Tuesday, October 30, 2007

flash news;-கூகிளின் போன் ரெடி! இன்னும் சில தினங்களுக்குள் வெளிவரலாம்!


கூகிளின் போனுக்கான மென்பொருள் விசேடமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விடுவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இன்னும் ஓர் சில நாட்களுக்குள் வெளிவரலாம் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக சிறப்பான முறையில் போன் வடிவமைக்க Taiwan's HTC, South Korea's LG Electronics ஆகிய கம்பனிகளுடன் ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் மூலம் search, maps, Gmail, calendar, and RSS reader tools youtube voip ஆகியவற்றை இலகுவாக
கையாளலாம்.
இதன் வசதிகள் பெறக்கூடிய சேவை நிறுவனங்களாக AG's T-Mobile USA, France Telecom's Orange SA and Hutchison Whampoa Ltd.'s 3 U.K., ஆகியன காணப்படுகின்றன.
மேலும் இது பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் விரிவான முறையில்...

Monday, October 29, 2007

வலைப்பூவில் காசு பண்ணலாம் வாங்க! ((பாகம் 1))

இணையம் என்பது பொழுது போக்குடன் நின்று விடாமல் பல வழிகளில் வருமானங்களையும் ஈட்டுவதற்க்கு வழிசெய்கிறது.ஆரம்ப கால விளம்பரங்கள் சுவரொட்டி பத்திரிகை றேடியொ தொலைக்காட்சி என முன்னேற்றம் கண்டு தற்பொது அது இணையத்தில் பரம்பல் அடைந்திருக்கிறது.இணையத்தில் தற்போது வலைப்பூக்களின் காலம் என்பதால் அவற்றினூடாக விளம்பரம் செய்ய பல தளங்கள் போட்டிபோடுகின்றன நம்மிடம் உள்ள வலையகத்தினோ அல்லது வலைப்பூவிலொ விளம்பர தாரருக்கு ஒதுக்கி தருவதன் மூலம் நாங்களும் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் அப்படியான தளங்கள் சிலதை பார்ப்போம்



adsense
இது கூகிளின் சேவையாகும். இது நம்பிக்கைக்குரிய ஒரு சேவையாளரிடம் இருந்து கிடைக்கப் பெறுவதனால் அனைவரும் இதனையே விரும்புகின்றனர். இதன் விளம்பரங்கள் எழுத்து வடிவிலும் மற்றும் பானர் வடிவிலும் கி்டைக்க கூடியதாக இருக்கிறது
இதன் விளம்பரங்கள் இந்த வகை விளம்பரம் வேண்டும் என கேட்க முடியாது அது தளத்தின் தகவல்களை வைத்து கணித்து எந்த வகை போடுவதென அதே தீர்மானிக்கம். உங்கள் வாசகர்கள் விளம்பரத்தை கிளிக் செய்து அந்த விளம்பரத்தை நாடினால் அதற்கான கொமிசன் வருமானத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்


Earn $$ with WidgetBucks!

இதன் ஸ்ரைலே தனிதான் வருகையாளர் இணைப்பை அழுத்துவதனால் அடுத்து அவர்களது தளத்துக்கு இணைப்பு 25$ என இவர் பெரிய திட்டம் எல்லாம் வைத்திருக்கிறார் அனேக வலைப்பதிவாளர்களை அண்மை வாரங்களாக கவர்ந்திழுக்கும் இவர் வந்து முதல் வாரத்திலேயே 5000 வாடிக்கையாளரை கவர்ந்து(என்னையும் சேர்த்து) அதிசயக்கவைத்தவர்.

இவர்கள் தளத்துக்கு இணைப்பு நாம் வழங்கியிருக்கும் எமது இணைப்பினூடாக யாரும் சென்று பதிந்தால் அவரின் வருமானத்தில் வருட இறுதியில் எமக்கு 10 கமிசன் வழங்கபப்டும்
வருகையாளரை பொறுத்தவரை வருகையாளரைப் பொறுத்து அதில் கமிசன் உண்டு
அடுத்து இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்து விளம்பரம் செய்ய முடியும்.



ads-click
இவர் இவ்வளவு நாட்களாக கனடா அமெரிக்காவை விட்டுப் போக மாட்டன் என்று அடம் பிடித்தார் தற்போது ஓ.. என்று சொல்லி எல்லா இடமும் வெளிக்கிட்டுட்டார். இவர் கிளிக் பண்ணிணால் காசு அள்ளி அள்ளி கொடுப்பதாக கேள்ளி இவர் பல வடிவங்களில் விளம்பரங்களை தாரார் ((IAB, RSS, Tag Clouds, Inline Text Links)))

Thursday, October 25, 2007

youtube க்கு ஆப்பு வீடியோ சுப்பர் ஸ்ரார் இனி இவர்தான்.

