Showing posts with label ஜிமெயில். Show all posts
Showing posts with label ஜிமெயில். Show all posts

Friday, April 10, 2009

ஜிமெயிலின் புதிய வசதி!


இது வரை மின்னஞ்சல் சேவைகளில் போட்டோ அனுப்ப விரும்பினால் "Attach" மூலமாகவே அனுப்ப முடியும். அதை எமது மின்னஞ்சல் தகவல்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது. மின்னஞ்சல் துறையில் பல மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களாகவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணமும் இருக்கும்; ஜிமெயில் இந்த வசதியையும் தருகிறது. இனி உங்களுக்கு விருப்பம் போல உங்கள் compose பெட்டிக்குள்ளேயே நீங்கள் விரும்பும் படத்தை இணைக்கலாம். விரும்பும் அளவுகளிலும் அனுப்பலாம். இனி புகைப்படங்களைப் பதிவிறக்காமலே பார்க்க முடியும்.

setting
click setting - click labs tab bar - enable inserting image
நேரடியான setting இங்கே அழுத்தவும்


இது தொடர்பான சிறுகாட்சித் துண்டு

Wednesday, October 24, 2007

ஜிமெயில் முகவரியை பிடித்தவருக்காக இப்படியும் மாற்றலாமா?


அசின் என்னோட தொடர்வு கொண்டு மின்னஞ்சல் முகவரியை கேட்டா நானும் சும்மா தனிய tbiththan@gmail.com என்று கொடுத்தால் அவ்வளவு சுவார்சயமாக இராது எப்படியாவது அவாந்த பெயரையும் இணைச்சு கொடுப்பம் என்றால் கணக்கு திறக்க நேரமும் காணாது உடனே இப்படி ஒரு முகவரியை கொடுத்தன் (பலர் இப்படித்தான் கனவு காணுறவ அதுக்கு கலைஞர் கிழவனையும் விடுகிறார்கள் இல்லை அந்தாலையும் எல்லோ கனவு காணுறாங்கள்)

tbiththan+loveasin@gmail.com

ஜிமெயில் கணக்கின் முகவரியை உங்களுக்கு பிடித்தவர்களுக்காக மாற்றி அமைக்கலாம் எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு இன்பாக்ஸ் ஐ வைத்து பலருக்கு வித்தியாசமான முகவரிளை வழங்கலாம்
உங்கள் உண்மையான முகவரி்- tbiththan@gmail.com
இதை உங்களுக்கு பிடித்தமானவருக்க கொடுப்பதையும் காட்டிலும் சும்மா அவரின் பேயரை இணைத்து வழங்கினால் எப்படி இருக்கும்

உதாரணம் tbiththan+asin@gmail.com
tbiththan+love&asin@gmail.com
tbiththan+தமிழ்பித்தன்@gmail.com


இப்படி எல்லாம் மாற்றவிரும்பினால் மாற்றலாம்
நீங்கள் உங்கள் முகவரிக்கு பின்னால் "+" போட்டு போடும் எதுவும் கணிக்க படமாட்டாது.

Saturday, September 29, 2007

ஜிமெயில் 9GB யில் காலலெடுத்து வைத்தது


அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் சேவை வழங்கிகள் தங்கள் மின்னஞ்சலின் இடக்கொள்ளளவை அதிகரிப்பதும் அல்லது வரையறையற்றதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தின ஆனால் கூகிள் மட்டும் நிதானமாக இருந்தது அது தனது மின்னஞ்சலின் தரத்தை மையப்படுத்தி நகர்வை மேற்கொண்டது.
ஏனெனில் பெரும்பாலான பாவனையாளர்களுக்கு இந்த 3GB என்பதே மிகப் பெரிய விடயமாக தான் இருந்தது

ஆனாலும் கடந்த தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது வாடிக்கையாளருக்கு 9GB ஐ வழங்கியது அதுவும் தான் தெரிவு செய்த நீண்ட நாள் அல்லது அதிகம் ஜிமெயிலை பயன்படுத்துவோர் என கருதுவோருக்கு வழங்கியிருக்கிறது. இதை அதன் பரிசோதனை முயற்சி என்னும் கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.


மொத்தத்தில் விரைவில் ஜிமெயில் தனது சேவையின் இடக்கொள்ளளவை அதிகரிக்கும் என நம்பலாம்.

கொசுறு:- எனது மின்னஞ்சலில் இன்னும் 500MB தாண்ட வழியை காணோம் அதுக்குள்ள 9GB எல்லாம் எதற்க்கு

Thursday, September 27, 2007

மொபைலுக்கான ஜிமெயில் ரெடி!




கூகிள் தனது மொபைலுக்கான ஜிமெயிலின் முழுமையான பதிப்பை வெளியிட்டது. இதனூடாக நீங்கள் வழமையாக ஜிமெயிலில் செய்கின்ற அனைத்தையும் செய்யமுடியும்.


உதாரணமாக:-archive, delete, report as spam, add a label, star or mark as read.




இதன் முழுமையான பலனையும் பெற வேண்டுமாயின் நீங்கள் Java application நிறுவுதல் அவசியமாகிறது




நன்றி;- googlesystem