Friday, August 10, 2007

நான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பாகம் 2)

அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.
பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்

அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)

சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்


அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம் ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினை
அப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.

அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்

அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள

* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது

* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது

அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்

*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்

*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )

பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)

இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்
ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்

பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்

"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"

18 கருத்துக்கள்:

Anonymous said...

அதென்ன " பேந்து?" ? எழுதுகின்றபோது அனைவருக்கும் புரியும் சொற்களைப் பயன்படுத்துங்கள். இலங்கைத் தமிழில், அதுவும் வழக்கிறந்து செல்லும் சொற்களைத் தவிருங்கள். நல்ல எழுத்தாற்றல் உண்டு.

வாழ்த்துக்கள்!!!

ஒரு ஈழத் தமிழன்

வவ்வால் said...

அய்யா சாமி... இதெல்லாம் தங்களுக்கே ஓவெரா தெரியலை ... இதுக்கு வேற நீலப்படம் பார்த்தேனு தலைப்பு தமிழ் நாட்டுல 10 வயசு பையன் கூட உங்கலை பார்த்தால் சிரிபானுங்க!

ஆனாலும் அதை நீங்கள் சொன்ன விதம் அருமை! அதுவும் அந்த கீறும் கட்டம் :-))

தஞ்சாவூரான் said...

ஹ்ம்ம்... நல்ல அனுபவந்தான்... நான் முதன்முதலில் நீலப்படம் பாத்துட்டு 2 நாள் ஜுரம் வந்து படுக்கையில் கிடந்தது ஞாபகம் வருது... :)

தமிழ்பித்தன் said...

அனாமி அண்ணா எழுதும் போது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் போல கிடக்கு "பேந்து"என்றால் பிற்பாடு பிறகு அதனை தொடர்ந்து என பொருள் படும் பேச்சுவழக்கில் யாழ்பாணத்தில் வழங்கப்படும் ஒரு சொல்

இளவஞ்சி said...

// அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் //

அது! :)))

சுவாரசியமாக சொல்லியிருக்கீங்க!

Anonymous said...

u r from vvt?

தமிழ்பித்தன் said...

///தஞ்சாவூரான் said...
ஹ்ம்ம்... நல்ல அனுபவந்தான்... நான் முதன்முதலில் நீலப்படம் பாத்துட்டு 2 நாள் ஜுரம் வந்து படுக்கையில் கிடந்தது ஞாபகம் வருது... :) ////


பின்ன அந்த நேரத்தில் நேரே பாரத்திருந்தால் நேரடியா பிறசர்தான் எண்டு சொல்லுங்கோ

Anonymous said...

That's a word very commonly used in colloquial Sri Lankan Tamil. People should learn not to be too righteous, or push their views and opinions down other people's throat. If one is not familiar with a word that millions are familiar with, they should ask around and find out. There are innumerous errors found in Tamil spoken by Indian Tamils. Only Indian Tamils insist on writing things like the English names of months in Tamil and claim it's Tamil. For the record, Sri Lankan Tamils speak far better Tamil than Indian Tamils. "Penthu" is not an erronous word. It is quite familiar to many. One should clean their own dirt and try to point fingers. Please do some research.


Annoyed by the self righteous.

தமிழ்பித்தன் said...

வவ்வால் மற்றும் இளவஞ்சிக்கு நன்றிகள்

கொண்டோடி said...

பேந்து எண்டதைத் தவிர்க்கச் சொன்ன 'ஒரு ஈழத் தமிழன்' அவர்களின்ர கருத்தை யாரும் பெரிசா எடுக்கத் தேவையில்லை.
(ஐயா, முதலில உம்மட பேரே இலக்கணத்தை மீறித்தான் இருக்கு. அதைத் திருத்தும்.)
அதுசரி, உந்தச் சொல் வழக்கொழிஞ்சு போகுதெண்டு எவன் சொன்னது?

ஆகவே தமிழ்ப்பித்தன், உப்பிடி வட்டார வழக்கை மறைச்சு 'எல்லாருக்கும்' விளங்கிற மாதிரி எழுதிறதெண்டது தேவையில்லாதது. விளங்காதவன், பின்னூட்டத்தில விளக்கம் கேட்டு அறிஞ்சு கொள்ளவேணும். இப்பெல்லாம் 'விளங்கிற மாதிரி', 'பொதுவான மொழி' எண்டு சொல்லப்படுறதெல்லாம், அதைச் சொல்லிறவையின்ர மொழியைத்தான் குறிக்குது. அதாவது தங்கட மொழியில எழுதுங்கோ எண்டு வற்புறுத்திறதுதான் நடக்குது.

