Saturday, March 31, 2007

யாகூவும் கூகிளும் இணைந்தன



யாகூவும் கூகிளும் யாரும் எதிர்பாராத விதமாக தாம் இணைந்து கொண்டதாக சற்றுமுன் அறிவித்தன இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்த இருநிறுவனங்களின் தலைவர்களும் அதனை உறிதிப்படுத்தும் விதமாக இரு தளங்களையும் பிரதிபலிக்க தக்க வகையில் ஓர் தேடு பொறியையும் அறிமுகம் செய்தனர் http://www.gahooyoogle.com/ ஆனாலும் அந்தந்த தேடு பொறிகள் தொடர்ந்து இயங்குமெனவும் தத்தம் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல இங்கே நகர்த்தப் படுவார்கள் எனவும் அறிவித்தன ஏன் திடீர் முடிவு எனக் கேட்ட செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த யாகூவின் தலைவர் தாம் இதற்கு முன் micro soft உடன் messenger தொடர்பாக ஒர் ஒப்பந்தம் செய்திருந்தோம் அதன்பின் சில காரணங்களுக்காக எமக்கு முறிவு ஏற்பட்டது அதன் வெளிப்பாடே இது வெகுவிரைவில் மின்னஞ்சல் புளொக் போன்றவற்றிலும் இணைந்து செயற்படுவோம் என்றார் micro softக்கு எதிராக வெகுவிரைவில் அனைத்திலும் இணைந்து சிறப்பாக செயற்படுவொம் இயங்குதளம் சார்பான ஆராட்சியிலும் ஈடுபடுவொம் என்றும் கூறினார்
இது பற்றி மேலதிக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன அவர்கள் இணைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றுடன் மீண்டும் விரிவாக எழுதுகிறேன்
இச்செய்தியால் பில்கேட்ஸ் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் விழிப்பார் என்று தெரிகிறது

நன்றி இது தமிழ்பித்தனின் முட்டாள் தினச் செய்தி அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ஆனால் ஏதே அந்தத் தளம் மட்டும் உண்மை யாரோ வேலையற்றவன் தயாரித்து வெளிவிட்டான் 7 மாதங்களுக்கு முன் அதை இப்படியாக சிந்தித்து வெளிவிட்டேன்

Thursday, March 29, 2007

blogக்கு வருவோரிடம் திட்டு வாங்க


எத்தனை நாளாக இந்த தமிழ்ப் பித்தனை திட்டித்தீர்க்க வேணும் என்று நினைத்திருப்பியள் இவ்வளவு நாளாக அடக்கிவைத்ததை அருகில் உள்ள பெட்டியில் கொட்டி விடுங்கள் நீங்களும் இப்படி திட்டு வாங்க நினைத்தால் http://www.evoca.com/ இங்கே சென்று பதிந்த அவர்கள் தரும் code எடுத்து உங்கள் blogger ல் பொருத்திவிடுங்கள் (wordpress பாவிப்போர் அவர்கள் தருவதை உங்கள் word press உடன் சேர்த்து நிறுவினால் சரி)
ஒருவர் இப்படி என்னைத் திட்டினார்

பைல் பகிர சிறந்த வழி


இணையத்தில் நீங்கள் ஏதாவது கோப்புக்கள் பதிவேற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினால் இதன் மூலம் உங்கள் தளத்தில் நேரடியாக தரவிறக்க கொடுக்கலாம் மற்றவர் தளத்தை நாட வேண்டியதில்லை அவர்கள் தரும் box ஐ இங்கே ஒரு தடவை பொருத்திவிட்டால் நீங்கள் அவர்களின் தளத்திலிருந்தே இந்தப் பெட்டியினுள் என்ன போடலாம் எந்தப் பைலை பகிரபொகிறீர்களே அதை பதிவேற்றிவிட்டு இங்கே பகிர்வதற்கான சில கட்டளைகளை பூர்த்தி செய்தால் சரி
http://www.box.net
கீழே உள்ளது எனது உதாரண பதிவு

Get your own Box.net widget and share anywhere!

