததை அருகில் உள்ள பெட்டியில் கொட்டி விடுங்கள் நீங்களும் இப்படி திட்டு வாங்க நினைத்தால் http://www.evoca.com/ இங்கே சென்று பதிந்த அவர்கள் தரும் code எடுத்து உங்கள் blogger ல் பொருத்திவிடுங்கள் (wordpress பாவிப்போர் அவர்கள் தருவதை உங்கள் word press உடன் சேர்த்து நிறுவினால் சரி)
ஒருவர் இப்படி என்னைத் திட்டினார்

பைல் பகிர சிறந்த வழி


இணையத்தில் நீங்கள் ஏதாவது கோப்புக்கள் பதிவேற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினால் இதன் மூலம் உங்கள் தளத்தில் நேரடியாக தரவிறக்க கொடுக்கலாம் மற்றவர் தளத்தை நாட வேண்டியதில்லை அவர்கள் தரும் box ஐ இங்கே ஒரு தடவை பொருத்திவிட்டால் நீங்கள் அவர்களின் தளத்திலிருந்தே இந்தப் பெட்டியினுள் என்ன போடலாம் எந்தப் பைலை பகிரபொகிறீர்களே அதை பதிவேற்றிவிட்டு இங்கே பகிர்வதற்கான சில கட்டளைகளை பூர்த்தி செய்தால் சரி
http://www.box.net
கீழே உள்ளது எனது உதாரண பதிவு

Get your own Box.net widget and share anywhere!

Wednesday, March 28, 2007

யாகூ மெயிலின் வரையறை அற்ற இடக்கொள்ளவு


யாகூ தனது மின்னஞ்சல் பாவனையாளர்களுக்கு வரையறையற்ற இடக்கொள்ளளவு (Yahoo users get unlimited e-mail storage) வழங்க முன்வந்துள்ளது நேற்று அதை உத்தியோக பூர்வமாக அறிவித்த யாகூ மின்னஞ்சல் சார்பாக பேசிய ஓர் அதிகாரி இது யாகூவின் அமெரிக்க வாடிக்கையாளருக்கே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது எனவும் மே மாதம் முழு உலகத்துக்கும் திறந்து விடப்படும் என்றார் அவரை இடை மறித்த செய்தியாளர் ஒருவர் அப்படியானால் காசு கட்டி பயன் படுத்துபவர்களுக்கு மேலும் என்ன வசதியை சேர்த்திருக்கிறீர்கள் என்றார் அதற்க்கு அவர் சிரித்தவாறு வெகுவிரைவில் பதிவேற்றம் 20MB ஆக உள்ளது 50MB ஆக உயர்த்தப் படும் என்றார் மேலும் அவர் குறிப்பிடுகையில் கட்டண வாடிக்கையாளர்கள் தங்களிடம் பாதுகாப்பை நம்பியே வருகிறார்கள் அந்த நம்மிக்யை நாம் வீணடிக்க மாட்டோம் அவர்களுக்கு கொள்ளளவு பிரச்சினையாக இருந்ததில்லை என்றார் இதுவரை அறியப்பட்டதில் AOL தான் வரையறையற்ற இடத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது
இதை கேட்டு கூகிள் என்ன முடிவு எடுக்கப்போகிறதோ தெரியவில்லை

மேலதிக செய்திகள்
http://news.yahoo.com/s/afp/20070328/tc_afp/usitinternetcompanyemailyahoo

Monday, March 26, 2007

பாடல்களை பகிரவும் வானொலியாக்கவும்


http://www.mediamaster.com/
எனும் தளம் 4GB வரையான கொள்ளவைத்தருகிறது நாம் பாடல்கலை பதிந்து இதன் மூலம் பகிர்ந்த கொள்ளலாம் அல்லது feed இன் உதவியுடன் நாம்விரும்பும் பாடல்களை அங்கே பதிந்து வலைப்பூவில் தெரிய வைக்கலாம் ((((நான் அருகிலே செய்துள்ளது போல)))) அத்துடன் அங்கே பதிந்த பாடல்ளை வானொலியாக்கியும் கேட்டு பகிர முடியும்



வானோலிக்கான இணைப்பு
http://n91.mediamaster.com/myradio/tbiththan.pls

Sunday, March 25, 2007

template வடிவமைப்பு

நீங்கள் பலரின் வலைப்பூவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பீர்கள் அவர்கள் வலைப்பூ வடிவாக இருக்கிறதே நான் புளாக்ர் தர்வதையே பயன்படுத்துகிறனே என்று நானும் அப்படித்தான் இது வரை இரவல் templateதான் வசந்தன் தந்து உதவினார் இன்று முழுவதும் முயற்சி செய்து எனக்கென்று தனித்துவமான template ஐ வடிவமைத்தேன் அதற்கு பல தளங்கள் உதவின ஒரு தடவை நினைத்தேன் அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து வழங்கினால் என்ன வென்று அது கைகூடாத காரணத்தினால் அவற்றில் எனக்கு பிடித்த தளத்தை தருகிறேன் வடிவமைத்த பல template ம் இருக்கிறது விரும்பினால் அவற்றையும் பாவிக்கலாம்
http://hoctro.blogspot.com
(((ஆமாம் நான் கஸ்டப்பட்டு வடிவமைத்த template பற்றி ஒன்றுமே சொல்லலையே))))

youtube போலே இன்னும் சில

youtube பாவித்து சலித்துப் போனீர்களா ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் ஆகவே இதை பாவியுங்கள் என்று நான் சொல்வதை விட இருப்பதை தருகிறேன் பாவித்து விட்டு நீங்களே என்க்கு சொல்லுங்கள் எது திறம் என்று