உந்தச் சேட்டையள் சரிவராது கண்டியளோ? அவனவன் அரைகுறைத் தமிழைவைச்சு நூறு பதிவு போவான், கண்டுகொள்ள மாட்டினம். வட்டார வழக்கை எழுதினால் வந்திடுவினம்.

____________________
ஒரு திருத்தம்.
அது தினமலர் இல்லையப்பு, தினமுரசு. தினமலரில ஈழத்தவருக்கு அப்பிடியென்ன காழ்ப்பு எண்டு ஆராவது கேக்க முதல் திருத்திப்போடும்.

கொண்டோடி said...

திருப்பவும் அந்த 'ஒரு ஈழத் தமிழனுக்கு'

அதுசரி, என்ன கோதாரிக்கு உந்தப் பேர்? சும்மா ஒரு பேரைச் சொல்லிறதுக்கும் உப்பிடியொரு பேரைச் சொல்லிறதுக்கும் வித்தியாசம் இருக்கு கண்டியளோ? உந்தப் பேரூடாகச் சொல்லப்படுற கருத்துக்கள் ஒட்டுமொத்த ஈழத்தவரின் கருத்தாக அடையாளப்படுத்தப்படுற 'உணர்வுநிலை' ஒண்டு இருக்கு.

எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிக்காத, 'ஐயோ பாவம்' எண்டு மற்றாக்கள் பரிதாபப்படுற ஒரு நிலையை, கழிவிரக்கத்தை ஏற்படுத்துவது போன்ற மூன்றாம் தர உத்தியொன்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பெயராகவே இந்த 'ஒரு ஈழத் தமிழன்' எண்டது எனக்குத் தெரியுது.

உதுகளை விட்டிட்டு சுப்பனோ குப்பனோ சும்மா ஒரு பேரை வைச்சுக்கொண்டு வந்து பின்னூட்டங்கள் போடுங்கோ. அதுதான் எல்லாருக்கும் நல்லது.

தமிழ்பித்தன் said...

நல்லகாலம் பிழையை கண்டு பிடித்து சொல்லீட்டியள் இல்லாட்டி இதுக்கும் தனிப்பதிவாக போட்டு கும்மி கூத்தடிச்சிருப்பாங்கள்
நன்றி கொண்டோடி
"ப்" வை காணவில்லை என்று கவலைப்படாதேங்கோ நான் தெரிந்துதான் பாவிப்பது கிடையாது

Anonymous said...

கொப்பர், கோச்சியாணை உன்னை மோனை திட்ட வரயில்லை.
பொது வழக்கு நல்லது. உதுகளை விளங்காமல் சில அரைகுறைகள் என்னைப் பற்றி கேவலமாக பறையுதுகள்.

ஒரு ஈழத் தமிழன்

கானா பிரபா said...

தமிழ் (ப்) பித்தா

டைட்டானிக்கில் வரும் சின்னக் கட்டத்துக்கே உந்த அமளியெல்லாம்?

கலக்கலாச் சொல்லியிருக்கிறீர். அது சரி, இப்ப ஏதாவது உப்பிடிப் படம் அம்பிட்டதோ? ;_0

கொண்டோடி said...

//"ப்" வை காணவில்லை என்று கவலைப்படாதேங்கோ நான் தெரிந்துதான் பாவிப்பது கிடையாது//

நான் அதைச் சொல்லேல தம்பி. நான் சொன்னது 'ஒரு ஈழத் தமிழன்' எண்டவருக்கு.

நிற்க, நீர் புரட்சியாளனாகீட்டீர், தெரிந்தேதான் பாவிக்காமல் விட்டதன் ஊடாக.

தமிழ்பித்தன் said...

கானபிரபா அண்ணை
என்னதான் விஸ்கியை கொண்டு வந்து முன்னுக்கு வைத்தாலும். அந்த நேரம் சுட்ட கருவாட்டோட காப்போத்தல் கள்ளை பாடசாலைக்கு தெரியாமல் அரை நேரத்தோட ஓடி பனங்கூடலுக்குள் அமைத்த பரனில் இருந்து அடிப்போமே அதிலிருக்கும் கிக்கு வருமோ இதில

அது போலத்தான் இதுவும்

தமிழ்பித்தன் said...

பிற்குறிப்பு- நல்ல படம் ஏதும் அம்பிட்டால் அனுப்புங்கோ

கொழுவி said...

//பிற்குறிப்பு- நல்ல படம் ஏதும் அம்பிட்டால் அனுப்புங்கோ//

கானா பிரபா தான் ராசா மலையாளப் படங்களை பாத்து விமர்சனம் எழுதுறவர். அவரத் தான் பிடியும்.