Saturday, September 29, 2007

ஜிமெயில் 9GB யில் காலலெடுத்து வைத்தது


அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் சேவை வழங்கிகள் தங்கள் மின்னஞ்சலின் இடக்கொள்ளளவை அதிகரிப்பதும் அல்லது வரையறையற்றதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தின ஆனால் கூகிள் மட்டும் நிதானமாக இருந்தது அது தனது மின்னஞ்சலின் தரத்தை மையப்படுத்தி நகர்வை மேற்கொண்டது.
ஏனெனில் பெரும்பாலான பாவனையாளர்களுக்கு இந்த 3GB என்பதே மிகப் பெரிய விடயமாக தான் இருந்தது

ஆனாலும் கடந்த தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது வாடிக்கையாளருக்கு 9GB ஐ வழங்கியது அதுவும் தான் தெரிவு செய்த நீண்ட நாள் அல்லது அதிகம் ஜிமெயிலை பயன்படுத்துவோர் என கருதுவோருக்கு வழங்கியிருக்கிறது. இதை அதன் பரிசோதனை முயற்சி என்னும் கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.


மொத்தத்தில் விரைவில் ஜிமெயில் தனது சேவையின் இடக்கொள்ளளவை அதிகரிக்கும் என நம்பலாம்.

கொசுறு:- எனது மின்னஞ்சலில் இன்னும் 500MB தாண்ட வழியை காணோம் அதுக்குள்ள 9GB எல்லாம் எதற்க்கு

2 கருத்துக்கள்:

மா சிவகுமார் said...

தமிழ்ப் பித்தன்,

கூகிள் எல்லோருக்கும் 9GB ஆக மாற்ற வேண்டியதிருக்காது. யார் யார் 2 GB பயன்பாட்டைக் கடக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் உயர்த்தினால் போதுமே! உங்கள் கணக்கும் 2 GBயை நெருங்கும் போதும் கூட்டி விடுவார்கள்.

Google Apps மின்னஞ்சல் சேவையில் ஒரு தளத்துக்கு 25 முகவரிகள் தருகிறார்கள். அது நிரம்பி விட்டால் ஒரு வேண்டுகோள் விடுத்தால் உடனடியாக அது 100 ஆக உயர்ந்து விடுகிறது. அதே போலத்தான் இந்தக் கொள்ளளவும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

தமிழ்பித்தன் said...

சிவகுமார் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை எனக்கு 3GB இடக்கொள்ளளவு எனில் யாகூ தனது சேவரில் நேரடியாக ஐ ஒதுக்கபோவதில்லையே அப்படியிருக்க 3GB நிரம்பினால் அதிகரிப்பார்கள் என்ற வாதத்தை சற்றே சிந்திக்க வைக்கிறது. கூகிள் முக்கியமாக இடக் கொள்ளவை விட அதன் பயன்பாட்டை கருத்தில் எடுக்கிறது.
உதாரணமாக சிலர் ஒரு கணக்கை திறந்து ஒரு மின்னஞ்சல் குழுமத்தில் அதை பதிந்து விட்டு என்றாவது ஒரு நாள் அதை திறக்கிறார் எனில் அவருக்கு கொள்ளளவு நிரம்பியும் கூட்டிக்கொடுக்க மறுக்கிறது அதையும் தாண்டி அது தனது சேவையை தினமும் பயன்படுத்துபவருக்கு தர முன்வருகிறது அதுதான் கூகிள்.....