Friday, November 30, 2007

கூகிளிக்கு இந்த வில்லனால் $110 மில்லியன் நஷ்டாமா?


கூகிளில் என்ற ஒரு "I’m feeling Lucky" ஆப்சன் இருப்பதை அறிந்திருப்பீர்கள். தேடும் போது இதனை பயன்படுத்தினீர்களேயானால் நீங்கள் தேடலின் முடிவுகளுக்கு அழைத்து வரப்படாமல், மாறக சிறந்த பக்கம் என்று கருதப்படுகின்ற ஒரு பக்கத்துக்கு அழைத்து வரப்படுகிறீர்கள். இது நேரத்தை மிச்சப்பத்துவதில் நன்றாக உதவி செய்வதாக கூறி நம்மள மாதிரி பெரிய புள்ளிகள் (ஹி..ஹி) இதைத்தானாம் பாவிக்கினம். அதனால், கூகிளுக்கு அந்த தேடல்களுக்கான விளம்பரம் இட முடியாமல் இருக்கிறதாம். இதனால்தானாம் வருடத்துக்கு $110 மில்லியன் நஷ்டம் ஏற்படுகிறதாம். யாரோ கேட்டாங்களாம் "ஏன் நஷ்டம் என்று தெரிந்தும் அதை வைத்திருக்கிறீர்கள் அதை தூக்கலாம் தானே?" என்று, அதற்க்கு அவர்கள் "எங்களுக்கு கரன்சி பெரிதில்லை கஸ்டமர் தான் பெரிது" என்று அடித்துச் சொல்லி விட்டார்களாம்
தல தல தான்

மேலதிக செய்தி்- tech -bu
zz

Wednesday, November 28, 2007

இது வரை வால் காட்டி வந்த தளமும் HACK செய்யப்பட்டது

இந்த வலைப்பூ ஆரம்பித்த நாளிலிருந்து எப்படியும் இதை HACK செய்ய வேணும் என்ற அவா மிகுதியாகவே இருந்தது. ஆனாலும் எனது தேடலுக்கு பலன் இது வரை கிடைத்ததாக தெரிய வில்லை. ஆனாலும் நானும் என்னிடம் இருக்கிற சிறிய மூளையை வெச்சு ஏதாவது செய்யலாமா? என்று யோசிச்சதன் விளைவு இந்த முறை ஆனாலும் இந்த முறை rapidshareல் தாக்கம் ஏற்படுத்தா விடினும் இது வேறு தளத்தின் உதவியுடன் உடைக்க முடிகிறது. இதனால் எனது கையால் காசு செலுத்த மாட்டேன் என்ற வாதத்தில் நான் வெற்றி பெற்றேன்.
முறை


1)paypal க்கு சென்று ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்.
தேவையற்ற தகவல்களை தவிருங்கள்.




2)பின் $6.00 Welcome Survey After Free Registration! என்ற தளத்துக்கு சென்று ஒரு கணக்கை திறவுங்கள் அவர்கள் அங்கே survey எடுக்கிறார்கள் அந்த surveyல் பங்கு பெறுவதன் மூலம் நீங்கள் 6$ வரை ஒரு தடவையில் சம்பாதிக்க முடியும் நான் இது வரை((ஒரு வாரம்)) 30$ வரை சம்பாதித்து விட்டேன் இதில் உள்ள மற்ற சிறப்புக்கள் நீங்கள் சம்பாதித்த பணத்தை 24 மணிநேரத்தினுள் paypal க்கு மாற்ற முடியும். (((இதை நான் 95% பரிந்துரை செய்கிறேன்))

அல்லது


AuctionAds என்ற விளம்பர நிறுவனத்தில் கணக்கை திறந்து அதற்கு paypal இன் கணக்கை வழங்குதல் ((தமிழுக்கம் ஆதரவு தருகிறது))



என்ற 25$ வரை தருகின்றது இன்னும் ஒரு 25$ களுக்கு நீங்கள் கிளிக் செய்தல் வேண்டும்
((இது அனைத்து மொழி தளங்களுக்கும் ஒத்திசைக்கிறது))))
எவ்வளவு குறுகிய காலத்தில் பணத்தை எடுக்கலாமோ அவ்வாறு பணத்தை எடுங்கள் . அதாவது paypal க்கு மாற்றுங்கள் பேந்து ஏன் தயக்கம் paypal கணக்கை வைத்து rapid shareல் கணக்கை திறக்க வேண்டியதுதானே, இணைத்தில் தினமும் 1 நிமிடம் எமது விளம்பரத்துடன் நேரம் செலவழித்தால் இணைய செலவுக்குப் போதுமான பணம் கிடைத்து விடும்.
இது ஆரம்பமே இனியும் தொடரும்.....

((( இம்முறையில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்))))

Friday, November 23, 2007

Camtasia Studio - 5 இப்போது இலவசமாக


Camtasia Studio ஆனது கணணித் திரையில் இயங்கும் செயற்பாடுகளை வீடியோவாக படம்(screencasting software) பிடிக்க உதவும். இந்த மென்பொருள் இதுவரை காலமாக தன் விலை நிர்ணயத்தை $300 என்றே வைத்திருந்தது. ஆனாலும் சில நாட்களுக்கு முன் இதை இலவசமாக அறிவித்து அசத்தியிருக்கிறார்கள் tech smith நிறுவனத்தார். இந்த மென்பொருளைக் கொண்டு கணணித் திரையில் நடப்பவற்றை மிகவும் துல்லியமாக வீடியோப் படமாக்க முடியும் iPod, Flash movies, QuickTime and Windows Media ஆகிய வகைக் கோப்புக்களில் இதன் வீடியோக்களை சேமித்துக் கொள்ளலாம்.

இந்த மென் பொருளை பாவித்துத்தான் ரவிசங்கர் அண்ணா பல இணைய விளக்கப்படங்களை எடுத்தவர்(இங்கே). இது இப்பொது இலவசமாக கிடைப்பதால் தன்னார்வ இணைய வழி வழிகாட்டல்கள் (கல்வி) அதிகரிக்கும் என நம்பலாம்.
இதை பதிவிறக்க இங்கே
இலவசமாக பதிந்து கொள்ள இங்கே

Wednesday, November 21, 2007

ஒலிப்பதிவுகளில் உள்ள ஒலிகளை தரவிறக்க!



eSnips, Imeem, iJigg, Last.fm, Pandora, Myspace, eSnips, Mog, என எங்கிருந்தாலும் ஒரு கிளிக்கில் பதிவிறக்க உதவுகிறது.

1) install;-- இந்த சுட்டியை கிளிக் செய்து Free Music Zilla என்ற மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

2) இப்போது நீங்கள் மேலே கூறிய ஏதாவது தளத்துக்கு சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய பாடலை இயங்கச் செய்யவும் அப்போது நீங்கள் நிறுவிய Free Music Zilla பதிவிறக்கவா என கேட்கும். நீங்கள் "Download" எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் அப்பாடல் தரவிறக்கப்படும்.

தரவிறக்க தயாராகவுள்ள காட்சி

தளமுகவரி:--- http://www.freemusiczilla.com

Monday, November 19, 2007

அதிசய மெயில் அறிமுகம்!




ஆங்கில ஊடகங்களின் உச்ச பட்ச ஆதரவுடனும் பலரின் எதிர்பார்ப்புடனும் இவர் களத்தில் இறங்குகிறார்
பலருக்கு யாகூ ஜீமெயில் எனப் பாவித்து அலுத்து விட்டது. ஏதாவது புதுசா தினிசா ஏதாவது மெயில் வசதியிருக்கா எனத்தேடிப் பார்த்த வேளையில் பல அருமையான வசதிகளை கொண்டிருக்கிறது தெரிகிறது.
இதிலுள்ள வசதிகள்
*அனுப்பிய மின்னஞ்சலை மீளப் பெற்றுக் கொள்ளலாம்
*வரையறையற்ற இடக்கொள்ளளவு
*அதிகூடிய மின்னஞ்சல் பதிவேற்றம் (attachment)
*வீடியோ மெயில்
*அதியுயர் ஸ்பாம் வைரஸ் பாதுகாப்பு
*விரும்பிய மின்னஞ்சல்களிலிருந்து அனுப்புவது போல அனுப்பலாம்
*இலகுவான முறையில் அனிமேசன் எபெக்ற் செய்து அனுப்பும் வசதி.
மேலும் பல வசதிகள்.....
http://www.bigstring.com/

வீடியோ மின்னஞ்சல் அனுப்பு காட்சி


NBC செய்தியில் வந்த காட்சி

Wednesday, November 14, 2007

உஷ்.... சத்..தம் போடாமல் ... உள்ள வாங்கோ!