இதுவும் ஒரு நல்ல வீடியோ தளம் தான் நிறைய fun வீடியோக்கள் இருக்கு இதிலே உள்ள சிறப்பம்சம் அவர்கள் தரும் மென்பொருளை பயன்படுத்தி நாங்கள் அவர்கள் தளத்தில் தேடி தரைவிறக்கம் செய்யலாம் (முந்தி நான் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது யாழ் நூலகத்தில் இதைப் பயன் படுத்தி தரைவிறக்க செய்து விட்டு போவோம் மறுநாள் அவற்றை வந்து பார்ப்போம் அதற்கு நிர்வாகிளும் என்னுடன் உடந்தை இல்லா விட்டால் என்ன வென்று இரவிரவாக கணிணியை இயங்கத்தான் விடுவார்களா? அங்கே வேகம் மிகக் குறைவு 64kps)




அவர்களின் மென்பொருள் இயங்கும் பொது இப்படித்தான் காட்சியளிக்கம்




இதைப்பற்றி அதிகம் எனக்கு தெரிய வில்லை என்றாலும் இதனை சிலர் புகழ்கிறார்கள் ஒப்பீட்டு ரீதியில் இது தரைவிறக்க வேகம் அதிகமாம்

Saturday, March 24, 2007

youtube லிருந்து வீடியோவை தரவிறக்க

yotube ல் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதை தரைவிறக்கி சேமித்து வைத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதற்க்கு பல தளங்கள் உதவி செய்தாலும் அவற்றில் எது நல்லம் என்று கருதி சிலதை வரிசைப்படுத்துகிறன

1)mytubeplayer
இது சாதாரண பைல் இறக்கத்தையே தரைவிறக்க ஊக்கியாக இருந்தது அண்மையில் இவர்கள் youtubr downloder என்பதை அறிமுகம் செய்தார்கள் இதை தரைவிறக்கி install செய்த பின்னர் அம்மென்பொருளை இயக்கி அதில் youtube ஐ தரைவிறக்குவதற்கான option இருக்கும் அதில் சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ இட்டு தரைவிறக்க வேண்டியதுதான் சாதாரண தரைவிறக்க வேகத்தை விட 5 மடங்கு வேகமாக தரைவிறக்கமாகும்




2) TubeSucker இதை நிறுவுவீர்களாக இருந்தால் இது ஒரே நெரத்தில் வேகம் குறையாமல் 32 வீடியோக்களை தரைவிறக்கம் செய்யவல்லது ஆனால் வேகத்தை ஊக்கிவிக்காது
3)கிழே சில webbast தரவிறக்கங்களைப் பார்கலாம்
இந்த வகை தளங்களுக்கு நீங்கள் சென்று தரைவிறக்க விரும்பிய URL ஐ இட்டு தரைவிறக்கப்பணணலாம்
javimoya
YouTubeX
youtube.tdjc.
ஒரு நேரத்தில் ஒரு வீடியொவை மட்டும் தரைவிறக்க நினைப்பவர்களுக்கு முதலாவதும் ஒரே நேரத்தில் பலதை இறக்க நினைப்பவருக்கு இரண்டாவதும் மென்பொருள் நிறுவ இயலாதவர்கள் மற்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பாவிக்கலாம்


கடந்த பதிவில் இப்படியான தளத்தை எதிர்பார்பதாக திலகன் பின்னூட்டம் இட்டிருந்தார் இது அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்யுமா?

Friday, March 23, 2007

meebo போல பலபேர்




பலருக்கு இப்போது meebo என்ற தளம் அரட்டை அடிக்க துணைபோகிறது அதன் மூலம் yahoo msn talk aim எதுவாக இருந்தாலும் அதனுள் நுழைந்து உமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம் இதனால் பல messengerகளை ஒரே நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டியதில்லை அத்துடன் messenger இல்லாத கணணிகளிலிருந்தும் பயன்படுத்த முடியும் அனால் இதனுக்குப் போட்டியாக இப்போழுது பல தளங்கள் வந்துள்ளன அவற்றில் சில கீழே

http://www.radiusim.com/ இதன் சிறப்பம்சம் கூகிள் ஏர்த் மூலம் விரும்பிய இடத்துக்கு சென்று அப்பிரதேசத்திலிருந்து இணைந்திருப்போரை படத்துடன் காட்டுவார்கள் விரும்பியவரை தெரிவு செய்து அரட்டை அடிக்கலாம்




http://www.koolim.com/ இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நன்மைகள் எதுவும் இல்லை ஆனாலும் மீபோவுடன் ஒப்பிடும் போது நல்லது என்றே தோன்றுகிறது


http://wambo.comஇவர்கள் தங்களின் மென்பொருள் ஒன்றை நிறுவச் சொல்லி சொல்கிறார்கள் அதன் மூலம் யாகூ எம்எஸ்என் போன்றவற்றில் உள்ள உமது நண்பர்களுடன் என்றவேகத்தில் பரிமாறிக்கொள்ளலாம்

