Monday, May 21, 2007

கலக்கும் பைல் சேமிப்பான்


mediamax என்பது தற்போது பலரின் வாயில் முணுமுணுக்கும் அளவுக்கு பிரபல்யம் ஆகிய ஒன்றாகி விட்டது. பயனர் கணக்கு ஒன்றுக்கு 25GB வரையாக பைல்களை சேமிக்க வசதி வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது முற்றிலும் இலவச சேவை பல தளங்கள் 1GB கொள்ளவை தரும் போதே பணம் பறிக்க நினைக்கும் இத்தருணத்தில், இதன் வருகை பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் மைக்ரோ சாப்ட் தனது பைல் சேமிப்பு சேவையை ஆரம்பத்தமையும் குறிப்பித்தக்கதே, (இணைப்பு 1)

நான் பாடலைப் பதிவேற்றும் காட்சி
(படம் தெளிவற்று இருந்தால் அதில் அழுத்தவும்)

அண்மையில் rapidshare இலவச பயனருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தமை யாவரும் அறிந்ததே! ( ஒரு நேரத்தில் ஒரு பைலை மட்டும் தரவிறக்கலாம் ஒரு பைலை தரவிறக்க எவ்வளவு நேரம் எடுத்தமே அதே அளவு நேரம் அடுத்த பைல் தரவிறக்குவதற்காக காத்திருக்க வேணும். இவை rapidshare இன் கொடுமைகள்)

நான் பதிவேற்றிய பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள்

அப்ப எல்லோரும் media max க்கு மாற தயாரா?
நல்ல விசயங்கள் இருந்தால் மாறித்தானே ஆகணும் ஹி..ஹி

4 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

மாத்திடுவோம்,ஆனால் மாற்றிய பிறகு அவுங்க மூடிட்டா??

தமிழ்பித்தன் said...

நம்பிக்கைதானையா வாழ்க்கை நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் வாழ்க்கை எனும் சில்லே சுழல்கிறது எங்கோ தனுஷ் சொன்னது

வெங்கட்ராமன் said...

/////// மாத்திடுவோம்,ஆனால் மாற்றிய பிறகு அவுங்க மூடிட்டா??

வேற யாராவது கட தொறக்காமயா போப்போறாங்க . . . .?

தமிழ்பித்தன் said...

சரியா சொன்னியள் கடை திறக்கத்தானே ஆயிரம் பேர் காத்திகிட்ருக்காங்கள் ஆனால் ஒன்று இப்படியான தளங்களில் அதி முக்கியமான பைல்களை சேமிக்க முயலாதீர்கள் சும்மா பொழுதுபோக்குக்கு ஏதும் வீடியோ பாடல் என்பவற்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்