ஆங்கிலப் படங்கள் என்றால் யாருக்குத்தான் பார்க்க விருப்பமிருக்காது. அவற்றை இலவசமாக இணையத்தில் தரவிறக்கி பார்க்க பல தளங்கள் இருக்கின்ற போதும் அவற்றை தரவிறக்கிப் பார்க்க பலருக்கு பொறுமை இருக்காது. அதே ஒன்லைனி்ல் பார்க்க கூடியவாறு இருந்தால் எப்படி இருக்கும்.

http://www.watch-movies.net/


mega upload, veoh ,stage6 போன்ற தளங்களின் உதவியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனர்கள் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இங்கே பல வேறு வீடியோ தளங்களில் பதியப்பட்ட வீடியோக்கள் காணப்பட்டாலும் எது சிறந்தது. என பரிந்துரை செய்கிறார்கள் தினம் தினம் இங்கே காணப்படும் திரைப்படங்கள் புது மெருகு ஊட்டப்படுகின்றன. தரம் குறைவு என கருதப்படுவன அழிக்கப்பட்டு அதற்க்கு பதில் புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டு இங்கே காட்சிப்படுத்தப்படும்.

அண்மையில் வெளிவந்த american gangster, bee movie, Dan in Real Life
Lions for Lambs போன்ற படங்கள் தற்போது இங்கே சக்கை போடு போடுகின்றன.

american gangster பல தெரிவுகளாக காட்சிதருகிறது

<

Tuesday, November 13, 2007

esnips இன் புதிய செவை!


esnips ஆனது Social network என்கின்ற நட்புறவு பகுதியையும் தனது தளத்தில் இணைத்திருக்கிறது. பெருகிவரும் இந்த வகையான தளங்களின் மோகத்தை புரிந்து கொண்ட இது தனது பாணியிலேயே இதை உருவாக்கிருக்கிறது அதாவது, இது நட்புறவை வீடியோ மற்றும் ஓடியோவை மையமாக வைத்து ஆரம்பித்திருக்கிறது.

ஏதோ நன்னாயிருந்தால் சரி

Saturday, November 10, 2007

வைச்சுட்டானையா ஆப்பு


எங்கேயிருந்து எப்படி ஆப்பு வைப்பாங்கலெண்டு தெரியாமல் கிடக்கு! நானும் எனது வலைப்பதிவும் என்று என்ற பாட்டுக்குத்தான் இருந்தனான். அதுக்கிடையில இந்த https://www.widgetbucks.com கண்ணுல பட்டுத் தொலைக்க நானும் நாலு காசு சம்பாதிச்சுப் பார்ப்பம் என்று இதை எனது தளத்தில் நிறுவி பலருக்கு அறிவுரையும், கூறினேன். பல தளங்கள் ஆங்கிலம் மட்டுமே எனக் கூறிக் கொண்டிருக்க இது மட்டுமே தான் எல்லா மொழிகளுக்கும் இசைவாக்கம் பெற்றவன், என்று தம்மட்டம் அடித்தமையே இதற்க்கு காரணம், எல்லா வலைப்பதிவாளர்களும் விழுந்தடித்துக் கொண்டு பதிந்தார்கள். நானும் பதிந்து நானே கிளிக் செய்து ஒரு 150$ வரை சேர்த்திருந்தனான். நானும் விடிய வழமைபோல் மின்னஞ்சலைப் பார்வையிடும் போது "உமது தளம் ஆங்கிலம் அற்ற காரணத்தால் உங்கள் கணக்கு நீக்கப்படுகிறது" என்று கூலாக அனுப்பியிருக்கிறார்கள்.

புதிசு! புதிசா! கண்டிசன் கண்டுபிடிக்கிறார்களே! ஆனால் நம்ம தல கூகிள் வேற்று மொழிகளை தடை செய்யும் போது பழைய வாடிக்கையாளர்களில் கைவைக்க வில்லை மாறாக புது பதிகையாளர்களையே நிறுத்தியது தல தலதான் போங்கள்

நான் பரவாயில்லை எனது நண்பன் பாலதர்ஷன் இதையே புல்ரைம் வேலையாக எடுத்து கிளிக் செய்து ஏதோ எக்கச்சக்கமாக ஏத்தி வைச்சிருந்தவன் இந்த செய்தி கேட்டு அவனுக்கு பித்தும் பிடித்துவிடும் போல கிடக்கு அனைவரும் மன்னியுங்கோ!

இதனால் ஏமாற்றப்பட்ட அனைவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்!