Thursday, March 22, 2007

சில ஒலி பகிர்வு தளங்கள்

சிலர் கேட்கிறார்கள் எல்லாவற்றையும் வரிசைப்படுத்துகிறீர் எதை நாம் பயன் படுத்துவதென்று நாளுக்க காள் புதிய தளங்கள் வந்து கொண்டிருக்கின்றன நேற்றை தளங்களை விட இன்று அறிமுகமாபவை பல வசதிகளை கொண்டிருக்கம் நாளை வருபவை அவற்றை விட இன்னும் பல வசதியோடு வரும் இப்படி இருக்க நான் எதையென்று பரிந்துரைக்க தற்போது நான் முன்பு அறிமுகப்படுத்திய சிறந்தது ஆனாலும் இதன் பிளேயரின் தோற்றம் சிலருக்கு பிடிக்க வில்லை அப்படியானவர்கள் கீழே சில ஓடியோ தளங்கள் தரப்பட்டுள்ளன அவற்றை பயன் படுத்தலாம்
http://www.ijigg.com



http://www.seeqpod.com/music/

Wednesday, March 21, 2007

இலவச உள்வரும் அழைப்புக்கள்

இலவசமாய் உங்கள் கணணியின் முலம் நீங்கள் உள்வரும் அழைப்புக்களைப் பெறலாம் அமெரிக்கா அல்லது லண்டன் பொன்ற நாடுகளின் நம்பர்களில் பெற்றுக் கொள்ள முடியும் பின் வரும் இணையத்தளங்கள் இலவசமாய் நம்பர் தர முன்வந்துள்ளன

அமெரிக்க நம்பர்
gizmo ( 1 775 xxx xxxx)
globe7
ipkall

லண்டன் நம்பர்
coms
SIPGate
OrbTalk-
OpenTelecom-

உலகம் தழுவிய
Tpad-
FonoSIP-


பரிந்துரை (gizmo and glope7)

Tuesday, March 20, 2007

youtube வீடியோவின் வேகத்தை அதிகரிக்க

pic_1

நீங்கள் குறைந்த வேகமுடைய இணைய இணைப்பு பாவிப்பவரா youtube இல் உள்ள வீடியொவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கமா கவலையை விடுங்கள் speedpit என்ற தளம் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது சில தினங்களுக்கு முன்னதாக அது video Accelerator என்ற மென் பொருளை வெளியிட்டது அது வீடியோ பார்ககும் வேகத்தை 5 மடங்காக அதிகரிக்கிறது இதனால் நீங்கள் பார்க்கும் வீடியொ வேகக் குறைவினால் வெட்டாமல் இயங்க உதவும் இயல்பாக 1 வழியில் வரும் தரவை இது தரவுகளை 5 வழியாக மாற்றுகிறது அதனால் வெகம் அதிகரிக்கிறது

வேகத்தை அதிகரிக்கும் விதம்
pic_2

ஒப்பீட்டு ரீதியான வேகம்
pic_5

pic_3


(128 க்கு நன்றாக இருக்கும் அதற்கு குறைந்ததை பரீட்சிக்க முடியவில்லை) அடுத்து இது தனியே youtube க்கு மட்டுமே ஊக்கம் கொடுக்கும் நான் பரிந்துரைத்த veoh உட்பட. இது தொடர்பாக கருத்துரைத்த அதன் வடிவமைப்பாளர்கள் இது விரைவில் அனைத்துக்கம் இயக்கக் கூடியதாக அமைக்கப் படும் என்று கூறினார்கள் இம் மென்பொருள் வீஸ்டாவுக்கு(vista) ஒத்துழைக்காது youtube இன் வீடியோ எங்கு பதிந்திருந்தாலும் ஊக்குவிக்கும் (eg; blogger,forum.exc...)

வேகத்தை அதிகரிக்கும் நுட்பம்
pic_4

Monday, March 19, 2007

இணையத்தில் இலவச TV

இப்பொழுது இணையத்திலையே தொலைக்காட்சி பார்க்கும் வசதியை பல தளங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன அவற்றில் ஒன்று
http://www.channelchooser.in
தமிழ் சனல்களின் எணணிக்கை(click india )
1)rajtv
2)raj tv digital
3)raj tv music
4)jaya tv
5)num tv
6)num tv movies

உங்கள் பிரதேசத்தில் வேலை செய்கிற Tv ஐ கண்டறிய

நீங்கள் தொலைக்காட்சி ரசிகரா உங்கள் பிரதேசத்தில் என்னென்ன தொலைக்காட்சி வேலை செய்கிறது என அறிய ஆவலா இங்கே சென்று உங்கள் postalcode ஐ போட்டு தேடுங்கள் மிகப் பெரிய list யே தருகிறது

http://couchville.com/config/

Sunday, March 18, 2007

happy feet ஐ பதிவிறக்குங்கள்(ஆங்கிலத் திரைப்படம்)

இந்தத் திரைப்படத்தை வெகுநாட்களாக பார்க்க வேணும் என்று அவா ஆனாலும் இப்போதுதான் பார்க்க காலம் கனிந்து வந்துள்ளது அதை உங்களுடன் பகிரலாமே என்று இங்கே பகிர்கிறேன் இதை பற்றிய கருத்தை கட்டாயமாக எதிர் பார்கிறேன் என்னிடம் வரும் திரைப்படங்களை உங்களுடன் பகிரவா வேண்டாமா என்பதை கட்டாயமாக வோட்டுப்பெட்டியில் கட்டாயம் இடுங்கள்

"கொடுப்பதுதான் நான்
எடுப்பது நீங்கள்
ஆகவே அதை தடுக்கவும்
உங்களுக்கு உரிமையுண்டு"

