Friday, September 28, 2007

வழியனுப் வாரீங்களோ??


யாகூ தனது 2வருட ஆயுள் கொண்ட போட்காஸ்டிங் சேவையை வருகிற ஒக்டோபர் 31ம் திகதி மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. இது வரை காலமும் ஒரு நல்ல போட்காஸ்டிங் சேவையாக இது இருந்ததா? என்று பலர் சந்தேகம் கொள்வதில் நீயாயம் இருக்கத்தான் செய்கிறது. யாகூ சேவைகளில் இது ஒரு கறையாக இருந்தது இனியும் இருக்கும்.


மக்கள் போட்காஸ்டிங்கை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும் அதிவிரைவு இணையத்தின் சாத்தியத்தினால் வீடியோவின் பரம்பலின் வேகத்துடன் இந்த ஒலிவகை போட்காஸ்டிங்கால் எதிர்த்து போராட முடியவில்லை, என்பதே சிலரின் கருத்து. ஆனாலும், இப்போதும் பல தளங்கள் போட்காஸ்டிங் சேவையில் சக்கை போடு போடுகின்றன என்பதை எவராலும் மறக்க முடியாது.

உதாரணமாக PodcastAlley, Podcast Pickle மற்றும் Odeo.


இத்தனை தளங்கள் இருக்க யாகூ மட்டும் மூட காரணம்

1) அது எப்போதும் முற்று முழுதான லாபத்தையே மட்டுமே கணக்கப் பண்ணும்


2) இதன் சேவைகள் கவரக்க கூடியதாக இல்லாமல் இருந்தது((இதில் பதிந்தால் வேறு இடத்தில் அதை பொருத்தி பகிர்ந்து கொள்ள முடியாது))


3)யாகூ தன் கவனத்தையும் பலத்தையும் வீடியோ தளத்தில் காட்ட நினைக்கிறது

சரி! எதுவாக இருந்தாலும் போட்ட BETA நாமம் கழலும் முன்னே அப்படியே புறப்பட்டு விட்டார் யாகூ மைந்தன். சரி எதுக்கும் கடைசியாய் போய் ஒருக்கா ஒப்பாரி வைத்துட்டு வாங்கோ!

0 கருத்துக்கள்: