Showing posts with label கூகிள். Show all posts
Showing posts with label கூகிள். Show all posts

Friday, November 30, 2007

கூகிளிக்கு இந்த வில்லனால் $110 மில்லியன் நஷ்டாமா?


கூகிளில் என்ற ஒரு "I’m feeling Lucky" ஆப்சன் இருப்பதை அறிந்திருப்பீர்கள். தேடும் போது இதனை பயன்படுத்தினீர்களேயானால் நீங்கள் தேடலின் முடிவுகளுக்கு அழைத்து வரப்படாமல், மாறக சிறந்த பக்கம் என்று கருதப்படுகின்ற ஒரு பக்கத்துக்கு அழைத்து வரப்படுகிறீர்கள். இது நேரத்தை மிச்சப்பத்துவதில் நன்றாக உதவி செய்வதாக கூறி நம்மள மாதிரி பெரிய புள்ளிகள் (ஹி..ஹி) இதைத்தானாம் பாவிக்கினம். அதனால், கூகிளுக்கு அந்த தேடல்களுக்கான விளம்பரம் இட முடியாமல் இருக்கிறதாம். இதனால்தானாம் வருடத்துக்கு $110 மில்லியன் நஷ்டம் ஏற்படுகிறதாம். யாரோ கேட்டாங்களாம் "ஏன் நஷ்டம் என்று தெரிந்தும் அதை வைத்திருக்கிறீர்கள் அதை தூக்கலாம் தானே?" என்று, அதற்க்கு அவர்கள் "எங்களுக்கு கரன்சி பெரிதில்லை கஸ்டமர் தான் பெரிது" என்று அடித்துச் சொல்லி விட்டார்களாம்
தல தல தான்

மேலதிக செய்தி்- tech -bu
zz

Monday, November 5, 2007

கூகிளின் கணணியும் அதன் இயங்குதளமும் இப்போது கடைகளில்


கூகிள் தனது ஓப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய கணணியை விற்பனைக்கு விட்டிருக்கிறது இதன் ஆரம்ப விலை 199$ எனவும் தெரிகிறது. இவை தற்போது வால்மாட் கடைகளில் கிடைக்க கூடியதாக இருக்கிறது
அதன் உத்யோக பூர்வ தளம்
http://www.thinkgos.com/



gOS Operating System
VIA C7-D 1.5GHZ Processor
512MB RAM, 80GB HD, CDRW/DVD

என அம்சங்களை கொண்ட இது கணணியின் பரம்பலை அதிக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதாவது இதன் மூலம்
Ubuntu 7.10 Linux system ஐ சில மாற்றங்கள் செய்து GOS ஆகவும்
OpenOffice.org 2.2 ம் காணப்படுகிறது


அதைத்தவிர ஜீம்ப்(gimp), ஸ்கைப்(skype) dvd burner போன்றனவும் இதனுடனே வருகிறதாம் அதாவது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற ஒரு வீட்டுப்பாவனை கணணி என்றால் அது இதுதான்
ஓசி மென் பொருட்களை திரட்டி இதமாக வழங்கியிருக்கிறது கூகிள்
பிழைக்கத் தெரிந்தவன்!
மேலதிக விபரம்;- inside google

Sunday, November 4, 2007

கூகிள் வீடியோவின் புதிய வசதி!


http://video.google.ca/
கூகிள் வீடியோ இப்போது எங்கிருந்தாலும் தேடித்தருகின்ற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் படி கூகிள் தனது தளத்தையும் தாண்டி எங்கிருந்தாலும் எடுத்து உங்கள் தேடலுக்கு தருகிறது அது சாதாரண மன்றத்தில் ஓர் மூலையில் இருந்தால் கூட அதை தேடி தர வரிசைப்படுத்துகிறது. இது தேடி தனது தளத்தில் இயக்குவதை தவிர்த்து அதற்க்கான இணைப்பை தருகிறது. ஏனெனில் இதனால் ஏற்படும் சட்ட சிக்கலை தவர்ப்பதற்காக எனக் கூறுகிறது. AVI, WMV, MOV or MPEG or FLV ஆகிய வகைக் கோப்புக்களை இது இனம் காணும் எனக் கூறுகிறது.
மேலதிக இணைப்பு;- இங்கே

நான் தேடிய இணைப்புக்கு கிடைத்த முடிவுகள் - இங்கே

Tuesday, October 30, 2007

flash news;-கூகிளின் போன் ரெடி! இன்னும் சில தினங்களுக்குள் வெளிவரலாம்!