அருகில் உள்ள பெட்டியில் வோட்டுப் போடுங்கள் தமிழ் திரைப்படங்கள் பதிவிறக்க பல தளங்கள் உண்டு அதனால் அது வேண்டாம் தானே
சிறிய movie trailer ஐ பார்த்து விட்டு பிடித்தால் பதிவிறக்குங்கள்

Online Videos by Veoh.com


அனைத்து நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இணைப்பு நீக்கபட்டுள்ளது அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

ஓடியோ podcast



ஒடியோ போட்காஸ்ட் செய்ய சிறந்த தளம் நானும் போய் சரி tamil என்று தேடுவம் என்று பார்த்தால் முதலில் வந்து நிக்கிறா தமிழ் சமையல்காரி எவ்வளவு முன்னேற்றம் தமிழ் நாட்டுக் மசாலா சமையல் இணையத்திலும் மணக்குது அந்த அக்காவுக்கு நன்றி ( அக்கா தமிழில் தட்டச்சு தெரியாமையினால் ரெம்ப கவலைப்படுறா)
5 வகையான பிளேயர்கள்
கேட்டதை அப்படியே களவேடுக்கும் சீ ..சீ பதிவறக்கும் வசதி(வயது போய் வாய் தடுமாறுது)


powered by ODEO

சரி சாப்பாட்டைக் காடடி கவுழ்த்துட்டேன் என்று நினைக்காதீர் இதே ஒரு தமிழ் பாடல்


powered by ODEO

Saturday, March 17, 2007

காட்டூன்களின் தாதா




வீடியோவுக்கு ஒரு youtube போல காட்டூனுக்கு ஒரு mytoon நீங்கள் காட்டூன் ரசிகராக இருந்தால் உடனே போங்கோ பல ரசிகக் கூடிய காட்டூன்கள் இருக்கு

mytoonsshot

ஆனால் ஒன்று தமிழில் தான் ஒன்றும் இல்லை என்ன செய்வது அனிமேசன் துறையில் தமிழ் இன்னும் "அ"வையே இன்னும் எழுதத் தொடங்கவில்லை என்று நினைக்கிறேன் ஒரு உதாரண அனிமேஷன் கீழே
"ஒரு மனிதன் இன்சூரன்சால் படும் பாட்டை பாருங்கள்"

கூகிள் messenger ல் மேலதிக வசதிகள்

யாகூ பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன் யாகூவுக்கு போட்டியாக கூகிளும் வெளியிட்டது வீடியொ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு அரட்டை அடிக்கும் வசதி
கூகிள் அரட்டையை உங்கள் home pageல் அமைத்து அரட்டை அடிக்கும் வசதியை இப்பொது கூகிள் வழங்குகிறது அது பற்றிய விளக்கமான வீடியோவை கீழே பாருங்கள்
http://www.google.com/talk/ யாகூ பற்றிய பதிவு இங்கே


இலவச sms அனுப்ப சில வழிகள்

1)
http://http://www.teleflip.com/index.php/demo இது மாதம் 5000 வரையான குறுஞ்செய்திகளை அனுப்ப அனுமதி வழங்குகிறது பெற்றுக் கொண்டவர் மீண்டும் பதில் போடும் வசதியும் உள்ளது அவை உங்கள் மெயிலுக்கு அனுப்பப் படும்


2)http://gizmosms.com/சாதரணமாக அனுப்பலாம் வரையறையில்லை இதற்க்கு கணக்க பதிய வேண்டாம்



3)http://www.txtdrop.com அமெரிக்கா கனடாவக்கு அனுப்ப சிறந்தது பதிலும் பெற்றுக் கொள்ள முடியும்



4) www.wow.lk இலங்கையர்கள் அனுப்ப சிறந்த தளம்

Friday, March 16, 2007

கலக்கும் வீடியோ தளம்




இனி நான் நினைக்கிறன் youtubeக்கு தலைக்கனம் குறையும் என்று ஏனென்றால் இந்த வீடியோ பகிர்வுத்தளம் கலக்கத் தொடங்கி விட்டது நல்ல தெளிவான வீடியோ, டிவிடி தரம் என்று கலக்குகிறது அடுத்து இவர்கள் தரும் பிளேயர் மூலம் எந்தத் தளத்தில் உள்ள வீடியோவையும் பதிவிறக்கி பார்த்து மகிழ முடியும் இன்னுமோர் சிறப்பம்சம் வரை பதிவேற்றலாம் ஒன்றொ இரண்டு தமிழ் பதிவர்களையும் காண முடிகிறது ஆமாம் நீங்கள் எப்போ மறப்போகிறீர்?

அங்கே சுட்ட பாடல்காட்சி

Online Videos by Veoh.com


அவர்கள் வழங்கும் பிளேயரின் முகப்புத் தோற்றம்
veoh5

பிளேயரின் உள்த்தோற்றம்
veoh4

2007 ல் தளத்தின் பாவனையாளர் அதிகரித்திருப்பதை காட்டும் அட்டவணை
veoh7

imeem இல் playlist ஐ எப்படி புளொக்கில் பதிவது

கானா பிரபா அவர்கள் imeem இல் எப்படி playlist ஐ உருவாக்கி புளொக்கில் பதிவது என்று கேட்டிருந்தார் அதற்க்கு பின்னூட்டம் இடாமல் தனிப் பதிவாக போட்டால் விளக்கமாக கூறலாம் என்று தனியாக அமைத்தேன் நீங்கள் பதிந்த பாடலையே அல்லது வீடியோவையோ தெரிவு செய்து listen --add play list என செய்யவும் play list இன் பெயரை கொடுத்து add பண்ணவும் பின் உங்கள் கணக்குக்கு திரும்பி ( refresh செய்வது நல்லம்) பின் listen ஐ click செய்து பின் அதன் கீழ் உள்ள கோடிங்கை உங்கள் புளக்கில் பொருத்தவும்