வீடியோ பதிவின் சுப்பர் ஸ்ரார் இவர்தான் என்றால் அது இவருக்கத்தான் பொருந்தும்

இதில் உள்ள சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்
கட்டணம் எவ்வளவு;- இல்லை இது இலவச சேவை
வீடியோ ஓடியோ தரம் ;- DVD
பதிறேற்றல் :_ இலகுவானது
வீடியோ பிளேயர்;- Divx (பல DVD பிளேயர்கள் இதை பின்பற்றியே இயங்குகின்றன)
ஒரு வீடியோ பைலின் கொள்ளளவு;- 2GB

http://stage6.divx.com/

நீங்கள் என்ன தரத்தில் வீடியோ பதிவேற்றுகிறீரோ அதே தரத்துடன் பார்க்கலாம் ஆனால் உங்களது கணணியில் Dvix இருத்தல் வேண்டும் அதை இங்கே பதிவிறக்கலாம்.
http://www.divx.com/


உஷ்.... இங்க நிறை ஆங்கில படங்கள் பார்க்க கூடியதாய் உள்ளது சத்தம் சந்தடி இல்லாமல் போய் பார்த்திட்டு வாங்கோ!

சுப்பர் ஸ்ரார் என்று சொல்லிப்போட்டன் அவரிந்த பாட்டை போடாட்டி கொண்டே போடுவியல் இதோ உங்களுக்காக யூட்....


இலவசமா rapid share கணக்கு உருவாக்குவம்


இலவசமாக rapid share கணக்கா என வாய் பிளக்காதீர். இது இலகுவான ஒரு செயல் திட்டமே
இதற்க்கு ஓர் தளம் உதவுகிறது. இதில் கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து நீங்கள் ஓர் இணைப்பை பெற்று நீங்கள் அங்கே சேன்று கணக்கு உருவாக்குதல் வேண்டும். பின் நீங்களும் 4 பேருக்கு கணக்கு உருவாக்க உங்கள் இணைப்பை வழங்க வேண்டும் நாளுபேர் கணக்கு உருவாக்கினால் நீங்கள் உங்களுக்கு rapidshare கணக்குரெடி!
இதை தடம் பற்றி போங்கள்
http://www.freerapidaccount.com/free/?r=65781

Wednesday, October 24, 2007

சிங்களத்தின் நிர்வாணமும் புத்தனும்

சிங்களமே வீரர்களை நிர்மாணக்கி மகிழ்ந்தீரே
புத்தன் இதையோ போதித்தான் உமக்கு
புத்தன் உயிருடன் இருந்தால் அவனும்
எதிர்த்திருப்பான் உமை.

மார்பிலே அம்பு சுமந்தது எம் பரம்பரை
உம் போல் அரை கோவணத்துடன் ஓடியதில்லை
அன்று துட்டகைமுனு சூழ்ச்சி செய்து தமிழனை வென்றானாம்
இன்று வென்ற வெற்றி வீரர் சாய்ந்திருக்க அவரை அம்மணமாக்கிறாய்

யாரை ஆனந்த படத்த இச்செயல்
வாக்களித்த சிங்கள செம்மரிக் கூட்டத்துக்காகவா
இல்லை வென்று விட்டானே என்ற வெறுப்பா
இது இன்றை வெற்றியில்லையே தொடரும் வெற்றிகளின்
ஒர் புள்ளிதானே!