Friday, November 9, 2007

50 GB வரையான பைல் சேமிப்பான்


இது 50GB வரையான பைல்களை சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
* அனைத்து வகையான பைல்களையும் ஏற்றுக் கொள்கிறது
* அதிவிரைவான பதிவேற்ற இறக்கம்
* பைலுக்கு கொள்ளளவு வரையறை இல்லை

http://www.adrive.com/

மேலதிக தகவல் இங்கே

Monday, November 5, 2007

கூகிளின் கணணியும் அதன் இயங்குதளமும் இப்போது கடைகளில்


கூகிள் தனது ஓப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய கணணியை விற்பனைக்கு விட்டிருக்கிறது இதன் ஆரம்ப விலை 199$ எனவும் தெரிகிறது. இவை தற்போது வால்மாட் கடைகளில் கிடைக்க கூடியதாக இருக்கிறது
அதன் உத்யோக பூர்வ தளம்
http://www.thinkgos.com/



gOS Operating System
VIA C7-D 1.5GHZ Processor
512MB RAM, 80GB HD, CDRW/DVD

என அம்சங்களை கொண்ட இது கணணியின் பரம்பலை அதிக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதாவது இதன் மூலம்
Ubuntu 7.10 Linux system ஐ சில மாற்றங்கள் செய்து GOS ஆகவும்
OpenOffice.org 2.2 ம் காணப்படுகிறது


அதைத்தவிர ஜீம்ப்(gimp), ஸ்கைப்(skype) dvd burner போன்றனவும் இதனுடனே வருகிறதாம் அதாவது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற ஒரு வீட்டுப்பாவனை கணணி என்றால் அது இதுதான்
ஓசி மென் பொருட்களை திரட்டி இதமாக வழங்கியிருக்கிறது கூகிள்
பிழைக்கத் தெரிந்தவன்!
மேலதிக விபரம்;- inside google

பைல் சேமிப்பு தளங்கள் பத்து

#1 RapidShare
தரவேற்ற 100 MB வரை அனுமதிக்கிறார்கள் பதிவேற்ற பதிவிறக்க வேகம் பெயருக்கேற்றால் போல் அமைந்து இருக்கிறது ஆனால் இதன் தரவிறக்கத்தில் தான் பிரச்சினையே கட்டண பதிவர்கள் பிரச்சினை இன்றி பதிவிறக்கலாம் மற்றவர்கள் பலவாறு காத்திருக்க வேண்டும் பதிவிறக்க.
#2 MediaFire
இதன் பைல் பாதுகாப்பு நிறைந்தது
#3 Badongo
இதில் 1 GB வரை பதிவேற்றலாம்
#4 zShare
images, videos, audio and flash ஆகியபைல்களை பதிவேற்றி பகிர்நது கொள்ளலாம்

#6 EasyShare
1oo MB பதிவேற்றம் இலகுவானது
#7 FileFactory

#8 XTube

#9 Megarotic

#10 FileDen

Sunday, November 4, 2007

கூகிள் வீடியோவின் புதிய வசதி!


http://video.google.ca/
கூகிள் வீடியோ இப்போது எங்கிருந்தாலும் தேடித்தருகின்ற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் படி கூகிள் தனது தளத்தையும் தாண்டி எங்கிருந்தாலும் எடுத்து உங்கள் தேடலுக்கு தருகிறது அது சாதாரண மன்றத்தில் ஓர் மூலையில் இருந்தால் கூட அதை தேடி தர வரிசைப்படுத்துகிறது. இது தேடி தனது தளத்தில் இயக்குவதை தவிர்த்து அதற்க்கான இணைப்பை தருகிறது. ஏனெனில் இதனால் ஏற்படும் சட்ட சிக்கலை தவர்ப்பதற்காக எனக் கூறுகிறது. AVI, WMV, MOV or MPEG or FLV ஆகிய வகைக் கோப்புக்களை இது இனம் காணும் எனக் கூறுகிறது.
மேலதிக இணைப்பு;- இங்கே

நான் தேடிய இணைப்புக்கு கிடைத்த முடிவுகள் - இங்கே

Friday, November 2, 2007

ஒரே தடவையில்....


ஓரே தடவையில் நீங்கள் விரும்பும் அனைத்து பைல் சேமிப்புத் தளங்களிலும் உங்கள் பைலை பதிவேற்றலாம் இதற்க்கு இந்த தளம் உதவுகிறது.
http://tinyload.com

Thursday, November 1, 2007

சில தளங்களின் Halloween Logos

வட அமெரிக்காவில் நேற்று halloween கொண்டாட்டங்கள்இடம் பெற்றன. பல இணையத்தளங்களும் தங்களை நேற்றைய தினம் நிறப்பாக மாற்றிக் கொண்டன.அவற்றில் சிலவற்றின் logos