எனது உதாரண playlist ஐ கீழே பாருங்கள்



முந்தய பதிவு

இலவச இணையமும் அவற்றில் சிலவும்

இலவச இணையம் என்பது இப்பொழுது பரவலாக போசபடும் ஒரு விடயமாக இருக்கிறது இணையத்தளம் அமைத்தல் என்பது பலருக்கு எட்டாக் கனியாக பலகாலம் பலருக்கு இருந்து வந்துள்ளது பின் சிறிது காலத்தின் பின் யாகூ போன்றவர்கள் முதல் வகையான இலவச தளங்களை அறிமுகம் செய்தனர் அக்காலத்தில் பலர் அவற்றை முண்டியடித்துக் கொண்டு பெற்றுக் கொண்டனர்

அவற்றில் அதிக அளவான விளம்பரமும் குறைந்த இடமும் வேறு வசதிகள் எதுமற்ற நிலையில் இருந்தன இவை அலுத்துப் இவை சரியல்ல எங்களிடம் வாருங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் என்று கும்மியடிக்கவே எல்லோரும் இதற்கு தாவினர் பின் வந்த ஒரு சாரார் தாங்கள் விளம்பரம் இடமாட்டோம் என்றனர் இப்படியாக பல போட்டிகளுடன் வளர்ந்து வந்த இலவச இணையத்துறை இன்று பலவசதிகளுடன் கட்டணத் தளங்களுக்கு போட்டியாக மிளிர்கிறது


சரி இனி எப்படி ஒரு நல்ல இலவசஇணையத்தை அடையாளம் காண்பது எனப் பார்ப்போம் தற்போது எவ்வளவு வசதிகள் எதிர்பார்க்கலாம் எனவும் கூறுகிறேன்
இடக் கொள்ளவு(1 Gbக்கு மேல்)
band width(5GBஇருந்து 500GB)
MySQL ( 10க்கு மேல்)
Fantastico,( one click ல்wordpress joomla பொன்றவற்றை install செய்யும் வசதி)

இவற்றை யெல்லாம் கொண்ட தளத்துக்கெல்லாம் எங்கே போவது என்று புலம்பாதீர் இதே சில தளங்கள் ஆனாலும் இப்படி இயங்கினாலும் நம்பிக்கை என்பது முக்கியம் எனக்கு நம்பிக்கையாக பட்டதில் சில தளங்களை கீழே பதிகிறேன்

http://www.unlimitedmb.com
- 500GB Data Transfer
- 5GB Disk Space
- Fast 100mbit Internet Connection
- Automated Instant Activation
- yourname.ulmb.com
- yourname.com.net.sc
- PHP & MySQL
- 99.9% Uptime
- FTP & Browser Uploads
விளம்பரம் இல்லை
சிப் முறையில் பதிவேற்றலாம் (பலர் இதை வழங்குவதில்லை) நான் இதிலையே அல்பம் தயாரித்திருக்கிறேன்
இதில் உள்ள குறை கட்டண தளத்துக்கு நிகராகcFantastico என்னும் வசதியில்லை


http://www.1majorhost.com/
10Gb Storage Space
99.98% Server Uptime
65Gb Monthly Data Transfer
Linux Enterprise Operating Systems
FTP Supported
PHP 4 Supported
MySQL 4 Supported
Rapid Servers with low load time

விளம்பரம் இல்லை
இதிலுள்ள குறைகள் சிப்பாக பதிவேற்ற இயலாது


http://www.i6networks.com
5000 MB Space
1 TB Bandwidth
முழு வசதிகளையும் கொண்டது
இதிலுள்ள குறைபாடு கட்டாயம் நீங்கள் domain வைத்திருக்க வேணும் அதை வைத்தே பதிய வேண்டும்

நீங்கள் என்ன வகைத்தளம் அமைக்க போகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதை நீங்கள் தெரிவு செய்வது என்பதை முடிவு செய்யலாம் வீடியோ ஓடியோ தளங்கள் என்றால் அதிக bandwidth வேண்டும் ஆகவே முதலாவதையும் சாதாரண தகவல் தளமாயின் இரண்டாவதையும் தேர்வு செய்யலாம் இங்கே சுலபமாக wordpress joomala போன்ற பலவற்றை install செய்யலாம் (one click முறையில்)

சந்தேகங்கள் இருப்பின் அருகில் உள்ள meebo மூலம் தெடர்பு கொள்ளலாம்

Thursday, March 15, 2007

யாகூ messenger இல் வீடியோ



நீங்கள் உங்கள் நண்பர்களுடன் யாகூ மூலம் அரட்டை அடிப்பவரா சில வேளைகளில் ஒரு வீடியொவை(youtube,googlevideo,etc....) ஒரே நேரத்தில் பார்த்து இருவரும் அதைப்பற்றி அரட்டை அடிக்க நினைத்திருப்பீர் ஆனாலும் அது உங்களால் முடியாமல் இருந்திருக்கும் இப்போது அதற்கெல்லாம் தீர்வு வந்து விட்டது கீழே இருப்பன் மீது கிளிக் செய்ய அது தானாக உமது messengerல் install ஆகும் (யாகூ messenger இல்லாவிடில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்)

  • இதன் மீது கிளிக் செய்யுங்கள்
    Zync plugin
    .