கழுத்தில் சிவப்பு துணி கட்டி அலையும்
சிங்கள குள்ளநரியே
ஒர் துளி இரத்தம் கண்டு
புலியை கொன்று விட்டதாய் கொட்டமா அடிக்கிறாய்
அது வெற்றியின் போது சிந்திய வெற்றி திலகமடா

எம் வீரர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்கள்
மூச்சுக் காற்றையே நீ தொட முடியாது
அதுவும் உன்னை பொசுக்கும்

நீ பொசுங்கும் காலம் வெகு தொலைவிலில்லை!

இறந்த அனைத்து கரும்புலிகளுக்கும் சிரம்தாழ்த்தி நினைவு கூறுகிறேன்

ஓர் கோழையின் கவிதை

ஜிமெயில் முகவரியை பிடித்தவருக்காக இப்படியும் மாற்றலாமா?


அசின் என்னோட தொடர்வு கொண்டு மின்னஞ்சல் முகவரியை கேட்டா நானும் சும்மா தனிய tbiththan@gmail.com என்று கொடுத்தால் அவ்வளவு சுவார்சயமாக இராது எப்படியாவது அவாந்த பெயரையும் இணைச்சு கொடுப்பம் என்றால் கணக்கு திறக்க நேரமும் காணாது உடனே இப்படி ஒரு முகவரியை கொடுத்தன் (பலர் இப்படித்தான் கனவு காணுறவ அதுக்கு கலைஞர் கிழவனையும் விடுகிறார்கள் இல்லை அந்தாலையும் எல்லோ கனவு காணுறாங்கள்)

tbiththan+loveasin@gmail.com

ஜிமெயில் கணக்கின் முகவரியை உங்களுக்கு பிடித்தவர்களுக்காக மாற்றி அமைக்கலாம் எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு இன்பாக்ஸ் ஐ வைத்து பலருக்கு வித்தியாசமான முகவரிளை வழங்கலாம்
உங்கள் உண்மையான முகவரி்- tbiththan@gmail.com
இதை உங்களுக்கு பிடித்தமானவருக்க கொடுப்பதையும் காட்டிலும் சும்மா அவரின் பேயரை இணைத்து வழங்கினால் எப்படி இருக்கும்

உதாரணம் tbiththan+asin@gmail.com
tbiththan+love&asin@gmail.com
tbiththan+தமிழ்பித்தன்@gmail.com


இப்படி எல்லாம் மாற்றவிரும்பினால் மாற்றலாம்
நீங்கள் உங்கள் முகவரிக்கு பின்னால் "+" போட்டு போடும் எதுவும் கணிக்க படமாட்டாது.

Tuesday, October 23, 2007

ipod க்கு 6வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிறுவர் முதல் முதியவர்கள் வரை இசைக்கு வசமாக இதயங்களே இல்லை எனலாம். அப்படியான இசையில் மயங்கிய இதயங்கள் உச்சரிக்கும் நாமம் ஐபாட் என்றால் அது மிகையாகாது. இன்று ஒரு நாளிலே 2001ம் ஆண்டு முதலில் ஆப்பிளால் வெளியிடப்பட்டது. இந்த ஐபாட் இன்று இளசுகள் முதல் முதியவர் வரை பல லட்சம் வரையான காதுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 34 வகையான மாடல்களை தன்னகத்தே கொண்ட ஐபாட் 1GB முதல் 160GB வரையான கொள்ளளவுகளில் கிடைக்கிறது.

5GB 1000 songs in your pocket.” Mac only. Format - 160 Kbps MP3. Mechanical scroll wheel. Firewire only. 10 hours battery life. 2-inch monochome backlit LCD. 6.5 oz. US$399.

என்று கூறிக்கொண்டு வந்தார் வென்றார். இதன் வெற்றியை சகிக்க முடியாத பல முன்னனி நிறுவனங்கள் களத்தில் குதிதாலும் இன்னும் அதனை எவராலும் முந்த முடியவில்லை.

அவரது அறிமுக உரையும் வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.


