Tuesday, July 17, 2007

பின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்

///.. சும்மா உம்மடை பக்கத்துக்கு ஆள் பிடிக்கிறதுக்காக கண்ட நிண்டதுகளையும் போட வேணாம் சரியோ.. ///

பல பின்னூட்டங்கள் என்னை மனசங்கடத்தில் தள்ளியது என்பதில் சந்தேகம் இல்லை சிலதை அழித்த பிறகு மட்டறுக்கும் முடிவை அப்படிசெய்த பின்பு வந்த பலதை பிரசுரிக்க வில்லை என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சாதாரனமாக சீண்டும் தன்னைமை கொண்ட ஒன்றை இங்கே அனுமதித்திருக்கிறேன்

தயவுசெய்து அபாண்டமான வார்த்தைகளை பாவிக்காதீர்கள் இயந்திரம் போல் ஓடும் இந்த உலகில் தமிழ் மீது கொண்ட சிறிது பற்றாலும் தமிழ்ழோடு சிறிது நேரமாவதாவது செலவிட வேண்டும் என்ற ஒரு ஆசையாலும் நாங்கள் இணையத்தில் எழுத வாசிக்க வருகிறோம்

நான் படித்த கனவான்களோ அல்லது இத்துறையில் பெரியஅனுபவம் பெற்ற பாண்டித்தியம் கொண்டவர்களோஅல்ல சற்று தகவல்தொழில் நுட்பத்தில்(IT) ஈடுபாடுமட்டுமே இருக்கிறது எனது தேடலில் கிடைக்கின்ற தகவலை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன். அதில் விளக்கம் காணது என்றபோது அதில் பின்னூட்டமிடுங்கள் அதை எங்கிருந்து தகவல்எடுத்தேனே அங்கே கேட்டு பதில் கிடைத்தால் மறுமொழி இடுவேன் அல்லது அப்படியே இருந்து விடும்.

நான் எழுதுமிடம் பொது நூலகம் இணையத்தின் முலம் அவர்கள் உலாவுவதை தவிர வேறு எதற்கும் அனுமதிப்பதில்லை. நான் இயன்றளவு பின்னூட்டங்களுக்கு பதில் தர விளைகிறேன் ஆனாலும் எனக்கு கால அவகாசம் என்பது முக்கியம் ""சுடுகுது மடியை பிடி"" என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு அப்படி இல்லாமல் நிதானமாக அவசியப்படும் கேள்விகளை கேளுங்கள் முயல்கிறேன்.

முதலில் நீங்களே முயற்சி செய்யுங்கள் தெரியாதவிடின் கேள்வி கேளுங்கள் அவை பற்றி தெரிந்த ஏனைய நண்பர்கள் பதில் தருவார்கள் இல்லைஎனின் நான் பதிலுக்கு முயற்சி செய்கிறேன்

சில இலட்சங்களை மாத வருவாய்பெறுகிறவர்கள அல்ல சாதரணமாக புலம் பெயர்தல் என்னும் ஆற்றினுள் தெரியாமல் தவறிவிழுந்து கரையேற முடியாமல் தவிக்கும் களிமண் பொம்மைகள் தலையிலோ பெரும் சுமை மனதிலே நம்பிக்கை இவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்னிடம் என்றோ ஒருநாள் கரையேறுவோமா...? அல்லது ஆற்றுடன் கரைந்து காணமல் போவோமா தெரியாது ஆனாலும் மனதில் உறுதி..

10 கருத்துக்கள்:

மின்னுது மின்னல் said...

///.. சும்மா உம்மடை பக்கத்துக்கு ஆள் பிடிக்கிறதுக்காக கண்ட நிண்டதுகளையும் போட வேணாம் சரியோ.. ///

இந்த பின்னுட்டம் நான் போடவில்லை

மின்னுது மின்னல் said...

நான் முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை..

தமிழ்பித்தன் said...

நான் யாரையும் குறிப்பிடவில்லை மின்னல்

Anonymous said...

अछ्छा ख्बर् है.

வடுவூர் குமார் said...

பாருங்க!! நீங்க ரீல் விடுகிறீர்கள் என்று ஹிந்தியில் யாரோ பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்.
"கப்சா" தானே அது?
இந்த பிரச்சனை உங்களுக்குமா?

தமிழ்பித்தன் said...

ஓ அதற்க்கு அதா அர்த்தம் எனக்குபுரியலை ஆமா கப்சா என்றால் என்ன

Radha Sriram said...

//अछ्छा ख्बर् है.//

"அச்சா கபர் ஹெ" ன்னு தானே எழுதியிருக்காங்க??

அப்படின்னா நல்ல செய்தின்னு தான் அர்த்தம்.....
மன வருத்தப் படாதீங்க...:):)

இளவஞ்சி said...

தமிழ்பித்தன்,

உங்களுக்கு பின்னூட்டம் போட்டு மனதை நோகடிக்கறவங்களை விட படிச்சிட்டு மேட்டரை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா போகற என்னை மாதிரி வாசகர்கள் தான் அதிகம்!

அதனால வருந்தம் கலைந்து கடைமையை செய்யுங்கள்! :)))

தமிழ்பித்தன் said...

இளவஞ்சி

உங்கள் ஆறுதல் நிறைந்த வார்த்தைகளுக்கு நன்றி அதே நேரம் நான் பின்னூட்டங்களுக்காக ஏங்குபவன் அல்ல அறிந்ததை சொல்கிறேன் அதில் கருத்திடுவதற்க்கு எதுவுமே இருப்பதில்லையே ஆகவே எனது பதிவுகளுக்கு கருத்து என்பது முக்கிமல்ல அவற்றை புரிகின்ற தன்மையே அவசியம் ஒரு நீச்சல் கற்பிப்பவன் நீச்சலையே கற்பிக்கமுடியும் சுழியேடுவதை பின்னர் நீங்களாக தான் கற்க வேண்டும் அது போல இருக்கும் தளங்களை செய்திகளை நான் இயன்றளவு விரிவாக தருகிறேன் அதில் ஈடுபாடு இருப்பவர்கள் தொடர்ந்து விரிவாக பின்னூடமாகவோ அல்லது உங்கள் தளத்தில் ஒரு பதிவாகவோ போடலாம் அதை விடுத்து ஒரு தளத்தை நன்றாக அலசி ஆராய்ந்து அதன் போடு என்னால் மாதத்தில் ஒரு பதிவு போடுவதே சந்தேகம்
அடுத்து பின்னூட்டமிட்டவர் கூறியது பொல நான் ஆக்களை கவர்வதற்காக தான் செய்கிறேன் என வைத்துக் கொள்வோம் நான் ஆக்களை பிடித்து என்ன செய்வது இங்கே என்ன மார்க்கெட்டிங்கா நடக்குது அல்லது மற்றவர்கள்போல் விளம்பரம் ஏதும் இருக்கிறதா என் தளத்தில் சொல்லுங்கள் ?...

அவர்களின் ஆப்பு பலிக்காது நமக்கு..அனானி பின்னூட்டம் இட்டவருக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்

Anonymous said...

//அனானி பின்னூட்டம் இட்டவருக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்//

ஆம் விளங்கி விட்டது.

அதே அனானி