  • அதன் பின் யாருடன் அரட்டை அடிக்க போகிறீரே அவரை வழமையாக அழைப்பது போல அழைத்து (அவரையும் இது போல் செய்ய சொல்லுங்கள்) பின்
    Go to the Actions menu and pick Choose a Plugin...
    Click the My Plug-ins tab
    Click the Start button
    நீங்கள் பார்த்ததை அவருக்கும் அவர் பார்த்ததை நீங்களுமாக அனுப்பி ஓரே நேரத்தில் பார்த்து மகிழுங்கள் அவ் வீடியோக்கள் எல்லாம் வலதுபுற பெட்டியில் தெரியும்

    கொசுறு:- விளக்கம் போதாவிடின் பின்னுட்டத்தில் குறிப்பிடுங்கள் விளக்க தயாராக இருக்கேன்

    இலவச அரட்டைப் பெட்டி உருவாக்க










    நீங்கள் உங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தில் அரட்டை இணைக்க விரும்புகிறீர்களா நிறைய செலவாகும் என பயப்படுகிறீரா கவலையை விடுங்கள் இது அனைத்து வசதியும் கொண்ட இலவச அரட்டைத் தளம் அமைக்க உதவுகிறது வீடியோ ஓடியோ எழுத்துரு போன்ற அனைத்திலும் உரையாடலாம் எல்லாம் நல்ல தரமான முறையில் இயங்கும்



    http://www.userplane.com/




    font color smile என அனைத்தும் உள்ளது





    தெளிவான ஓடியோ வீடியோ







    நீங்கள் பரிசோதிக்க அருகில் உள்ள நுழைவுப் பெட்டியினுள் பேயரை கொடுத்து உள்நுழைந்த என்னுடன் அரட்டை அடித்து பரிசோதியுங்கள்

    நான் போட்ட பின்னூட்டங்கள்

    சயந்தன் இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டல் திரட்டியை அறிமும் செய்திருந்தார் அது Fire fox க்கு நன்றாக இயங்குகிறது ஆனால் என்போன்ற IE ரசிகர்களுக்கு அது பிரச்சனையாகவே இருந்து வந்தது (சிலருக்கு சரிவந்திருக்கலாம்) இதை தீர்ப்பதற்க்காக முயன்றதில் பல தளங்கள் தீர்வாக கிடைத்தன

    அவற்றில் எனக்கு பிடித்ததும் IE இல் நன்றாக வேலை செய்யக் கூடியது இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் இது நாம் இட்ட கருத்தை திரட்டாமல் அது இடப்பட்ட தலைப்பை திரட்டி அதன் மொத்த கருத்தையும் காட்டி அவற்றுக்கு இணைப்பும் வழங்குகிறது நான் அதை அருகில் பொருத்தியிருக்கிறேன் பாருங்கள்

    http://co.mments.com

    இதில் வழங்குகின்ற சிறு எடுத்து உங்கள் பதிந்து விட்டு(right click-add to favorites) நீங்கள் கருத்து இட முன்னர் இதை அழுத்தி கருத்தை இடுங்கள் உங்கள் கருத்து திரட்டப்பட்டு விடும்

    Wednesday, March 14, 2007

    சிறந்த வீடியோ பிளேயர்



    Democracy: Internet TV


    இது ஒரு சிறந்த வீடியோ பிளேயர் இதில் உள்ள சிறப்பம்சங்கள்
    அனைத்து வகையான பைலையும் play பண்ணும் ( Quicktime, WMV, MPEG, AVI, XVID, and more..)
    முலம் 1000 மேற்பட்ட ரீவி சனல்
    ஒன் லைன் வீடியோக்களை தேடி play and donwload பண்ணவும் முடியும்(youtube.googlevideo,blip,dailymotion and more..)
    எப்பைலானாலும் HD தரத்துடன் முழு ஸ்கிறீனில் பார்க்கலாம்

    இலவச call உமது போனிலிருந்தே உலகம் முழுக்க


    http://www.jaxtr.com
    இந்த தளத்தில் பதிந்திருக்கும் உங்களோடு இலவசமாக கதைக்க விரும்புபவர் தனது தொலைபேசியிலிருந்து(mobile or landline) கதைத்து மகிழலாம் இத்தளத்தில் பதிந்த ஒருவருடன் நீங்கள் கதைக்க விரும்பினால் அவருக்கு என்று url தனியான கொடுத்திருப்பார்கள் அங்கு சென்று எமது தொலைபேசி இலக்கத்தை பதிந்து call எனும் பட்டனை அழுத்தினால் எமக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு செல்லும் நாங்கள் இருவரும் கதைத்து மகிழவேண்டியதுதான் இதை உமது வலைப்பூவில் வைத்து வருகையாளரிடமும் கதைக்கலாம் மின்னஞ்சல் அனுப்பி உங்கள் நண்பரை கால் பண்ணச் சொல்லலாம்

    ஆனால் இதுக்கு அழைப்பு அனுப்பியே கணக்கு ஆரம்பிக்க வேண்டும்
    "'யாமிருக்க பயமேன் " உங்கள் மின்னஞ்சலை பதியுங்கள் அழைப்பு அனுப்பிறன்

    அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் போன் நம்பரை call அழுத்தி பண்ணுங்கள் அது உங்கள் call தானா என உறுதிப்படுத்த அவர்கள் திரையில் ஒரு நம்பர் காட்டுவார்கள் அதை உமது பொனில் சரியாக அழுத்துங்கள் இப்போதே தமிழ்பித்தனுடன் கதைக்கலாம் இவ்வரிய சந்தர்ப்பம் ஐவருக்க மட்டுமே