சென்ற வருடம் கிறீஸ்மஸ் காலப்பகுதியில் அமெரிக்கா வாழ் பதின்ம வயதினரிடம் நீங்கள் என்ன பரிசு பொருளை கொடுக்கவோ அல்லது வாங்கவோ விரும்புகறீர்கள் என்று கேட்க 68% மானவர்கள் ஐபாட்டைசொன்னார்கள்
முதல் அவதாரம்

இதுவரையில் இறுதி அவதாரம்


இது வரை வந்த அனைத்து மாடல்களையும் காண இங்கே செல்லுங்கள்

தமிழ்பித்தனும் அதன் ஒர் அபிமானி என்ற வகையில் வாழ்த்துகிறது

கலக்கும் வீடியோ தளம்

இதில் உள்ள சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்
கட்டணம் எவ்வளவு;- இல்லை இது இலவச சேவை
வீடியோ ஓடியோ தரம் ;- அசத்தல்
பதிறேற்றல் :_ இலகுவானது
வீடியோ பிளேயரின் தோற்றம்;- மிக நன்றாக இருக்கிறது flash
ஒரு வீடியோ பைலின் கொள்ளளவு;- வரையறையில்லை


இனி நான் நினைக்கிறன் youtubeக்கு தலைக்கனம் குறையும் என்று ஏனென்றால் இந்த வீடியோ பகிர்வுத்தளம் கலக்கத் தொடங்கி விட்டது நல்ல தெளிவான வீடியோ, டிவிடி தரம் என்று கலக்குகிறது அடுத்து இவர்கள் தரும் பிளேயர் மூலம் எந்தத் தளத்தில் உள்ள வீடியோவையும் பதிவிறக்கி பார்த்து மகிழ முடியும் இன்னுமோர் சிறப்பம்சம் வரை பதிவேற்றலாம் ஒன்றொ இரண்டு தமிழ் பதிவர்களையும் காண முடிகிறது ஆமாம் நீங்கள் எப்போ மறப்போகிறீர்?

அங்கே சுட்ட பாடல்காட்சி

Online Videos by Veoh.com


அவர்கள் வழங்கும் பிளேயரின் முகப்புத் தோற்றம்



பிளேயரின் உள்த்தோற்றம்





பரிந்துரைகள்
pcworld;- 80%
தமிழ்பித்தன்::- 86%
மக்கள் கருத்துக்கணிப்பு :-68%

Monday, October 22, 2007

blip tv சிறப்பான ஒன்றா?



www.bilp.tv
இதில் உள்ள சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்
கட்டணம் எவ்வளவு;- இல்லை இது இலவச சேவை
வீடியோ ஓடியோ தரம் ;- அசத்தல்
பதிறேற்றல் :_ இலகுவானது
வீடியோ பிளேயரின் தோற்றம்;- மிக நன்றாக இருக்கிறது flash 8 இல் இயங்கும் முதல் தளமாம்
ஒரு வீடியோ பைலின் கொள்ளளவு;- 100MB


இது உண்மையில் ஒரு நல்ல வீடியோ தளம்.இதில் பார்க்கும் வீடியோவை நீங்கள் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்கலாம்.
நீங்கள் பதிவேற்றிய வீடியோ உங்கள் சொந்த தயாரிப்பு எனில் பணம் பெறும் வசதியும் இருக்கிறது

பரிந்துரைகள்
pcworld ;-84%
தமிழ்பித்தன்;-65%
மக்கள் கருத்துக் கணிப்பு ;41%

Sunday, October 21, 2007

எங்க போவம்!

நீங்கள் பாட்டைக் கேட்ட படியே மூட்டை முடிச்சுகளை கட்டியிருப்பீர்கள் என்று தோன்றுகிறது சரி வாங்கோ போவம்.....

ஓ... எங்கை போறது என்று கேட்கிறீர்களோ? அதுதாங்க இப்ப எல்லாம் இணையத்தின் வேகம் நாளுக்கு நாள் கூடிகி்ட்டே போகுதல்லோ அதன் மூலம் வீடியோக்கள் ஒன்லைனில் பார்க்கும் வாசகர்கள் அதிகமாகிட்டே போகுதல்லோ நாங்கள் இனியும் பொறுமையா இருக்க முடியாது பலருக்கு யூடூப்பை தவிர வேற ஒரு தளங்களுமே தெரியாது. ஆகவே அவற்றை விலாவாரியாக தரலாம் என்று எண்ணியிரக்கிறன். அதாவது சிலதை ஒரே தடவையில் நேர்த்தியா சொன்னால் அது இன்னும் சிறப்பா இருக்குமாம்.

