Tuesday, April 10, 2007

சயந்தன் சோமி ரகசியம் என்ன?

ஆமாம் எல்லோரையும் எதிர்பார்ப்புக்குள்தள்ளிய பதிவு இதோ இங்கே பெரிதாக ஒன்றும் பொரிதாக செய்வதற்க்கு இல்லை தமிழனே அதை சொல்லித்தராத போது ஒடியந்து உதவிய அனைத்து ஆங்கில வலைநண்பர்களுக்கும் நன்றி இது பற்றி அறிந்து கொள்ள நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் 78 வந்த பதில்கள் 62 கைவசம் உள்ள இது தொடர்பான திட்டங்கள் 9
தேவையானவை
ஒலிவாங்கி(மைக்)-USB யூடானது சிறந்ததாம்
மற்றும் ஸ்கைப் தூதுவன் இவையிருந்தால் நீங்களும் சம்பாசனை செய்யலாம் இல்லாவிட்டால் பதிவிறக்க http://www.skype.com/intl/en/download/skype/windows/http://www.prettymay.net/download.htm
மேலே உள்ள தளத்துக்குச் சென்று PrettyMay Voice Plugin for Skype Download என்பதை தரவிறக்கி நிறுவீக்கொள்ளுங்கள் பின் உங்கள் நண்பனை ஸ்கைப் மூலம் அழைத்து சம்பாசனை செய்ய ஆரம்பியுங்ககள் ஆரம்பிக்கும் போது அது பதியவா என்று கேட்கும் அனுமதி வழங்குங்கள் அது பதிவு செய்யும் பின் அதை உங்கள் கணணிக்கு பதிவிறக்கி கேளுங்கள் அது stereo முறையில் இருப்பதைக் காணலாம் பின் அதை ஏதாவது ஓடியோ எடிட்டர் மூலம் அதை mono வுக்கு மாற்றுங்கள்
நல்ல தொரு சம்பாசனையை எதிர்பார்க்கிறேன்(எனது எதிர்வு கூறல் பிழைத்து விட்டது நான் நினைத்தது சொதிக்குப் பிறகு புட்டெண்டுதான் ஆனால் ஆணமாம் அதைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து ஐநா சபைக்கு அறிக்கை சமர்பிக்க போகிறார்களாமாமே அதைப் பதிவேற்றியது சயந்தன் அல்ல தக்க தக்க அக்கா ஹி..ஹி )

கீழே உள்ள எனது உரையாடலை கேளுங்கள் இது பரிச்சார்த்தம்தான் வெகு விரைவில் அறிவியல் சார்ந்த உரையாடலை எதிர்பார்க்கலாம் (நேற்றே பதிந்தது பதிவேற்றிப்பார்த்தேன் முடியவில்லை பின் மற்றதை பதிவேற்றிவிட்டு பதிந்து விட்டேன் இப்பொது அதை போடுகிறென்

11 கருத்துக்கள்:

கானா பிரபா said...

பதிவின் தலைப்பைப் பார்த்துப் பயந்து போனன்

வசந்தன்(Vasanthan) said...

//வெகு விரைவில் அறிவியல் சார்ந்த உரையாடலை எதிர்பார்க்கலாம் //

அப்பிடிப் போடுங்கண்ணை!

வழமையாக ஒலிப்பதிவு போடுறவங்களைப் போல சும்மா அலட்டாமல் உலகத்துக்குப் பயன்பாடான கருத்துக்களையும் ஒலிப்பதிவுகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறம்.
தமிழன்ர குணம் தெரியும்தானே? ஒண்டும் சொல்லித்தரமாட்டான். ஏதோ நீங்கள் தமிழனில்லையெண்டபடியா எங்களுக்கு நிறைய விசயங்கள் படிக்கக் கிடைக்குது.
;-)

கானா பிரபா said...

நீங்கள் கடந்த பதிவில ரஜனி ரசிகர் எண்டு சொன்னதாலை, இந்த வெற்றியை நாம் கொண்டாட சில பஞ்ச் டயலாக்

1. ஆண்டவன் சயந்தனாட்களுக்கு நிறையக் கொடுப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்.
ஆனா யாழ்ப்பிரியனை கைவிட மாட்டான்.
2. யாழ்ப்பிரியன் வழி ஸ்கைப் வழி
3. நீங்கள் ஒரு தடவை ஒலிப்பதிவு போட்டால் நூறு தடவை போட்டமாதிரி
4. ஆண்டவன் சொல்றான் நீங்கள் (எங்களை) முடிக்கிறியள்

மீண்டும் சொல்லிக்கொள்கிறோம் சாரல் குழுவின் பாசிசச் செயல்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு எம் தார்மீக ஆதரவைத் தருகிறோம்.

தமிழ்பித்தன் said...

வசந்தன் கட்டாயம் ஒரு தொடர் போல செய்ய இருக்கிறம்

/////ஏதோ நீங்கள் தமிழனில்லையெண்டபடியா எங்களுக்கு நிறைய விசயங்கள் படிக்கக் கிடைக்குது/// இதென்ன புதுக்கதை சொல்லுறியள் நான் எல்லாம் தமிழ்சிங்கம் என்றெல்லொ நினைத்தேன் எதுக்கும் இதையும் அடுத்த முறை ஒர் ஒலிப்பதிவாப் போடுங்கோ தலைப்பு தமிழ்பித்தன் தமிழன் இல்லையா இதை உங்கள் மற்றவர்களிடமும் கொடுத்து விரைவில் ஓர் ஒலிப்பதிவை வேளிவிடுங்கோ நல்ல கலக்சன் ஆகும் (பின்னூட்டத்தைச் சொன்னேன்)

கான பிரபா அப்படியெல்லாம் பயப்படக் கூடாது என்ன என்ன உங்களுக்கும் நெருப்பண்டாலும் பயம் நீர் எண்டாலும் பயம் என்ர கதிரமலையானே///// நீர் இந்த ரகத்தைச் சேர்ந்த நீரோ சும்மா காமடி பண்ணுறன் கோபிக்காதேங்கோ

தமிழ்பித்தன் said...

நான் நிறைய வைத்திருக்கிறன்
1)தமிழ் பித்தன் ஒருதடவை சொன்னால் 5 தடவை சொன்னமாதிரி (மைக் சரியில்லைத்தானே)
வாசகர்கள் சொல்கிறார்கள் தமிழ்பித்தன் செய்கிறான்
இது எப்படியிருக்கு கண்ணா என் வழி என்றுமே உங்கள் வழி
தமிழ் வலைப்பதிவுக்கு ஒன்றென்றால் தமிழ்பித்தன் சும்மமாயிருக்கமாட்டான் (சிவாஜி பட வசனமாம்)

நான் கலங்கிநின்றால் தமிழ் வலைப்பதிவுகளிடம் சென்று முறையிடுவேன் தமிழ் வலைப்பதிவும் கலைங்கிநின்றால் கூகிளிடம் முறைடுவேன் கூகிளே கலங்கிநின்றால் அந்தத்த தெய்வத்துக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்
இது சிவாஜ வசனம்

சினேகிதி said...

test

சயந்தன் said...

//இல்லை தமிழனே அதை சொல்லித்தராத போது //

ஐயா.. தேவையற்றுப் பாட்டுப் போட வைக்கிறீர். voip ஊடாகப் பேசி அது பதிவு செய்யப்படுகிறது எனச் சொன்ன பிறகும் சும்மா சும்மா பெயருக்கு ஏற்றது போல செயற்படக் கூடாது.
தவிர தெளிவு இருக்கிறது முன்பை விட.

Anonymous said...

என்ன கோமணம் கழண்டு போச்சுதா
shame shame bubby shame

Anonymous said...

சும்மா... புட்டு,காகம்,சொதி,ஆணம் எண்டு என்னத்துக்கட்டப்பா அலட்டிக் கொண்டிருக்கிறியள்.
திரும்ப திரும்பச் செல்லில அடிக்கிறமாரி
வலிக்கப்போகுது அழப்போகுது...

Anonymous said...

//இது பற்றி அறிந்து கொள்ள நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் 78 வந்த பதில்கள் 62 //

நான் நினைக்கிறேன்.. பதில் போடாத மிகுதி 16 நண்பர்களும் ஆங்கிலப் பெயர்களுடன் உலவும் தமிழர்கள். நான் சொல்வது சரிதானே..

தமிழ்பித்தன் said...

நல்லா கணக்குப் பார்கிறியள் அனாமி அடுத்த பட்யட்டுக்கு கணிப்பான் பிழைத்தால் உம்மைத்தான் கூப்பிடுவார்கள்