கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது.
இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை
ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
மேலதிக தகவல்கள் அறிய இங்கே போங்கள்
பதிவிறக்க இங்கே செல்லுங்கள்
Thursday, May 10, 2007
Google Earth 4.1 (beta) Released
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் தொழில்நுட்பம்
Thursday, April 19, 2007
skype ஐ மேம்படுத்த
அதாவது ஸ்கைப் மசஞ்சரை எப்படியெல்லாம் மேம்படுத்தி உபயோகிக்கலாம் என்று சில விளக்கம்
http://testing.onlytherightanswers.com/ இது நீங்கள் குறிப்பிட்ட 15 மொழிகளில் கதைப்பதை அந்த 15 மொழிகளுக்கள் மாற்றி மறுமுனையில் உள்ளவரை கேட்கச் செய்யலாம்
http://crazytalk4skype.reallusion.com/ இது அனிமேசன் உருவங்களை காட்டி மற்றவரை கேலி கிண்டல் செய்யலாம்
http://ww2.henok.com:55001/SkypeMuter/ இது ஸ்கைப்பின் மீடியா அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
வகைப்படுத்தல் தொழில்நுட்பம்
Tuesday, April 17, 2007
எப்படி firefox இல் வின்டோ பிளேயரை இயக்குவது
நான் சில காலத்துக்கு முன் இணைய நண்பன் ஆலோசனையின் பேரில் firefox க்கு மாறினேன் சில காலம் பாவித்த பின்புதான் தெரிந்தது தலையிடி அதாவது பிளேயர் எதுவும் அதிலே இயங்கவில்லை இதனால் மனமுடைந்து எக்ஸ்புளொளர் திரும்பினேன் (அதாவது கணணியில் பிளேயர் இருந்தும் அது இல்லாததைப் போல் காட்டிக்கொண்டது) பின்பு அதே நண்பனின் ஆலோசனையில் பிளேயர்களை மீண்டும் intall செய்தால் பிரச்சினை தீரும் என்றார் நானும் real player flash player போன்றவற்றை மீண்டும் install செய்தேன் பின்பு அவை வேலை செய்தன ஆனால் எனக்கு வின்டோஸ் பிளேயரை மீண்டும் install செய்ய விருப்பமில்லை ஏனெனில் அது எனது கணணியுடன் வந்ததுமல்லாமல் வீஸ்டா பதிப்பு என்பதால் அதை செய்யாமல் நிறுத்திவிட்டேன் நீண்ட சிலகால தேடல் மற்றும் கலந்துரையாடல்களின் பின் ஒரு சிறிய Firefox plugin ஐ சேர்த்து இயங்கப் பண்ணலாம் என்பதை அறிந்து கொண்டேன் அதாவது உங்கள் கணணியில் இருக்கும் பிளேயரை மாற்றாது அதை உலாவியுடன் இணைத்துவிடும் முயற்சி முதலில் சில வேளை நீங்கள் இப்படியானதை பயன்படுத்தியிருப்பீர்கள் அப்படியானால் வேறு பிளேயர்களுக்கும் இப்படியான வழி இருந்தால் கூறவும் அடுத்து பயர்பொக்ஸில் சில தளங்களின் எழுத்துரு (தமிழ்) குழம்பி தெரிகிறதே இதற்க்கு என்ன தீர்வு???? தெரிந்தால் கூறுங்கள்
இது வரை உங்கள் பயர்பொக்ஸ் உலாவியில் இப்படியான பிரச்சினை இருந்தால் உடனே அதை நிறுவி பயன்படுத்துங்கள் இது வெறும் 250kb தான்
இங்கே தரவிறக்குங்கள்
சரி உங்களிடம் ஓர் கேள்வி யார் அந்த இணைய நண்பன்
(சரி சிறு க்குளுத்தாரேன் அவர் நெடுக கதைத்த படிதான் இருப்பார்)
பதிந்தது தமிழ்பித்தன் 6 கருத்துக்கள்
வகைப்படுத்தல் தொழில்நுட்பம்
Wednesday, April 11, 2007
உரையாடல்களைப் பதிவுசெய்ய
உரையாடல்களை ஸ்கைப்பில் செய்யும் போது பதிவு செய்ய இம்முறையும் உதவும் அவர்கள் தரும் மேலதிக வசதிகள்
Call Recording to MP3
Skype Call Transfer
Video Recording
Rich Mood Editor
Answering Machine
VideoMail
Mega Emotion Sounds
Auto Chat Reply
Birthday Reminders
Skype Status Change
Chat Recording
Email Forwarding
Contact Personalization
Auto Start Applications
Skype Blogging
Skype Podcasting
http://www.pamela-systems.com/
சரி இனிப்போய் தரவிறக்கி பதிவு செய்கிற வேலையைப் பாருங்கள்
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் இணைய அறிமுகம், தொழில்நுட்பம்
Wednesday, April 4, 2007
உங்கள் கணணியை இந்த டாக்ரிடம் காட்டுங்கள்
உங்கள் கணணியில் என்ன மென் பொருட்கள் இல்லை என்று இவர் சுட்டிக்காட்டுவார் அத்துடன் நீங்கள் விரும்பும் மென் பொருளையும் பதிவேற்றித்தருவார் அல்லது உங்கள் கணணியை அவர் பரிசோதிப்பதை நீங்கள் விரும்பாவிடின் உங்கள் கணணியில் இல்லாததை சென்று பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்
உங்கள் கணணியை இந்த டாக்டரிடம் காட்டுங்கள் (பரிசோதிக்க)
http://www.filehippo.com/updatechecker/
அல்லது இங்கே மருந்து வாங்கி சொந்த மருத்துவம் செய்யுங்கள்(பதிவறக்க)
http://www.filehippo.com
பதிந்தது தமிழ்பித்தன் 3 கருத்துக்கள்
வகைப்படுத்தல் இணைய அறிமுகம், தொழில்நுட்பம்
Friday, March 16, 2007
imeem இல் playlist ஐ எப்படி புளொக்கில் பதிவது
கானா பிரபா அவர்கள் imeem இல் எப்படி playlist ஐ உருவாக்கி புளொக்கில் பதிவது என்று கேட்டிருந்தார் அதற்க்கு பின்னூட்டம் இடாமல் தனிப் பதிவாக போட்டால் விளக்கமாக கூறலாம் என்று தனியாக அமைத்தேன் நீங்கள் பதிந்த பாடலையே அல்லது வீடியோவையோ தெரிவு செய்து listen --add play list என செய்யவும் play list இன் பெயரை கொடுத்து add பண்ணவும் பின் உங்கள் கணக்குக்கு திரும்பி ( refresh செய்வது நல்லம்) பின் listen ஐ click செய்து பின் அதன் கீழ் உள்ள கோடிங்கை உங்கள் புளக்கில் பொருத்தவும்
எனது உதாரண playlist ஐ கீழே பாருங்கள்
முந்தய பதிவு
பதிந்தது தமிழ்பித்தன் 5 கருத்துக்கள்
வகைப்படுத்தல் தொழில்நுட்பம்