அதன்படி இந்த வீடியோ சம்பந்தமான அதிரடி பதிவில் இடம் பெற இருக்கும் அம்சங்கள்

1)வீடியோவை தரவேற்றி காட்சிப்படுத்த சிறந்த தளங்கள் (பரிந்துரை செய்வோர் தமிழ்பித்தன் ,கணணி சஞ்சிகைகள், மக்களின் கருத்து கணிப்புக்கள்)
2)வீடியோவை எடிற்செய்ய உதவும் மென்பொருட்கள் & ஒன்லைன் சேவைகள்
3)ஒளிப்பதிவு செய்ய சிறந்த கருவிகள் & மலிவான கருவிகள்
4) வீடியோ கோப்பு மாற்றிகள்
5) வீடியோ தரவிறக்க ஊக்கிகள்
6)மற்றும் அனைத்தும்

அடுத்ததாக என்ன துறையை தெரிவு செய்ய என்று கூறுங்கள்




......தொடர்ந்து எதிர் பாருங்கள் வாசியுங்கள் கருத்திடுங்கள் ஊக்கிவியுங்கள்


கீழே உள்ள விளம்பரத்தை சுட்டுவதன் மூலம் சிறார் கல்விக்காக விளம்பரம் என்ற திட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்

Friday, October 19, 2007

யாருக்காக இப்பாடல் கண்டுபிடியுங்கள்



பாட்டை பார்த்திடே மூட்டை முடிச்சுகளை கட்டி ரெடி பண்ணுங்க! வாழ்வாதாரரத்திலதான் புலம் பெயர்தல் என்றால் இணையத்திலையுமா?
என்னென்று குழம்பாதேங்கோ வந்து சொல்லுறன்

அசத்தும் பைல் சேமிப்பான்



பல சேமிப்பானை பார்த்திருப்பீர்கள். இது மாதிரி பார்த்திருக்க மாட்டீர்கள். இவர் வழியே தனிவழி என்று நம் தலையை மாதிரி பில்டப் எல்லாம் விடுகிறார். ஓரு பைல்லின் கொள்ள 500MB எனக் கூறுகிறது. இது பகிர்ந்து கோள்வதற்க்கு
உங்கள் தனிப்பாவனைக்கு 2GB என அசத்தல் அட்டாகாச அறிவிப்புகளுடன் வெளிவந்திருக்கிறது((இதுவும் 500mb வரை இருக்கலாம் என்றே தொன்றுகிறது))
வலைப்பூவுக்கு widget எல்லாம் தாறாங்கலாம். ம்..ம் என்னதான் இருந்தாலும் பாருங்கோ யாரும் rapid share ஐ விட்டுட்டு வரமாட்டார்கள் தானா,??

http://www.driveway.com/

Thursday, October 18, 2007

மைக்ரோ சாப்டின் புதிய சேவை

கூகிளின் Google Docs போல மைக்ரோ சாப்ட் Office Live Workspace எனும் பெயரில் தான் ஒன்றை வெளியிட்டிரக்கிறது
Internet Explorer 6.0 or later on Windows XP, Windows Server 2003 and Windows Vista
Firefox 2.0 on Windows XP, Windows Server 2003, and Windows Vista
Firefox 2.0 on Mac OS X 10.2.x and later
ஆகியவற்றில் இயங்கும் தன்மை கொண்டது.

பிரான்ஸ் வாரர் ஐபோன் ஐயா!

பிரான்சுக்கு வருகிற நவம்பர் 29ம் திகதி நான் பிரான்ஸ் வாறன் அங்க என்ர நண்பர்களோட கூட்டுச் சேர்ந்து எம் எதிரிகளை எல்லாம் பூண்டோடு அழித்து அங்கையும் எனது புகழை நிலை நாட்டுவேன்.

