Monday, December 29, 2008

Live storage unlimite




live storage எனும் தளம் வரையறையற்ற இடக் கொள்ளளவுடன் சேவையை ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் இந்த சேவையில் பாவனையாளர்கள் நம்பிக்கை வைப்பார்களா என்பது கேள்விக் குறியே! ஆனாலும் இதன் இயங்கு வேகம் மற்றும் கணியிலே ஒரு drive ஆக மாற்றும் வசதிகள் காரணமாக பயனர்கள் கவரப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் பல கவர்ச்சியான சேவைகளுடன் வந்த xdrive omnidive and medimax என்பன காணமல் போனது நினைவிருக்கலாம்.


ஆனால் 25GB யுடன் இயங்கும் micro soft skydrive தான் பலர் விரும்புவதாக அறிய முடிகிறது.
(sky drive தான் unlimite இடக்கொள்ளளவுக்கு மாறிவிட்டது என்று செய்தி வெளியிட்டு ஒரு ஆங்கில வலைப்பு வாசகர்களிடம் வாங்கிக் கட்டியது))

Saturday, December 13, 2008

Blogger ன் அதியுச்ச சேவை !


நீண்ட கால Blogger Team லே விவாதத்தில் இருந்த blogger ன் Back Up, Export and import சேவைகள் சென்ற 10 ம் (டிசம்பர் 10,2008) திகதியிலிருந்து பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.

*இதன் மூலம் உங்கள் blogger பதிவுகளை Back Up செய்து உங்கள் storage ல் சேமித்துக் கொள்ள முடியும் கொள்ளலாம்

*ஒரு blog லிருந்து மற்றொரு blog க்கு பதிவுகளை மாற்றலாம். (((இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதாம்))

ஆனாலும் இந்த import சேவையானது தனியே blogger களுக்கு இடையே மட்டுமே இயங்கும் வேறு எந்த சேவைகளுக்கும் பொருந்தாது. உதாரணமாக WordPress, Typepad, LiveJournal or any other களிலிருந்து உங்களால் blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது.

Setting--->basic--->Blog Tools-->>import and export

புரியலையா??????? -------->> HERE

twiiter ஐ இப்போது gmail லிருந்த படியே ட்விட்டலாம்




நீங்கள் ஜீமெயில் பாவிப்பவரா?? அடிக்கடி நண்பர்களுடன் ட்விட்டரில் அரட்டுபவரா?? அப்படியாயின் நீங்கள் கட்டாயம் இதை தொடர்ந்து வாசிக்க வேணும்...

தற்போது twitter ஐ உங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஆக பொதிந்து கொள்ள முடியும்.

http://www.twittergadget.com/gadget_gmail.xml

என்பதை


setting ---> gadget---->பின் வரும் பெட்டிக்குள் URL ஐ பொதிந்து விட்டு add செய்து விடுங்கள் பின் ஒரு தடவை refresh செய்தால் ஜிமெயில் அரட்டை பெட்டிக்கு கீழே உங்கள் twiiter பெட்டியை காணலாம். பிறகென்ன! கணக்கை உள்நுழைந்து அடித்து நொருக்க வேண்டியதுதானே!


அப்படி இன்னமும் தங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஐ Enable செய்யாதவர்கள்.

setting--> Lab--> Add any gadget by URL ---> select enable


என்னது இவ்வளவு சொல்லியும் புரியலயா???
புறப்படுங்க இங்க

Tuesday, December 9, 2008

இலவச domain!

இலவசமாக பல வகை url கள் வழங்கும் தளங்கள் இணையத்தில் கிடைத்தாலும் அதில் பல நம்பிக்கையற்றன. பல விளம்பரங்களுடன் இருப்பதால் விரும்புவதில்லை.
ஆனால் இந்த தளம் ஓரளவுக்கு நம்பிக்கையாக இருக்கிறதாம். பல இணைய வடிவமைப்பு பிரியர்கள் இதைத் தான் நாடுகிறார்கள்.

தளமுகவரி:- www.co.cc






உங்கள் முகவரி yourname.co.cc


இதைனை உங்கள் blogger,wordpressல் பொதிவது போன்ற செய்முறை விளக்கங்கள் அங்கேயே இருக்கிறது.

பிற்குறிப்பு:- நான் எனது புளொக்குக்கு பட்டை போட இணையத்தில்தேடிய போது பல நாவுக்குள் நுழையாத subdomainகளை கொண்ட தளங்கள் கிடைத்தன அவற்றை உருவாக்கியோர் இப்படியானவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி!

