///வடுவூர் குமார் said...
திட்ட- மன்னிக்கவும், சொல்ல இப்போது மைக் இல்லை.///
இதை வைத்து யோசித்த போது ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் எத்தனை பேர் கணிணி(கம்பியூட்டர்) பாவிப்பார்கள் அவர்களிடமிருந்து எவ்வாறு குரல் வழிக்கருத்தை பெறுவது என்று யோசித்தேன் ஏனென்றால் வடுவூர் குமார் தினம் எனக்கு கருத்து இடுபவர்களில் ஒருவர் அவரின் ஆதங்கத்தை தீர்க்க வேண்டியது தமிழ்பித்தனின் பொறுப்பு என நினைக்கிறேன்
அனேகம் வாசகர்கள் அலுவலகத்திலிருந்து வலைப்பூ வாசிப்பார்கள் அவர்கள் அலுவலகத்தில் சில வேளை ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் இருக்கலாம் அவர்கள் குரல் வழி கருத்து இடுவது இயலாது அதற்க்கு விடையாக கிடைத்த தளம் இது,
http://www.snapvine.com
(ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் இருக்கலாம் ஆனால் தொலைபேசி இல்லாமல் இருக்குமோ அதன் மூலமும் கருத்தை தெரிவிக்கச் செய்யலாம் கருத்தைக் காட்சிப்படுத்தவும் முடியும்
இத்தளத்தினரிடம் பதிந்து அவர்கள் தரும் நிரலை( கோடிங்கை) பொருத்தவும் வரும் வாடிக்கையாளர்கள் அதன் மீது அழுத்த அது அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கத்தையும் இரகசிய நம்பர் ஒன்றையும் தரும் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து இரகசிய நம்பரை அவர்கள் சொல்லும் நேரத்தில் பதிந்தால் அவர்கள் கருத்துச் சொல் அனுமதிப்பார்கள் நீங்கள் கருத்தைச் சொல்லி முடிந்தவுன் # அழுத்தவும்
1 ஐ அழுத்தினால் கருத்துச் சேர்க்கப் படும்
2 ஐ அழுத்தினால் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம்
3 ஐ அழுத்தினால் கருத்து சேர்க்கப் படாமல் நிராகரிக்கப் படும்
2 ஐ அழுத்தியிருப்பீர்களானால் மீண்டும் மீண்டும் இதே ஓழுங்கில் வரும்
கொசுறு: இந்த இலக்கத்துக்கு அழைக்க முற்றிலும் இலவசமே (கட்டணம் என்றால் யாரய்யா கருத்துப் போடுவார்கள்)
கையில் தொலைபேசியை எடுங்கோ தமிழ்பித்தனை நோக்கி திட்டல் எனும் பாச அம்பு கொடுங்கோ
இனி சந்தோசமாக எல்லாம் வடிவாக திட்டுங்கோ வழக்கம் போல் அருகில் கருத்துப் பெட்டி இருக்கிறது
பல பாசநெஞ்சங்களின் வேண்டுகோளுக்கு இணங்க
1 ஆங்கில தமிழ் ஒலி நடை தவிர்க்கப்படுகிறது
2 பூரண விளக்கம் அளிக்கப்படும்
4 கருத்துக்கள்:
பரவாயில்லையே!! இப்படியும் இருக்கிறதா?
வேறு கணினியில் தான் முயற்சிக்க வேண்டும். போன் செட்டப் வரை போய் நின்று போகிறது.
சிங்கப்பூரில் முடியுமா? என்று தெரியவில்லை.
தமிழ்பித்தன்
சிங்கப்பூருக்கு இல்லை.
நான் வேற ஊருக்கு போய் செய்கிறேன், இல்லை வீட்டுக்கு போய் மைக் வழியாக சொல்கிறேன்.
ஆமாம் குமார் பல நாடுகளுக்கு பிரச்சினை என்கிறார்கள் என்னால் அதை உறிதிப்படுத்த முடியவில்லை
நானும் போட்டு வெச்சு இருக்கேன். எத்தனை பேர் உபயோகிக்கறாங்கன்னு பார்க்கலாம்.
Post a Comment