என்று வீர முழக்கம் இடுகிறார் ஆப்பிளின் ஐபோன் ஐயா!
ஆமாம் இதன் போது கருத்துக் கூறிய Didier Lombard, CEO, France Telecom. இது பிரான்ஸ் மக்களுக்கு எமது கிறிஸ்மஸ் பரிசு என்றார்
ஆமாம் பிரான்ஸின் ஆராஞ் ரெலிக்டிகாம்முடன் செய்த ஒப்பந்த்தின் படி வருகற 29 ம் திகதி அங்க அப்பிள் வாரார் நீங்களும் வாங்க ரெடியா நில்லுங்கோ அப்ப திருவள்ளுவர் இயக்கம் இளங்கொவடிகள் இயக்கம் என பல இயக்க காரர்களும் இப்பவே போய் பதியுங்கோ அடுத்த வருகிற ஏதாவது ஒரு மாநாட்டில சும்மா பிசியா நிக்கிறமாரி போட்டோ போடுவதாக பில்டப் காட்டி உங்கள் ஐபோனை மற்றவர்களுக்கு காட்டலாம். (எவ்வளவு காலம்தான் காரையே காட்டுவது)
இந்த ஐடியாவை நேரடியாக பயன்படுத்த நினைப்பவர்கள் முதலில் எனக்கு காசோலை அனுப்பவும் அனுப்ப வேண்டிய முகவரி:-
சுவாமி பெரியார் தெரு
கீழ்பாக்கம் 52
p7 t8m5
கனடா

மேலதிக விபரம் ;- http://wireless.itworld.com

Wednesday, October 17, 2007

skype ல் my space க்கு இடம்



முதல் தடவையாக skype தனது மெசஞ்சரில் வேறு ஒன்றுக்கு இடம் வழங்கியிருக்கிறது. myspace க்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தாம் தமக்கிடையே வாடிக்கையாளர்களை பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகின்றன. இதன் மூலம் குறும்செய்திகள் மட்டுமே பரிமாற முடியும் என தெரிவித்திருக்கின்றன. வெகுவிரைவில் அனைத்து ஊடக பரிமாற்றத்திற்கேற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டு வெகுவிரைவில் வெளி வரும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலதிக செய்தி;- http://www.gigaom.com

Friday, October 12, 2007

சிவாஜி படத்தின் சாதனை போதுமா?

சிவாஜி திரைப்படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஏன் இதை பதிகிறேன் என்று நினைக்கிறீர்களா?
பல ஆங்கில வலைப்பூக்கள் இலவசமாக ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவது வழக்கம் சில வேளை அரிதாக சீன அதிரடி படங்களும் வெளியிடுவார்கள். இப்படியான நிலையில் இந்த சிவாஜி திரைப்படம் தற்பொது பல ஆங்கில வலைப்பூக்களை அலங்கரிக்கின்றமையை எண்ணிய போது தமி்ழ் திரையுலகத்துக்கு ஓரளவு அங்கிகாரம் இந்த சிவாஜி திரைப்படம் மூலம் கிடைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
இங்கே போங்க http://videoglobal.blogspot.com

மைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம் 1 GB ஆகியது


மைக்ரோ சாப்ட் சில மாதங்களுக்கு முன் ஸ்கை ரைவ் எனும் பெயரில் ஒரு பைல் சேமிப்பானை அறிமுகம் செய்தது அது தொடர்பான எனது பதிவு இங்கே!
அது அதை அறிமுகம் செய்த போது பைல் சேமிப்பின் கொள்ளளவு 500MB ஆக இருந்தது இப்போது அது இந்த இட கொள்ளளவை 1 GB ஆக்கியதுடன் சில புதிய வசதிகளையும் இணைத்துக் கொண்டது.
* உங்கள் பைல்கள் நேரடியாக RSS முறை மூலம் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி
மேலதிக விபரம்

திரட்டி செய்வது எப்படி???((விரிவான விளக்கம்))


இப்போது பல தளங்கள் ஓடைகளை(feed) திரட்டும் வசதியை தருகின்றன. சிலதளங்கள் தனியாகவும்சில தளங்கள் அனைத்து ஓடைகளை ஓரே ஓடையாக மாற்றும் வசதிகளை அளிக்கின்றன. இத்திரட்டும் வசதியை வைத்து..
* உங்களுக்கு பிடித்தமான வலைப்பதிவுகளை திரட்டலாம். அதை நீங்கள் உங்கள் வலைப்பூவிலோ அல்லது இணையத்திலோ உங்கள் வாசகருடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தி அங்கிருந்து படிக்ககலாம்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்!
முதல் சொன்னது போல பல தளங்கள் திரட்டும் வசதியை அளிக்கின்ற போதும் எனக்கு http://www.feeddigest.com/ என்ற தளம் தான் பிடித்திருக்கிறது இதை மையமாக வைத்து தொடர்வோம்