Wednesday, March 28, 2007

யாகூ மெயிலின் வரையறை அற்ற இடக்கொள்ளவு


யாகூ தனது மின்னஞ்சல் பாவனையாளர்களுக்கு வரையறையற்ற இடக்கொள்ளளவு (Yahoo users get unlimited e-mail storage) வழங்க முன்வந்துள்ளது நேற்று அதை உத்தியோக பூர்வமாக அறிவித்த யாகூ மின்னஞ்சல் சார்பாக பேசிய ஓர் அதிகாரி இது யாகூவின் அமெரிக்க வாடிக்கையாளருக்கே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது எனவும் மே மாதம் முழு உலகத்துக்கும் திறந்து விடப்படும் என்றார் அவரை இடை மறித்த செய்தியாளர் ஒருவர் அப்படியானால் காசு கட்டி பயன் படுத்துபவர்களுக்கு மேலும் என்ன வசதியை சேர்த்திருக்கிறீர்கள் என்றார் அதற்க்கு அவர் சிரித்தவாறு வெகுவிரைவில் பதிவேற்றம் 20MB ஆக உள்ளது 50MB ஆக உயர்த்தப் படும் என்றார் மேலும் அவர் குறிப்பிடுகையில் கட்டண வாடிக்கையாளர்கள் தங்களிடம் பாதுகாப்பை நம்பியே வருகிறார்கள் அந்த நம்மிக்யை நாம் வீணடிக்க மாட்டோம் அவர்களுக்கு கொள்ளளவு பிரச்சினையாக இருந்ததில்லை என்றார் இதுவரை அறியப்பட்டதில் AOL தான் வரையறையற்ற இடத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது
இதை கேட்டு கூகிள் என்ன முடிவு எடுக்கப்போகிறதோ தெரியவில்லை

மேலதிக செய்திகள்
http://news.yahoo.com/s/afp/20070328/tc_afp/usitinternetcompanyemailyahoo

Monday, March 26, 2007

பாடல்களை பகிரவும் வானொலியாக்கவும்


http://www.mediamaster.com/
எனும் தளம் 4GB வரையான கொள்ளவைத்தருகிறது நாம் பாடல்கலை பதிந்து இதன் மூலம் பகிர்ந்த கொள்ளலாம் அல்லது feed இன் உதவியுடன் நாம்விரும்பும் பாடல்களை அங்கே பதிந்து வலைப்பூவில் தெரிய வைக்கலாம் ((((நான் அருகிலே செய்துள்ளது போல)))) அத்துடன் அங்கே பதிந்த பாடல்ளை வானொலியாக்கியும் கேட்டு பகிர முடியும்



வானோலிக்கான இணைப்பு
http://n91.mediamaster.com/myradio/tbiththan.pls

Sunday, March 25, 2007

template வடிவமைப்பு

நீங்கள் பலரின் வலைப்பூவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பீர்கள் அவர்கள் வலைப்பூ வடிவாக இருக்கிறதே நான் புளாக்ர் தர்வதையே பயன்படுத்துகிறனே என்று நானும் அப்படித்தான் இது வரை இரவல் templateதான் வசந்தன் தந்து உதவினார் இன்று முழுவதும் முயற்சி செய்து எனக்கென்று தனித்துவமான template ஐ வடிவமைத்தேன் அதற்கு பல தளங்கள் உதவின ஒரு தடவை நினைத்தேன் அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து வழங்கினால் என்ன வென்று அது கைகூடாத காரணத்தினால் அவற்றில் எனக்கு பிடித்த தளத்தை தருகிறேன் வடிவமைத்த பல template ம் இருக்கிறது விரும்பினால் அவற்றையும் பாவிக்கலாம்
http://hoctro.blogspot.com
(((ஆமாம் நான் கஸ்டப்பட்டு வடிவமைத்த template பற்றி ஒன்றுமே சொல்லலையே))))

youtube போலே இன்னும் சில

youtube பாவித்து சலித்துப் போனீர்களா ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் ஆகவே இதை பாவியுங்கள் என்று நான் சொல்வதை விட இருப்பதை தருகிறேன் பாவித்து விட்டு நீங்களே என்க்கு சொல்லுங்கள் எது திறம் என்று

இதுவும் ஒரு நல்ல வீடியோ தளம் தான் நிறைய fun வீடியோக்கள் இருக்கு இதிலே உள்ள சிறப்பம்சம் அவர்கள் தரும் மென்பொருளை பயன்படுத்தி நாங்கள் அவர்கள் தளத்தில் தேடி தரைவிறக்கம் செய்யலாம் (முந்தி நான் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது யாழ் நூலகத்தில் இதைப் பயன் படுத்தி தரைவிறக்க செய்து விட்டு போவோம் மறுநாள் அவற்றை வந்து பார்ப்போம் அதற்கு நிர்வாகிளும் என்னுடன் உடந்தை இல்லா விட்டால் என்ன வென்று இரவிரவாக கணிணியை இயங்கத்தான் விடுவார்களா? அங்கே வேகம் மிகக் குறைவு 64kps)




அவர்களின் மென்பொருள் இயங்கும் பொது இப்படித்தான் காட்சியளிக்கம்




இதைப்பற்றி அதிகம் எனக்கு தெரிய வில்லை என்றாலும் இதனை சிலர் புகழ்கிறார்கள் ஒப்பீட்டு ரீதியில் இது தரைவிறக்க வேகம் அதிகமாம்