எப்படி உபுண்டுவில் photoshop cs2ஐ நிறுவலாம் என்பதை இலகுவாக விளக்கம் தரப்படுகிறது
http://news.softpedia.com/news/Install-Photoshop-CS2-on-Your-Ubuntu-PC-77260.shtml
Sunday, January 27, 2008
உபுண்டுவிலும் photoshop cs2 நிறுவலாம்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Tuesday, January 22, 2008
வேட்பிரஸ் இலவசமாக 3GB!

வேட்பிரஸ் தனது தளத்தில் மீடியா கோப்பின் பதிவேற்ற அளவை 3GB ஆக உயர்தியிருக்கிறது. இதனால் ஒளி ஒலி பரிமாற்றங்கள் இன்னும் வலைப்பதிவில் அதிகரிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த அளவு போதாது போனால் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். இதுவரை blogger 1GB
typepad வருட கட்டணம் 300$க்கு 3GB வழங்கிவருகிறமை யாவரும் அறிந்ததே!
மேலதிக விபரம் http://wordpress.com/blog/2008/01/21/three-gigabytes/
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் wordpress
Tuesday, January 15, 2008
அப்பிள் அறிமுகப்படுத்தியவை என்ன?? ((அப்பிள் ரசிகர்களின் பரபரப்பு அடங்கியது))
இன்று ஆப்பிள் ஒழுங்கு செய்திருந்த Apple Expo 2008 நிகழ்வில் அப்பிளால் என்னென்ன புதியன அறிமுகப்படுத்தப் பட போகின்றன என அதன் ரசிகர்கள் பலர் ஆவலோடு இருந்தார்கள்
அப்பிளால் அறிமுகப்படுத்தப்பட்டவை
iphoneல் map
மிக மெல்லிய மடிகணணி((Mac Air))
iTune ல் முவீஸ் வாடகை
iPod ல் பல மேம்பாடுகள்
அப்பிள் ரீவி
ஆகியன அடங்கும்
மேலதிக விபரத்திக்கு கீழே உள்ள வீடியோ காட்சியை பார்க்கவும்
பதிந்தது தமிழ்பித்தன் 3 கருத்துக்கள்
Saturday, January 5, 2008
உங்கள் interner explorer ல் மேலதிக வசதிகளைப் பெற
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
வகைப்படுத்தல் உலாவி
Thursday, January 3, 2008
ipod touch ஐ போனாகவும் மாற்றலாம்
உங்களிடம் உள்ள ipod touch ஐ எவ்வாறு மாற்றலாம் என விரிவாக விளக்கம் கூறுகிறது இந்த தளம்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Tuesday, December 25, 2007
கேள்விகேட்க நீங்கள் தயாரா? பதிலளிக்க அல்லது தெரியாவிடின் ஒளித்துக் கொள்ள நான் தயார்!
இணையம் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் தேவைகளை கேள்விகளாக!, பின்னூட்டமாகவோ அல்லது அருகிலே காணப்படுகின்ற எனது மின்னஞ்சலுகே அனுப்பி வைக்கவும். அதற்க்கு, இயன்றளவு பதில் அளிக்க முயல்கிறேன். இதனால் சில கேள்விகளுக்கு இந்த சின்ன மூளையால் பதிலளிக்க முடியா விடினும் உங்கள் இணையம் தொடர்பான தேவையை உணர்ந்து பதிவெழுத இயலும்.
எங்கே நான் எழுதுவன ஆற்றில் இட்ட உப்புப்போல் ஆகிவிடுமோ? என்ற அச்சத்தை தவிர்க்கவே இந்த வழி. எனது பதிவால் ஒருவர் ஏனும் பயனடைந்தாலே எனக்கு மகிழ்ச்சியே!
இத்துடன் அண்மையில் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலை இணைக்கிறேன்.
கேள்வி:-நண்பரே,
இதே போல் windows ல் இயங்கும் மென்பொருள் இருந்தால் தயவு சொல்லவும் என இப்பதிவை ((லினக்கிசில் இயங்கக்கூடிய இலவச இசை உருவாக்கும் செயலிபற்றிய பதிவில்))) வாசித்து விட்டு இளைய கவியும், கானாபிரபாவும் கேட்டிருந்தார்கள்
பதில்:-அண்ணை! இதுதான் நான் பாவிக்கிற விண்டோஸில் இயங்கக் கூடிய இசையமைக்கும் மென்பொருள் இதன் பெயர் Danse 7 இதன் விலை $19.99
இதன் அதிகாரபூர்வ தளம்
http://www.ejay.com/
கொசுறு:- கேள்வி கேட்பதாக கூறி தம்பியை பைத்தியமாக்க முயல வேண்டாம்.
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
வகைப்படுத்தல் கேள்வி- பதில்
windows media center இப்போது இலவசமா??
விண்டோசின் இறுதி இயங்குதளமான வீஸ்டாவுடன் விண்டோஸ் மீடியா சென்ரர் என்றும் வந்தது பல DVD ரசிகர்களை இது வளைத்துப் போட்டுக் கொண்டது. ஆனால் இதோ செயற்பாடுகளுடனும் இடைமுகப்பு தோற்றத்துடனும் MediaPortal எனும் மென் பொருள் வெளியிட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் இலவசமானதும் திறந்த மூல மென்பொருளும் ஆகும்.
இதில்
வீடியோக்கள் ((divx, mpeg... .இவையும் இயங்குமாம்))
ஓடியோக்கள்
போட்டோக்கள்
இணைய தொலைக் காட்சிகள் வானொலிகள் ((தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம்...)))
வானிலை என பிரமாண்டமான வடிவமைப்பாக காட்சி தருகிறது.
இதில் விண்டோஸ் மீடியா சென்ரரில் இல்லாத வசதிகளாக கேம்ஸ் ((Tetris or Sudoku! இவை உட்பட)) RSS ஐ காட்சிப்படுத்துதல் என மேலும் பல அட்டகாச வசதிகளும் இருக்கிறது.
இதற்க்கு எங்களுக்கு பிடித்தமான இடைமுகப்புக்களுக்கான நீட்சிகளும் கிடைக்கின்றன.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்க்கும் :-http://www.team-mediaportal.com
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் மீடியா