கூகிளின் போனுக்கான மென்பொருள் விசேடமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விடுவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இன்னும் ஓர் சில நாட்களுக்குள் வெளிவரலாம் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக சிறப்பான முறையில் போன் வடிவமைக்க Taiwan's HTC, South Korea's LG Electronics ஆகிய கம்பனிகளுடன் ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் மூலம் search, maps, Gmail, calendar, and RSS reader tools youtube voip ஆகியவற்றை இலகுவாக
கையாளலாம்.
இதன் வசதிகள் பெறக்கூடிய சேவை நிறுவனங்களாக AG's T-Mobile USA, France Telecom's Orange SA and Hutchison Whampoa Ltd.'s 3 U.K., ஆகியன காணப்படுகின்றன.
மேலும் இது பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் விரிவான முறையில்...

Tuesday, October 9, 2007

கூகிளின் rapid share தேடி!



rapidshare

அனைவeரும் rapidshare ல் பைகள் தரவிறக்குவது வழமை ஆனால் அதை பதிவேற்றியவரே உங்களுக்கு இணைப்பை தந்தாலே ஒழிய! மற்றும்படி நீங்கள் தரவிறக்க முடியாது ஆனால் இந்த தளம் நீங்கள் விரும்பும் பைலை தேடி தருகிறது! தேடலும்! அசத்தலாக இருக்கிறது.
தளத்துக்கு கீழே பாருங்கள்
© 2007 Rapidshare1.com Powered by google
என்று இருக்கிறது என்ன உல்டா நடக்கதோ தெரியலை ஆனால் நல்ல தேடி

நான் sivaji எனத் தேடிய போது கிடைத்தவை

Saturday, October 6, 2007

கூகிளின் அட்சென்ஸின் பணம் இப்போது வேஸ்ரேன் யூனியன் ஊடாக.



கூகிளின் அட்சென்ஸின் பணத்தை இப்போது வேஸ்ரேன் யூனியன் ஊடாகவும் இப்போது பெற முடியும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு இரண்டு நிறுவனங்களும் சில தினங்களுக்கு முன் வந்தன.
ஆனாலும் எல்லா நாடுகளும் இச்சேவை பெற முடியாது குறிப்பிட்ட சில நாடுகளே பெற முடியும் என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இது ஒரு பரீச்சார்த்த நிகழ்வாக பார்க்கலாம் வெகுவிரைவில் மற்ற நாடுகள் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளும் இடம் பெறலாம்.

இதனால்,

  • பணதத்திற்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் ((நீங்கள் உங்கள் காசோலை வருது வருது என்று தபால் காரனை துரத்த தேவையில்லை))
  • வங்கிக்கான காசோலை மாற்று கட்டணம் மீதமாகும்
  • இது முற்றிலும் இலவச சேவையாம் (உங்கள் கணக்கிலிருந்து ஒரு பைசா கூட இச்சேவைக்காக கழிக்க படமாட்டாதாம்.

தற்போது இச்சேவையை பெறக்கூடிய நாடுகள்
  • China
  • Malaysia
  • Pakistan
  • Romania
  • Philippines
  • Argentina
  • Chile
  • Peru
  • Colombia

பார்க்க:- google adsence

Wednesday, October 3, 2007

கூகிளின் மொழி மாற்றியை நம்பலாமா?

ஒரு மொழிமாற்றியானால் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றி விட்டு பின் அதையே மீண்டும் முந்தைய மொழிக்கு மாற்றும் போது மாறாமல் இருக்க வேண்டும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள். எதையும் எதையும் கூகிள் தொடர்பு படுத்துகின்ற தென்று....

Friday, August 24, 2007

கூகிளில் வானம் பார்ப்போம்


இது வரை பூமியை மட்டும் எங்களுக்கு காட்டிவந்த கூகிள் தற்பொது வானம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாசாவுடன் இணைந்த சேவை என்று குறிப்பிடுகிறது. நட்சத்திர கூட்டங்கள் கிரகங்கள் எல்லாம் நன்றாக தெரிகிறது
அதன் உத்தியோகபூர்வ வீடியோ







கூகிள் வானத்தை பதிவிறக்க

மேலதிக செய்திகள்



பிற்குறிப்பு;-கா.பா.ச சார்பில் வேண்டுகோள் அண்டம் எல்லாம் காட்டும் நீ பக்கத்து பெஞ்ஜில் இருக்கிற பெண்ணின் மனதை பார்க்க எப்போது ஏற்பாடு செய்ய போகிறாய்