Friday, May 9, 2008

ஒப்பின் ஆபிஸின் 3ம் பதிப்பு வெளிவந்தது


சிறந்த திறந்த மூல மென்பொருள்களுள் ஒன்றானதும் மைக்கிரோ சாப்டின் ஆபிஸ் மென்பொருளுக்கு சாவாலானதுமான ஓப்பின் ஆபீஸ் மென்பொருள் புது மெருகுடன் பதிப்பு 3 ஆக வெளிவந்திருக்கிறது. இதன் சிறப்புக்கள்
விண்டோஸ் லினக்ஸ் மக் ஆகியவற்றில் இயங்கும்

மேலும்

OpenOffice.org Start Center gives you a one stop shop for creating documents, spreadsheets, presentations, drawings, databases, or templates

Support for collaborative spreadsheet editing

Improved Writer notes features

View multiple Writer pages while editing a document

Improved crop features in Draw and Impress

Support for ODF and MS Office 2007 formats



மெலதிக விபரத்துக்கும் பதிவிற்க்கத்திற்க்கும்;- http://marketing.openoffice.org/3.0/announcementbeta.html

Sunday, April 13, 2008

முழுமையற்ற RAR சிப் வீடியோவை இயக்குவது எப்படி?


இப்போது RAR சிப் செய்ப்பட்டு அதை இணையத்தின் மூலம் பகிர்ந்தளிப்பது சாதாரணமான நிகழ்வு இதில் ஒரு சிக்கல் உண்டு ஒரு இயங்கு ஒளிப்படம்(வீடியோ) பல பாகங்களாக பிரிக்கப் பட்டு பகிரப்பட்டால் அவை அனைத்தும் உங்கள் கரங்ளில் கிடைத்தாலே ஒழிய மற்றும் படி உங்களால் அவற்றில் ஒன்றையேனும் பார்க்க முடியாது

ஆனால் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கிறது இந்த மென்பொருள் http://ds6.ovh.org/drp.html
இது நேரடியாக முறையில் சிப் செய்ப்பட்ட எந்தவகை வீடியோவையும் இயக்கும்


அனைத்து வலைப்பதிவு உள்ளங்களுக்கும் உங்கள் அன்புத்தம்பி தமிழ்பித்தனின் தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க! பல்லாண்டு வளமுடனே!

நன்றி!

Monday, March 10, 2008

YouTube வீடியோவை அதியுயர் தரத்துடன் பார்ப்பது எப்படி??

youtubeல் நீங்கள் வீடியோவை பதிவேற்றும் போது உங்கள் வீடியோ தரம் குறைக்கப்பட்டே! பதிவேற்றப்படுமாம். அப்படி தரம் குறைக்கபட்ட வீடியோவை பழைய தரத்துக்கு கொண்டுவர ஒரு வழியுண்டாம். அது நீங்கள் எந்த வீடியோ பார்க்க உள்ளீர்களோ அந்த URL க்குப் பின்னால் &fmt=18 என்பதை சேர்த்து பின் அதை உங்கள் புரவுசரில் பேஸ்ட் செய்யவும் உடனே அது பதிவிறக்க கேட்க்கும் பின் அதை பதிவிறக்கி பார்த்து மகிழவும்


இது அனைத்து youtube வீயோக்களுக்கும் ஒத்துழைக்காது. பெரும்பான்மையான வீடியோக்களுக்கு ஒத்துழைக்கிறது

உதாரணம்:- http://www.youtube.com/watch?v=mOt_RVLg6LE என்ற முகவரியில் வேல் திரைப்பட "கோபக்கார கிளியே" என்ற பாடல் உள்ளது அதை பின்வருமாறு பாவிக்க வேணும்
http://www.youtube.com/watch?v=mOt_RVLg6LE&fmt=18


பிற்குறிப்பு:- இது MP4 வடிவத்தில் பதிவிறங்குவதால் அதை பார்க்க ஏதாவது MP4 player உங்களுக்கு தேவைப்படும்
பரிந்துரை:- Apple Quick Time Player
நன்றி:-sizlopedia

Sunday, February 10, 2008

yahoo வின் புதிய yahoo live எனும் வீடியோ போட்காஸ்ட்!


யாகூவானது சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. சிறு சல சலப்புக் கொல்லாம் அஞ்சாது பனங்காட்டு நரி என்பதை யாகூ நிருபித்திருக்கிறது ஏனெனில் இந்த சலசலப்புகளுக்கு மத்தியிலும் yahoo live என்ற ஒரு வீடியோ podcast சேவையை அது துவங்கிருக்கிறது. இது இணைய வீடியோ பயனாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது தனிமனித அல்லது குழுமச் செயற்பாடுகளை ஒளிபரப்புக்கு உதவும்.


இந்த துறையில் Justin.TV, StickCam, and Ustream.TV. போன்றன தடம்பதித்து சாதனையின் உச்சத்தில் இருப்பது யாவரும் அறிந்ததே!


