Friday, August 24, 2007

கூகிளில் வானம் பார்ப்போம்


இது வரை பூமியை மட்டும் எங்களுக்கு காட்டிவந்த கூகிள் தற்பொது வானம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாசாவுடன் இணைந்த சேவை என்று குறிப்பிடுகிறது. நட்சத்திர கூட்டங்கள் கிரகங்கள் எல்லாம் நன்றாக தெரிகிறது
அதன் உத்தியோகபூர்வ வீடியோகூகிள் வானத்தை பதிவிறக்க

மேலதிக செய்திகள்பிற்குறிப்பு;-கா.பா.ச சார்பில் வேண்டுகோள் அண்டம் எல்லாம் காட்டும் நீ பக்கத்து பெஞ்ஜில் இருக்கிற பெண்ணின் மனதை பார்க்க எப்போது ஏற்பாடு செய்ய போகிறாய்

Friday, August 17, 2007

youtube வீடியோ தரவிறக்க

http://www.flvix.com/
http://www.vconvert.net/
நீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளங்கள் உதவுகின்றன. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.

Wednesday, August 15, 2007

இலவச sms உலகம் முழுவதற்க்கும்


http://www.mobik.com/
உலகம் முழுவதற்க்கும் smsஐ இலவசமாக அனுப்ப இது உதவுகிறது. நீங்கள் உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நீங்கள் புள்ளிகளை சேகரிக்க முடியும் அந்த புள்ளிகளை வைத்து நீங்கள் அவர்களிடம் உள்ள பொருட்களை வாங்கலாம் என்று கூறுகிறது முயன்றுதான் பாருங்களே!

இந்திய மண்ணே வணக்கம்

இந்தியாவுக்கு வயது 60 வது
ஓய்வு வெறும் வயதிலும்
சீறி யெலும் காளை போல்
கலக்க தொடங்யிருக்கு இப்போதான்

லேட்டா வந்தாலும் லேட்டஸா வளரும் நாடிது
பாரதா மாதா நீ வளரு படு யோரா
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று
தொன்று தொட்டு இன்று மட்டும் நீ காட்டினாய்

ஆன்மீகத்துக்கு ஒரு புத்தன்
அகிம்ஸைக்கு ஒரு காந்தி
அறிவுக்கு ஒரு அப்துல்கலாம்
அர்பணிப்புக்கு ஒரு கோடி...

அனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இன்று அதிகாலை எம் வீடு தட்டி இனிப்பு வழங்கிய அந்த இந்திய சகோதரனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
(புலம் பெயர்ந்தாலும் தம்தேச வழமைகளை அவர்களும் இன்னும் தொடர்வதை கண்டு மகிழ்ச்சி)
புலம் பெயர்ந்து வாழும் இந்தியருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Tuesday, August 14, 2007

hotmail 5GB ஆகியது

hotmail தனது 2Gbயாக இருந்து வந்த தனது இடக் கொள்ளளவை 5GB ஆக உயர்த்துவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இது வரை பிரபல்யமான மின்னஞ்சல்களில் யாகூ AOL ஆகிய வரையறையற்ற இடக் கொள்ளளவையும், ஜீமெயில் கிட்டத்தட்ட 3GBயும் (2.8GB)வழங்குவது யாரும் அறிந்ததே முதலில் 1GB வழங்கி அசத்திய ஜீமெயில் தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது.

மேலதிக விபரம்:-http://www.pcworld.com/article/id,135917-c,email/article.html

Friday, August 10, 2007

நான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பாகம் 2)

அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.
பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்

அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)

சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்


அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம் ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினை
அப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.

அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்

அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள

* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது

* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது

அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்

*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்

*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )

பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)

இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்
ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்

பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்

"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"

Thursday, August 9, 2007

இணையம் அமைக்க இலவச இடம்

இடக்கொள்ளவு -5Gb
bandwidth -15Gb
விளம்பரங்கள் இல்லை
mysql databases -5
full phpmy admin support
ftp access
subdomain (yourname.iifree.net)
உங்கள் டெமைனையும் பாவிக்கலாம்

http://www.iifree.net/

Tuesday, August 7, 2007

ஸ்மைலால்(smilies) அசத்துங்கள்


உங்கள் மின்னஞ்சலிலும் வலைப்பதிவிலும் smilies சேர்க்கவும்

அரட்டை அடிக்கும் போது போ(f)ர் அடித்தால் இந்த தளம் தருகின்ற மென்பொருள் துணை கொண்டு அனிமேசன்கள் ,ஒலிகள் கொண்டு அசத்திடுங்கள்
இது ஒத்திசையக் கூடிய சேவைகள்

MSN, AIM & Yahoo Messengers, Yahoo email, Gmail, Hotmail, Blogs, Forums, and Social Networks