யாழ்பாணத்தில் 90 களின் ஆரம்ப பகுதியில் யுத்தத்தின் தாக்கத்தால் வறுமை என்பது மக்களை பிடித்து ஆட்டியது. அக்காலபகுதியில் அரச உத்தியோகத்தாரும் நிலபுல உரிமையாளர்களும் ஏனோ வெளிநாட்டு பயணங்களை ஏனோ புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த நேரம் வெளிநாட்டில் தந்தை தமையன் உள்ளவர்கள் மிக ஆடம்பரமாக திரிவார்கள். எங்களுக்கு எல்லாம் தீபாவளி புது உடுப்பே பாடசாலையில் தந்த வெள்ளை சேட்டும் நீல காட்சட்டையும் தான். அப்பாவுக்கு கொடுத்த பொலீஸ் துணியில் வீட்டுக்கு போட காட்சட்டை மற்றும் பாடசாலை பை தைத்து அம்மா தருவார்.
அண்ணா அக்காக்களுக்கு புது கொப்பியும் அவர்கள் பாவித்த கொப்பியில் மிஞ்சிய பேப்பரைக் கொண்டு கட்டிய கொப்பிதான் எங்களுக்கு
அந்த காலத்தில் எல்லாம் பாலுக்கு சீனி போடுவது கிடையாது. காரணம் சீனி அவ்வளவு விலை ஆனாலும் விருந்தினர் வரும்போதல்லாம் அவர்களுக்கு சீனி சேர்த்த பால் வழங்கப்படும். "நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே புசியுமாம்" அதுபோல அவர்களுடன் சேர்த்து எங்களுக்கும் பாலுக்கு சீனி சேர்த்து வழங்குவார். அதனால் வீட்டுக்கு யாராவது வந்தால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்.
92 அல்லது 93 காலப்பகுதியிருக்கும் தேங்காய் 100 150 விற்றுக் கொண்டிருக்கிறது அக்காலம் பார்த்து எனக்கும் செங்கன்மாரி காய்ச்சல் வந்தது டாக்டர் இளநீர் நல்லா கொடுங்கோ என்று கூறிவிட்டார். அப்பா இளநீ வாங்க அலைந்து விட்டு ஒரு இளநீயோடு வந்தார். ஒன்றா வாங்கி வந்தீர்கள் என ஏக்கத்துடன் கேட்கிறேன். அதற்க்கு அப்பா வாயிலிருந்து பதில் வரவில்லை கண்களில் கண்ணீர் மட்டும் கசிகிறது. அம்மாவை கூப்பிட்டு 60 ரூபாவுக்கு குறைய இளநி இல்லையாம் என்றார் . அதன் தாக்கம் சில வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மைய மேம்பாட்டுக்கழகம் மானிய விலையில் வழங்கிய தென்னையை வாங்கி வீடு சுற்றிலும் நட்டுடோம். தறபோது 45 மேலே இருக்கிறது
பல இளைஞர்கள் வெளிநாடு வருவதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் இளமையில் அனுபவித்த வறுமையோமீண்டும்; ஒரு வறுமையை தாங்களோ தங்கள் குடும்பமோ அனுபவிக்க கூடாது என்ற ஒரு வைராக்கியம் அவர்கள் மனதில்.....
"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது"
Thursday, July 26, 2007
நினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
உயிரை கொல்லும் ஆயுதங்கள் உருத்தெரியாமல் போகட்டும் ரத்தங்கள் குடித்த போர்கள் பழங்கதை ஆகட்டும் நாளை பிறக்கும் குழந்தைகள் வறுமையின்றி வாழட்டும் நெல்லுக்கு மட்டுமல்ல புல்லுக்கும் தனியாய் நீர் கிடைக்கட்டும் ஒரே ஆத்மாவிலிருந்து வந்தவனே உன் சகோதரனின் சதையை நீயே உண்ணலாமா? மாற்றம் ஒன்று தான் மாறாததாமே.. நல்ல மாற்றம் வரட்டும் அந்த மாற்றம் மேன்மேலும் நல்லவைக்காக மட்டும் மாறட்டும் - சீனி இல்லாமல் பால் குடித்தது விருந்தினருக்கு சீனி போட்டு கொடுப்பது - சம்பவங்கள் இதயத்தில் கனக்கின்றது- போரின்றி சமாதானமாக வாழவே முடியாதா?- நாகூர் இஸ்மாயில்
நன்றி இஸ்மாயில் எப்பொழுது இந்த பூமியில் யுத்தம் ஓய்கிறதோ அன்றே வறுமையும் அதனுடனே சென்றுவிடும்
Post a Comment