    கொசுறு1:- எனக்கு அனுப்பியது ஒரு லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்கார பெட்டை பாருங்கோ தனக்கு அடித்து பரிசோதிக்க சொல்லி இருந்தது அதுக்கு call துணிந்து பண்ணீட்டன் அதுக்கு பிறகுதான் வில்லண்டம் பாருங்கே அது இங்கிலீசில கதைக்க நான் தெரியாமல் முழிக்க ஆனாலும் இந்த இடத்தில ரஜினி உதவி செய்யிரார் பாருங்கோ அவர் குரு சிஷயனில் செய்தது போல நானும் yhaa yhaa போட்டு தப்பீட்டன்(ஹி.ஹி........)

    Tuesday, March 13, 2007

    வரலாற்றில் கறைபடிந்த அந்த நாட்கள்

    வரலாற்றிலே வடமராட்சி மக்களுக்கு கறைபடிந்த அந்த நாட்கள் வசந்தகாலம் தழுவும் 1987ம் ஆண்டு வைகாசி மாதம் கோயில்கள் கொடியேறி விழாக்கோலம் பூணும் காலம் ஆனால் எம்மூரில் மகிழ்சி இல்லை எங்கும் அழு குரல்கள் எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல ஆமாம் அப்பா இறந்து விட்டாரோ என சந்தேகம் ஆனால் உடலம் கிடைக்க வில்லை இதற்கு காரணம் விடுதலைக்கான செயல் வடிவம் என்வழங்கப்பட்ட வடமராட்சி மீதான இராணுவத்தின் படையெடுப்பே தொண்டைமனாறு போன்ற முன்னரங்க நிலைகளில் மட்டும் சிறு எதிர்ப்பைக் காட்டிய விடுதலைப் புலிகள் பின் எங்கே ஓடி மறைந்தனர்

    இதை ஏதும் அறியாதவராக நாமும் எம்மூர் மக்கள் சிலரும் தம் பாதுகாப்புக்காக தாம் வெட்டி வைத்திருந்த பதுங்கு குழிகளில் ஒளிந்து இருந்தனர் ஆனாலும் எமக்கு வந்த அதிஸ்டம் எம்மூர் விடுதலைப்புலி உறுப்பினர் வந்து இராணுவத்தினர் மிக நெருங்கி விட்டார்கள் எனவும் எங்களை வேறு எங்காவது செல்லமாறும் எங்களுக்கு பணிக்கவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி பருத்துறை சென்றடைந்தோம் ஆனால் எமது தந்தையோ தான் பொலிஸ் அதிகாரி என்கின்ற அசட்டுத் தைரியத்தில் வீட்டிலையே இருந்து விட்டார் நாங்கள் பருத்துறையில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது ஊரே சுடுகாடாகி கிடந்தது அங்கங்கே பல பிணங்கள் எங்கும் எரித்து உருக்குலைக்கப்ட்ட பிணங்கள் அவற்றையெல்லாம் அடையாளம் காணும் முயற்சியில் எல்லாம் விட்டுவிட்டு இளைஞர்கள் அவற்றை யெல்லாம் அந்தந்த இடங்களில் போட்டு எரித்தனர் பலர் உறவுகள் இறந்து விட்டார்கள் எனக் கருதியே அனைத்தையும் செய்தனர் நாமும் அப்படியே செய்தோம் ஆனால் சமய சடங்குகள் செய்யுமளவில் யாரும் இல்லை ஒருவனை ஒருவன் தேற்ற முடியாத நிலை எல்லோர் வீட்டிலும் சவக்கோலம் இப்படியாக 5 மாதங்கள் ஒடிப்போயின அன்றொரு நாள் ஒரு கடிதம் எங்களுக்கு வருகிறது

    ஆம் அது என் அப்பாவிடம் இருந்துதான் தான் பூசா தடுப்பு மூகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தான் அங்குள்ள வைத்திய சாலையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் எழுதியிருந்தார் பின் அம்மா பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அப்பா பின் மீட்கப்பட்டார் அப்பாவைக் கணாத நாங்களும் நாங்கள் உயிரோடு இருக்கிறோமா என்று சந்தேகத்தோடு வாழ்ந்த அந்த மூன்று மாதம் எங்களுக்கு இரத்தக் கறை படிந்த நாட்களே

    இதுதான் எனது முதலாவது ஒலிப்பதிவு ஆதலால் குரலில் சில தடுமாற்றங்கள்.
    இனிவரும் பதிவுகளில் சிறப்பாக அமைக்க முயற்சி செய்கிறேன் உங்கள் ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்

    இலவச போன் திட்டம்



    http://www.gizmoproject.comஎனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்

    LANDLINES AND MOBILES
    Canada
    China
    Cyprus
    Guam
    Hong Kong
    Malawi
    Malaysia
    Puerto Rico
    Russia
    SaipanSan
    Marino
    Singapore
    South Korea
    Thailand
    United States
    US Virgin Islands
    Vatican City

    LANDLINES ONLY
    Argentina
    Australia
    Austria
    Belgium
    Brazil
    Bulgaria
    Chile
    Czech
    Republic
    Denmark
    Estonia
    Finland
    France
    French
    Antilles
    Germany
    Gibraltar
    Greece
    Guadeloupe
    Hungary
    IcelandIreland
    Israel
    Italy
    Japan
    Liechtenstein
    Luxembourg
    Monaco
    Netherlands
    NewZealand
    Norway
    Panama
    Peru
    Poland
    Portugal
    Slovenia
    Spain
    Sweden
    Switzerland
    Taiwan
    Turkey
    United
    Kingdom
    Venezuela
    Zambia

