எங்கேயிருந்து எப்படி ஆப்பு வைப்பாங்கலெண்டு தெரியாமல் கிடக்கு! நானும் எனது வலைப்பதிவும் என்று என்ற பாட்டுக்குத்தான் இருந்தனான். அதுக்கிடையில இந்த https://www.widgetbucks.com கண்ணுல பட்டுத் தொலைக்க நானும் நாலு காசு சம்பாதிச்சுப் பார்ப்பம் என்று இதை எனது தளத்தில் நிறுவி பலருக்கு அறிவுரையும், கூறினேன். பல தளங்கள் ஆங்கிலம் மட்டுமே எனக் கூறிக் கொண்டிருக்க இது மட்டுமே தான் எல்லா மொழிகளுக்கும் இசைவாக்கம் பெற்றவன், என்று தம்மட்டம் அடித்தமையே இதற்க்கு காரணம், எல்லா வலைப்பதிவாளர்களும் விழுந்தடித்துக் கொண்டு பதிந்தார்கள். நானும் பதிந்து நானே கிளிக் செய்து ஒரு 150$ வரை சேர்த்திருந்தனான். நானும் விடிய வழமைபோல் மின்னஞ்சலைப் பார்வையிடும் போது "உமது தளம் ஆங்கிலம் அற்ற காரணத்தால் உங்கள் கணக்கு நீக்கப்படுகிறது" என்று கூலாக அனுப்பியிருக்கிறார்கள்.
புதிசு! புதிசா! கண்டிசன் கண்டுபிடிக்கிறார்களே! ஆனால் நம்ம தல கூகிள் வேற்று மொழிகளை தடை செய்யும் போது பழைய வாடிக்கையாளர்களில் கைவைக்க வில்லை மாறாக புது பதிகையாளர்களையே நிறுத்தியது தல தலதான் போங்கள்
நான் பரவாயில்லை எனது நண்பன் பாலதர்ஷன் இதையே புல்ரைம் வேலையாக எடுத்து கிளிக் செய்து ஏதோ எக்கச்சக்கமாக ஏத்தி வைச்சிருந்தவன் இந்த செய்தி கேட்டு அவனுக்கு பித்தும் பிடித்துவிடும் போல கிடக்கு அனைவரும் மன்னியுங்கோ!
இதனால் ஏமாற்றப்பட்ட அனைவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்!
Saturday, November 10, 2007
வைச்சுட்டானையா ஆப்பு
வகைப்படுத்தல் பணம் பண்ணலாம்
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
ஹிஹி.. இப்பத்தான் தெரிஞ்சிதா!
:)
கிளிக் பண்ணினா காசு சரி!
கிளிக் பண்னுறது யாரு? நீண்ட நாட்களுக்கு நமக்கு நாமே திட்டம் வொர்க் அவுட் ஆகுமா? அதுக்கு அவங்க அக்ரிமெண்ட் ஒப்புதல் தருதா?////
இது நீங்கள் இந்த தளத்தை அறிமுகம் செய்யும் போது இட்ட பின்னூட்டம் இதில் மறு பதிதல் பொருத்தம் என்றே நினைக்கிறேன்
என்ன செய்யிறது சிபி அண்ணை சில வேலை முள்ளு குத்தின பிறகுதான் செருப்புப் போட தோனுது
Post a Comment