1)முதலில் இங்கே சென்று கணக்கை உருவாக்குங்கள்
2)இங்கே சென்று முதலில் உங்களின் ஒரு ஓடையை பொருத்துங்கள்


3)அழுத்தி வருகிற பக்கத்தில் உங்கள் தரவுகளை பதியுங்கள்
Digest Name -திரட்டியின் பெயர்(யுனிக்கோட்டையும் ஏற்றுக்கொள்ளும்)((முதலாவது))
Order Items By- என்பதில் ((இரண்டாவது))
item date மற்றும்
descending ஆகியவற்றை தெரிவு செய்யுங்கள்
Max Items to Show- எத்தனை விடயங்களை காட்டவிரும்புகிறீர்கள் (5 தொடக்கம் 10 வரை) சிறந்தது ((மூன்றாவது))
Output Encoding- UTF-8
Template- உங்கள் விருப்பம்(((நான்காவது))



வேற என்ன?? அம்முட்டும் தான் முடிஞ்சுதா?? அங்க தார ஓடையையே அல்லது HTML நிரலையோ நீங்கள் பொருத்த விரும்பிய இடத்தில் பொருத்துங்க.



Click here to add a feed to this digest என்பதை அழுத்தி நீங்கள் பின்னர் உங்களுக்கு விரும்பிய தளங்களின் ஓடைகளை எல்லாம் இணையுங்கள்

நான் செய்த திரட்டியை அருகில் பாருங்கள்.
இதில் http://thamizitnews.blogspot.com/
http://pkp.blogspot.com/
http://mayunathan.blogspot.com/
ஆகிய வலைப்பூக்கள் திரட்டப்படுகின்றன.

டிப்ஸ்;- புளாக்கர் வலைப்பூவுக்கான ஓடை http://yourblogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
புளாக்கர் வலைப்பூவின் பின்னூட்டத்துக்கான ஓடை http://yourblogName.blogspot.com/feeds/comments/default



அனைவருக்கும் றம்ழான் மற்றும் நவராத்திரி வாழ்த்துக்கள்

Thursday, October 11, 2007

யாகூ மெயிலின் புதிய வசதி


யாகூ தனது மின்னஞ்சலை மையமாக வைத்து முன்னேறுவதை அவதானிக்க முடிகிறது.காரணம் அது எதிலும் காட்டாத அக்கறையை மின்னஞ்சலிலே காட்டுகிறது. இது வரை யாகூவின் மெசஞ்சர் ஊடாக விண்டோஸ் லைவ் மெசஞ்சரை தொடர்பு கொண்டோம் இப்போது ஒரு படி மேலே போய் யாகூ தனது மின்னஞ்சலிருந்து லைவ் மின்னஞ்சலில் அல்லது லைவ் மெசஞ்சருடன் இருப்பவருடன் கதைக்கும் வசதியை அளித்திருக்கிறது

மேலதிக விபரம்

Tuesday, October 9, 2007

கூகிளின் rapid share தேடி!



rapidshare

அனைவeரும் rapidshare ல் பைகள் தரவிறக்குவது வழமை ஆனால் அதை பதிவேற்றியவரே உங்களுக்கு இணைப்பை தந்தாலே ஒழிய! மற்றும்படி நீங்கள் தரவிறக்க முடியாது ஆனால் இந்த தளம் நீங்கள் விரும்பும் பைலை தேடி தருகிறது! தேடலும்! அசத்தலாக இருக்கிறது.
தளத்துக்கு கீழே பாருங்கள்
© 2007 Rapidshare1.com Powered by google
என்று இருக்கிறது என்ன உல்டா நடக்கதோ தெரியலை ஆனால் நல்ல தேடி

நான் sivaji எனத் தேடிய போது கிடைத்தவை

Saturday, October 6, 2007

கூகிளின் அட்சென்ஸின் பணம் இப்போது வேஸ்ரேன் யூனியன் ஊடாக.



கூகிளின் அட்சென்ஸின் பணத்தை இப்போது வேஸ்ரேன் யூனியன் ஊடாகவும் இப்போது பெற முடியும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு இரண்டு நிறுவனங்களும் சில தினங்களுக்கு முன் வந்தன.
ஆனாலும் எல்லா நாடுகளும் இச்சேவை பெற முடியாது குறிப்பிட்ட சில நாடுகளே பெற முடியும் என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இது ஒரு பரீச்சார்த்த நிகழ்வாக பார்க்கலாம் வெகுவிரைவில் மற்ற நாடுகள் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளும் இடம் பெறலாம்.

இதனால்,

  • பணதத்திற்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் ((நீங்கள் உங்கள் காசோலை வருது வருது என்று தபால் காரனை துரத்த தேவையில்லை))
  • வங்கிக்கான காசோலை மாற்று கட்டணம் மீதமாகும்
  • இது முற்றிலும் இலவச சேவையாம் (உங்கள் கணக்கிலிருந்து ஒரு பைசா கூட இச்சேவைக்காக கழிக்க படமாட்டாதாம்.

தற்போது இச்சேவையை பெறக்கூடிய நாடுகள்
  • China
  • Malaysia
  • Pakistan
  • Romania
  • Philippines
  • Argentina
  • Chile
  • Peru
  • Colombia

பார்க்க:- google adsence

Friday, October 5, 2007

ஒரு பட்டனில் அனைத்தையும் பதிவிறக்க


நீங்கள் இணையத்தில் பார்கின்ற வீடியோவோ அல்லது ஓடியோவோ எதுவானாலும் நீங்கள் ஒரு பட்டனை தட்டுவதனால் அதை தரவிறக்கி கொள்ளலாம். இது பயர்பொக்ஸின் நீட்சியே.((EX பாவிப்போர் தயவு செய்து முறைத்துப் பார்க்க வேண்டாம்

இங்கே சென்று நீட்சியை பதிவிறக்கி நிறுவுக

பயர்பொக்ஸ் உலாவியின் வலது பக்க கீழ் மூலையில் உள்ள படத்தில் காட்டப்பட்ட பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் பார்த்திக் கொண்டிருக்கும் மீடியா பைலை தரவிறக்கலாம்.

விண்டோஸின் ஐகானின் பெயர்களை நீக்குதல்

உங்கள் கணணியில் உள்ள ஐகான் களின் பெயர்களை மறைய செய்ய கீழ் கண்டவாறு செய்யுங்கள்
முதலாவது
right click (வலது பக்க சொடுகி)----->Rename (வேறு பெயர்)--->ALT+0160
வேலை முடிந்தது இப்போது உங்கள் ஐகான் பெயர்கள் ஏதும் இன்றி தனியே புகைப்படத்துடனேயே காணப்படும்

கீழே my computer பெயர் இழந்து காணப்படுகிறது

Wednesday, October 3, 2007

கூகிளின் மொழி மாற்றியை நம்பலாமா?

ஒரு மொழிமாற்றியானால் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றி விட்டு பின் அதையே மீண்டும் முந்தைய மொழிக்கு மாற்றும் போது மாறாமல் இருக்க வேண்டும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள். எதையும் எதையும் கூகிள் தொடர்பு படுத்துகின்ற தென்று....

Tuesday, October 2, 2007

இலவச CD/DVD எழுதி(CDBurnerXP 4 )


உங்கள் கோப்புக்கள் ஓடியோ மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நீங்கள் CD யில் எழுதி வைக்க இது வரை என்ற மென்பொருளை பயன்னடுத்தியிருப்பீர்கள். இது ஒரு கட்டண மென்பொருள் இதை பெற முடியாதவர்கள் கீழே இருக்கும் இலவச எழுதியை பயன்படுத்தலாம்.


இதன் வசதிகள்

Support for burning Blu-Ray, HD-DVD, and Double layer DVDs
Support for FLAC audio files
Disc to Disc copy for audio and data
Save discs and compilations as ISO files
Support for WPL playlists




இது 2000/XP/Vista ஆகியவற்றில் இயங்கக் கூடியது.




மேலதிக தகவலுக்கும் தரவிறக்கவும்;-http://www.freewaregenius.com/2007/09/25/cdburnerxp-4/