    Monday, March 12, 2007

    உங்கள் பெயரிலேயே கூகிள் தேடுதளம்




    உங்கள் பெயரிலேயே கூகிள் தேடுதளம் அமைக்க விரும்புகிறீர்களா?ஆம் என்றால் http://devshots.com இந்த தளத்துக்குச் சென்று அமைத்துக் கொள்ளுங்கள் நான் அமைத்த தளம் இது


    http://devshots.com/%20%20%20%20%20%20biththan.aspx

    இலவச mobile to mobile call



    நீங்கள் 3G வசதியுள்ள போன் வைத்துள்ளீரா அப்படியானால் இவசமாக இதே வசதி உள்ளவருடனும் skype talk msn போன்றவற்றுடனும் போன் கதைக்கலாமே ஆக GBRS இற்கான செலவுதான்

    தேவையானவை
    3Gதரத்திலான மொபைல் மற்றும் நெற்வேர்க்






    எப்படி செய்வது
    http://www.fring.com என்ற தளத்துக்குச் சென்று உங்கள் மொபைல் நம்பர் உட்பட உங்கள் விபரம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனை தொடர்ந்து அவர்கள் உங்களுக்கு sms ஒன்றை அனுப்புவார்கள் அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள்
    கொசுறு;-இத்தளத்தில் ஏதாவது மெலதிக வசதி இருப்பதாக கண்டால் இதில் பதியவும்


    சாதாரண தொலை பேசியால் ஏற்படும் செலவுக்கும் இதற்குமான வேறுபாடு



    நீங்கள் online வீடியோ அல்பம் தயாரிக்க



    மீண்டும் பல சுவார்ஷமான தகவல்களுடன் வந்துள்ளேன் ஆமாம் நீங்கள் எத்தனையோ வீடியோ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு மகிழ்ந்திருப்பீர் அவற்றையெல்லாம் ஒரு அல்பமாக்கி மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் தவித்திருப்பீர் இப்போது அதற்கெல்லாம் முடிவு வந்து விட்டது ஆமாம் நீங்கள் இணைய தளம் வைத்திருந்தால் இவர்கள் தருவதை உங்கள் இணையத்தில் நிறுவுவதன் மூலம் அமைக்கலாம் என்னடா இவன் இணையம் அது இது என்று இறுதியில் குண்டைத்தூக்கி போடுறான் என்று நினைக்கிறீர் புரிகிறது இப்போழுதுதானே இலவச தளங்கள் ஏராளமாக கிடைகின்றன அவற்றில் ஒன்றில் நிறுவி பயன்படுத்துங்கள்







    இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்




    நான் உருவாக்கியதுhttp://tbiththan.ulmb.com/twg15/twg/index.php? (இன்னும் பூரணமாகவில்லை)



    இன்னொரு தமிழ் நண்பரினது http://www.pkp.in/fun/Albums/index.php?



    இதன் அனுகூலம்


    இதில் பதிவதை feed மூலமாக வலைத்தளத்தில் தெரிய வைக்கலாம்

    பைல்கலாக தொகுக்கலாம்

    முற்றிலும் இலவசம்

    முதல் பக்கத்தில் மட்டும் விளம்பரம்

    இலகுவானது(தனியே வீடியோ இருக்கும் url கொடுத்தால் போதும்)

    பயனரும் விரும்பியதை சேர்ககலாம் (அதை நீங்கள் விரும்பாவிட்டால் தடுக்கலாம்)

    எந்த வகை தளத்திலிருந்தாலும் சேர்க்கலாம்(நீங்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்)


    ஓடியோ வீடியோ போட்டோ என எதுவானாலும் சேர்ககலாம்


    கொசுறு;- நான் இலவச தளத்தை கொண்டே உருவாக்கினேன்

    இது தொடர்பான உதவிக்கு massenger மூலம் tamilbiththan@hotmail.com தொடர்பு கொள்ளலாம்

    Thursday, March 8, 2007

    ஒலியும் ஒளியும் பகிர்ந்து கொள்ள


    imeem இதுதான் இப்போது பிரபலமான ஓடியோ வீடியோ போட்டோ என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஓரே தளம்

    • தெளிவான ஒளி மற்றும் ஒலி நயம்
    • கவர்ச்சியான முகப்புத் தோற்றம்




    • தரைவேற்ற மென்பொருள்
    • விரும்பியதில் வெளியிடலாம்
    • உங்களுக்கென்ற தனியான முகவரி
    • தொகுக்கும் தன்மை (play list)
    • யுனிகோட்டுக்கு இசைந்து கொடுக்கும் தன்மை
    • mp3வடிவிலுள்ளதை ituneக்கு தரைவிறக்கலாம்

    ஓரு பாடல் பதிந்திருக்கிறேன் பாருங்கள்

















    Wednesday, March 7, 2007

    பைல் சேமிப்பான்



    பல வசதிகளுடன் இந்த பைல் சேமித்து வைத்து மற்றவருடன் பகிரும் தளம் உள்ளது

    • *100% இலவசம்
      வரையறையற்ற பைல் கொள்ளவு வரையறையற்ற தரைவிறக்கம்
      இலகுவான தரைவேற்றம்
      பதிதல் தேவையில்லை