இணைப்பு :-http://live.yahoo.com/


Friday, February 1, 2008

செய்தியின் தவறுக்கு வருந்துகிறேன்

கடந்த பதிவில் யாகூவை வாங்க மைக்ரோ சாப்ட் விலைப் பேரம் நடைபெறுகிறது வெகுவிரைவில் அதன் கைக்கு யாகூ மாறலாம் என வரவேண்டும் அனைவர்களினது சிரமத்துக்கு வருந்துகிறோம்

பரபரப்புச் செய்தி:- yahooவை mictrosoft வாங்கியது

இணைய உலகின் யாம்பவானான கூகிளுக்கு போட்டி என கருதப்பட்ட yahoo ஐ கணணி உலக யாம்பவான் மைக்ரோ சாப்ட் 44 பில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்திருக்கிறது. இதனால் உலகின் இணைய தேவைகள் அதிகரித்திருப்பதை அந்த நிறுவனம் உணர்ந்திருப்பது தெரிகிறது இது அதற்க்கு பெரும் வல்லமையை அளிக்கும் என்றே தெரிகிறது இதற்க்கு முன்னதாக இருநிறுவனங்களுக்கும் மெசஞ்சரை பரிமாறுவதில் இணக்கம் கண்டிருந்தன.


கடந்த சில நாட்களாக yahoo பங்குகள் கண்ட சரிவு இதற்க்கு ஒரு உடனடி காரணமாக இருக்கலாம் என்று பலரின் கருத்தாக இருக்கிறது.


மேலதிக செய்திகள்:- BBC

Sunday, January 27, 2008

உபுண்டுவிலும் photoshop cs2 நிறுவலாம்

எப்படி உபுண்டுவில் photoshop cs2ஐ நிறுவலாம் என்பதை இலகுவாக விளக்கம் தரப்படுகிறது

http://news.softpedia.com/news/Install-Photoshop-CS2-on-Your-Ubuntu-PC-77260.shtml

Tuesday, January 22, 2008

வேட்பிரஸ் இலவசமாக 3GB!


வேட்பிரஸ் தனது தளத்தில் மீடியா கோப்பின் பதிவேற்ற அளவை 3GB ஆக உயர்தியிருக்கிறது. இதனால் ஒளி ஒலி பரிமாற்றங்கள் இன்னும் வலைப்பதிவில் அதிகரிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த அளவு போதாது போனால் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். இதுவரை blogger 1GB
typepad வருட கட்டணம் 300$க்கு 3GB வழங்கிவருகிறமை யாவரும் அறிந்ததே!

மேலதிக விபரம் http://wordpress.com/blog/2008/01/21/three-gigabytes/

Tuesday, January 15, 2008

அப்பிள் அறிமுகப்படுத்தியவை என்ன?? ((அப்பிள் ரசிகர்களின் பரபரப்பு அடங்கியது))

இன்று ஆப்பிள் ஒழுங்கு செய்திருந்த Apple Expo 2008 நிகழ்வில் அப்பிளால் என்னென்ன புதியன அறிமுகப்படுத்தப் பட போகின்றன என அதன் ரசிகர்கள் பலர் ஆவலோடு இருந்தார்கள்
அப்பிளால் அறிமுகப்படுத்தப்பட்டவை

iphoneல் map

மிக மெல்லிய மடிகணணி((Mac Air))

iTune ல் முவீஸ் வாடகை

iPod ல் பல மேம்பாடுகள்

அப்பிள் ரீவி

ஆகியன அடங்கும்
மேலதிக விபரத்திக்கு கீழே உள்ள வீடியோ காட்சியை பார்க்கவும்

Saturday, January 5, 2008

உங்கள் interner explorer ல் மேலதிக வசதிகளைப் பெற


கீழே தரப்பட்டுள்ள இணைப்பினூடாக சென்று சிறு add-0n ஐ நிறுவுங்கள்

இதில் கிடைக்க கூடிய வசதிகள்


Spell Check,

Inline Search,

Super Drag Drop,

Crash Recovery,

Proxy Switcher,

Mouse Gesture,

Tab History Browser,

Web Accelerator,

User Agent Switcher,

Webpage Capturer,

AD Blocker,

Flash Block,

Greasemonkey like User Scripts platform


மேலதிக தகவல்;- http://developerlife.com/theblog/?p=236

தரவிறக்க;- http://ie7pro.com/download.php

Thursday, January 3, 2008

ipod touch ஐ போனாகவும் மாற்றலாம்

உங்களிடம் உள்ள ipod touch ஐ எவ்வாறு மாற்றலாம் என விரிவாக விளக்கம் கூறுகிறது இந்த தளம்