இணையம் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் தேவைகளை கேள்விகளாக!, பின்னூட்டமாகவோ அல்லது அருகிலே காணப்படுகின்ற எனது மின்னஞ்சலுகே அனுப்பி வைக்கவும். அதற்க்கு, இயன்றளவு பதில் அளிக்க முயல்கிறேன். இதனால் சில கேள்விகளுக்கு இந்த சின்ன மூளையால் பதிலளிக்க முடியா விடினும் உங்கள் இணையம் தொடர்பான தேவையை உணர்ந்து பதிவெழுத இயலும்.
எங்கே நான் எழுதுவன ஆற்றில் இட்ட உப்புப்போல் ஆகிவிடுமோ? என்ற அச்சத்தை தவிர்க்கவே இந்த வழி. எனது பதிவால் ஒருவர் ஏனும் பயனடைந்தாலே எனக்கு மகிழ்ச்சியே!
இத்துடன் அண்மையில் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலை இணைக்கிறேன்.
கேள்வி:-நண்பரே,
இதே போல் windows ல் இயங்கும் மென்பொருள் இருந்தால் தயவு சொல்லவும் என இப்பதிவை ((லினக்கிசில் இயங்கக்கூடிய இலவச இசை உருவாக்கும் செயலிபற்றிய பதிவில்))) வாசித்து விட்டு இளைய கவியும், கானாபிரபாவும் கேட்டிருந்தார்கள்
பதில்:-அண்ணை! இதுதான் நான் பாவிக்கிற விண்டோஸில் இயங்கக் கூடிய இசையமைக்கும் மென்பொருள் இதன் பெயர் Danse 7 இதன் விலை $19.99
இதன் அதிகாரபூர்வ தளம்
http://www.ejay.com/
கொசுறு:- கேள்வி கேட்பதாக கூறி தம்பியை பைத்தியமாக்க முயல வேண்டாம்.
Tuesday, December 25, 2007
கேள்விகேட்க நீங்கள் தயாரா? பதிலளிக்க அல்லது தெரியாவிடின் ஒளித்துக் கொள்ள நான் தயார்!
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
வகைப்படுத்தல் கேள்வி- பதில்
windows media center இப்போது இலவசமா??
விண்டோசின் இறுதி இயங்குதளமான வீஸ்டாவுடன் விண்டோஸ் மீடியா சென்ரர் என்றும் வந்தது பல DVD ரசிகர்களை இது வளைத்துப் போட்டுக் கொண்டது. ஆனால் இதோ செயற்பாடுகளுடனும் இடைமுகப்பு தோற்றத்துடனும் MediaPortal எனும் மென் பொருள் வெளியிட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் இலவசமானதும் திறந்த மூல மென்பொருளும் ஆகும்.
இதில்
வீடியோக்கள் ((divx, mpeg... .இவையும் இயங்குமாம்))
ஓடியோக்கள்
போட்டோக்கள்
இணைய தொலைக் காட்சிகள் வானொலிகள் ((தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம்...)))
வானிலை என பிரமாண்டமான வடிவமைப்பாக காட்சி தருகிறது.
இதில் விண்டோஸ் மீடியா சென்ரரில் இல்லாத வசதிகளாக கேம்ஸ் ((Tetris or Sudoku! இவை உட்பட)) RSS ஐ காட்சிப்படுத்துதல் என மேலும் பல அட்டகாச வசதிகளும் இருக்கிறது.
இதற்க்கு எங்களுக்கு பிடித்தமான இடைமுகப்புக்களுக்கான நீட்சிகளும் கிடைக்கின்றன.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்க்கும் :-http://www.team-mediaportal.com
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் மீடியா
Sunday, December 23, 2007
PDF ஏன்? எதற்க்கு? எப்படி? ((IT த் தொடர்)) பாகம் 1
PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கமே ஆகும். 90 களின் ஆரம்பத்தில் இதன் பயணம் ஆரம்பித்தாலும் இது அக்காலத்தில் வையக அகண்ட விரி வலை என அழகு தமிழில் செல்லமாக அழைக்கப்படுகின்ற இணையத்திற்க்கு இயல்பு பெற்றிருக்க வில்லை
இப்பொது இதை உருவாக்க பல செயலிகள் மென் பொருட்கள் இருந்தாலும் அன்று இவருக்கு Acrobat என்பவரை விட்டால் நாதி இருக்க வில்லை
இன்று இதன் தாக்கமானது இணையத்தில் ஓர் அங்கமாகுமளவுக்கு வியாபித்து விட்டது இதன் முக்கிய பங்காக மின் புத்தக வடிவில் மக்களை ஆக்கிரமித்திருக்கிறது மற்றும் பல வடிவங்களிலும் இது பயன்படுகிறது
PDF Version | Year of Publication | new features | supported by Adobe Reader version |
---|---|---|---|
1.2 | FlateDecode | Acrobat Reader 3.0 | |
1.3 | 2000 | Acrobat Reader 4.0 | |
1.4 | 2001 | JBIG2 | Acrobat Reader 5.0 |
1.5 | 2003 | JPEG2000 | Adobe Reader 6.0 |
1.6 | 2004 | Adobe Reader 7.0 | |
1.7 | 2007 | Adobe Reader 8.0 |
மேலே உள்ள அட்டவனை PDF இன் மேம்பாட்டுப் போக்கை காட்டுகிறது
அடுத்து வரும் பாகத்தில் எப்படி ஒரு PDF பைலை உருவாக்குவது என பார்ப்போம்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் ஏன்? எதற்க்கு? எப்படி?
Saturday, December 22, 2007
ஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ
ஒரு கிளிக்கில் அனைத்து திறந்த மூல இணைய செயலிகளைகளை ((Open Source internet applications)) நிறுவ இந்த பொதி உதவும் இதனால் இணைய அறிவு உடையவர்கள் தான் இணையத்தை நிறுவி பயன்படுத்த முடியும் என்ற வரவிலக்கணம் உடைத்தெறியப்படுகிறது.
இதன் பயன்கள்
- இலகுவான நிறுவல் மற்றும் பராமரிப்பு ஒரிரு சொடுகளில் அலுவல் முடிந்து விடும்
- அனைத்து இயங்குதளத்துக்கும் ஏற்புடையது
- அனுமதி உரிமம் உடையது
- முற்றிலும் இலவசமானது
மேலதிக விபரங்களுக்கு:-http://www.makeuseof.com/dir/bitnami/
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
வகைப்படுத்தல் வலைத்தள வடிவமைப்பு
Friday, December 21, 2007
இசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்
நீங்கள் இசைப்பிரியரா உங்கள் கணணியில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய இசையை உருவாக்க விருப்பமா? கவலையை விடுங்கள் லினக்ஸில் இயங்கக் கூடிய இலவச திறந்த மூல மென்பொருள் உங்களுக்கு உதவும். பல வித ஒலிகளை உருவாக்கவதுடன் உங்களால் அவற்றை கலந்து சிறந்த ஒரு இசையை உருவாக்கவும் முடியும்
மேலதிக செய்தி் மற்றும் தரவிறக்கம் :-http://www.hydrogen-music.org
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் இலவச மென் பொருட்கள், ஓடியோ, மென் பொருட்கள்
Thursday, December 20, 2007
அதிகார பூர்வமாக பயர் பாக்ஸ் 3 Beta 2 வெளிவந்தது
இதில் பாதுகாப்பு மற்றும் பல மேம் படுத்தப்பட்டுள்ளன உடைந்து தெரிந்த தமிழ் எழுத்துருக்கள் உடையாமல் தெரிய ஆரம்பித்திருக்கின்றன வேறு என்னத்தை சொல்ல போய் பதிவிறக்கி பாவியுங்கோ!
இவைதானாம் புது அம்சங்கள்
New location bar that shows history and bookmarks
Improved security features including anti-virus integration in the download manager and stricter SSL error pages
Better password management
Easier add-on installation
New download manager with resumable downloading
Full page zoom
One-click bookmarking
New graphics and font rendering architecture
Over 330 memory leak fixes
மேலும் தெரிந்து கொள்ள;-http://www.downloadsquad.com
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
Saturday, December 15, 2007
adobe air+ wordpress=Air press வேட்பிரசின் புதிய பரிமாணம்
வேட்பிரஸ் உடன் அடோப்பின் எயார் இணைந்து சிறந்த இடைமுகத்துடன் கூடிய Air press என்ற வலைப்பதிவுச் செயலியை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்
www.airpress.org
*மிக அழகான இடைமுகப்பு
*FTP இன்றியே வீடியோ ஓடியோ இணைக்கும் வசதி (நேரடியாக பதிவேற்றல்)
*வீடியோ பதிவுக்காக வெப்காம் மூலமாக நேரடியாக (record) பதியும் வசதி
*வேட்பிரஸ் போல் அல்லாது நிறுவுதல் பராமரித்தல் பதிதல் இலகுவவாக்கப் பட்டுள்ளன
//////////////////////////////////////////////////////////////////////////////////
- Custom/animated windows
- Embedded database for offline read/creation of posts
- Detection offline/online
- File I/O API for saving FLV webcam videos record
- ActionScript/JavaScript Script bridging to interact with the text editor made in HTML/javascript.
- Drag and Drop Support for the media (pictures, sounds, videos, flash animations) you want to insert in your post.
- Network communication with the blogs via XML-RPC
import blog
View/Edit posts
Add post
Text editor
ஓடியோ பதிதல் insert audio
வீடியோ பதிதல் Record video
நன்றி:-http://jaypeeonline.net
கொசுறு:- ரவிசங்கர் அண்ணா! செயலிகள் செயலிகள் எத்தனை வலைப்பூ செயலிகள் என்று பதிவு போடாதிர்கள்
பதிந்தது தமிழ்பித்தன் 7 கருத்துக்கள்
வகைப்படுத்தல் வலைப்பூ
Wednesday, December 5, 2007
blogger open ID க்கு இயல்பு பெற்றுவிட்டது
இது வரை காலமும் உங்கள் blogspot வலைப்பூவில் அதே(blogger) கணக்கு வைத்திருப்பவரால் மட்டுமே கருத்திட முடிந்தது மற்றவர்கள் அனானியாக அல்லது தனது தளத்தை பதிவு செய்து பின்னூட்டம் இட வேண்டி வந்தது அதாவது WordPress.com , Livejournal, Typekey போன்றவற்றில் வலைப்பதிபவர்கள் bloggerல் வலைப்பதிபவர்களுக்கு தங்கள் கணக்கினூடாக பின்னூட்டம் இடச்செய்யலாம்.
செய்முறை:-
http://draft.blogger.com இங்கு செல்லவும்
setting---->comments ----->who comments------>register user include open ID அல்லது Anyone என்பதை தெரிவு செய்து பின் சேமிக்கவும்.
இப்போது அனைத்தும் சரி உங்கள் புளாக்ரில் இனி WordPress.com AOL/AIM, Livejournal, Typekey OpenID
((opinid.net இது சிறந்த ஒரு open ID வழங்கி))
போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி நேரே அவர்கள் கணக்கை உட்புகுத்தி புளாக்கரில் கருத்திடலாம்
நன்றி:- draft blogger
பதிந்தது தமிழ்பித்தன் 3 கருத்துக்கள்
வகைப்படுத்தல் வலைப்பூ