Thursday, September 20, 2007

ஐபோட்டில் கேம்கள்






ஆப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட்டில் தற்போது கேமையும் விளையாடக் கூடியவாறு இணைத்திருக்கிறார்கள். இனிவரும் ஐபொட் நனோ வகை பிளேயர்களிள் இவற்றை எதிர் பார்க்கலாம். அத்துடன் இவற்றுக்கு மீள் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதிலும் இரண்டு வகைகள் உண்டு.ஒன்று சாதாரண ஐபொட் போல வரும் மற்றையது ஐபோன் வெற்றியின் தாக்கமாக டச் கிறீனுடன் வருகிறது.



Tetris and Sudoku, as well as Namco Networks’ Ms. Pac-Man.போன்ற கேம்களுடன் 15 கேம்கள் வருகின்றன. ஒவ்வோர் கேமும் 5 டாலர்வரை போகின்றன

நன்றி
மீண்டும் வருவேன் என்று சொல்லித்தான் சென்றனான் அதுதான் வந்தனான்.
"மீண்டும் வருகிறேன்" "அன்புக்கு அடிமையாகிட்டேன்" என்றெல்லாம் பில்டப் விட விரும்பவில்லை. ஆடிய காலும் ஓடிய காலும் ஓய்ந்திராதாம் அதுபோல பதிந்த விரல்கள் ஒய்ந்திருக்க மறுக்கின்றன

Saturday, September 15, 2007

யாகூவின் புதிய தளம்



mash


யாகூ ஒன்று கூடல் வகையை (social network) சேர்ந்தததளத்தை தொடங்கியது இதற்க்கு முதல் இத்துறையில் சிறந்து விளங்கும் face book,hi5,myspace போன்றவற்றுடன் தல கூகிளின் ஆர்கூட்டும் இருக்கிறது இவற்றுடன் மோதுமா யாகூவின் mash!..







Friday, September 14, 2007

iphone unlock மென்பொருள்



ஐபோனை unlock செய்ய முடியும் என சில நாட்களுக்கு முன் ஒரு அறிந்திருப்பீர்கள் unlock மென் பொருள் கீழே இருக்கிறது. அதை வைத்து unlock செய்ய முடியுமாம்
இப்படி தானாம் செய்வது





மேலதிக செய்தி;-http://www.iphonesimfree.com

Wednesday, September 12, 2007

கணணியை பழைய நிலைக்கு மாற்றலாம்

திமுக மற்றும் அதிமுக என்று பல கட்சிகள் வந்து தமிழ் நாடு குழம்பியுள்ள நிலையில் அண்ணாவிடம் மீண்டும் திமுக போனால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நல்லாயிருக்கு ஆனால் அது சாத்தியமற்றது ஆனால் உங்கள் கணணியில் கோளாறு இனம் காண படாவிடினும் உங்கள் கணணியை பழைய நிலைக்கு திருப்ப முடியும் அதற்க்கு உதவுகிறது system restore

எப்படி செல்வது??
start------>all programs-----> accessories---->system tools---->system restore

இவர்தான் ஆள்



இது எதற்க்கு பயன்படுகிறது???

நீங்கள் உங்கள் கணணியில் ஏதாவது மென்பொருளை நிறுவினால் அது நிறுவலில் ஏதாவது பிழை அல்லது அது தேவையில்லை என நினைப்பின் அதை நீக்க control panel இலுள்ள add/remove வசதியை பயன் படுத்துவீர்கள்; சில மென்பொருட்கள் சிஸ்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் நீங்கள் இல் அழித்தாலும் சில வழுச்செய்திகளை ஏற்படுத்து சந்தர்ப்பம் உள்ளது
அதற்க்கு மாற்று வழியே இது. இதானது உங்கள் கணணி மென்பொருள் நிறுவதற்க்கு முதல் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு சென்று மாற்றி விடும்

எப்படி செய்வது???
இங்கே இரண்டு தெரிவுகள் உள்ளன

*முதலாவது தெரிவை பயன்படுத்தி இறுதியாக நீங்கள் சிஸ்டத்தில் செய்த மாற்றத்தை நிவர்த்தி செய்யலாம்

*இரண்டாவது தெரிவை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஒரு புள்ளியை தெரிவு செய்து மாற்றலாம்

செய்யும் போது கவனிக்க வேண்டியவை??
நீங்கள் தெரிவு செய்த புள்ளிக்காலத்துக்கும் தற்போது உள்ள காலத்துக்கும் இடையில் சேமித்த பைல்களை தேவை எனில் சிடியிலோ அல்லது வேறு செமிபான் உதவியுடனோ கணணிக்கு வெளியே சேமிக்கவும் காரணம் கணணி முந்தைய நிலைக்க திரும்புவதால் உங்கள் பைல்கள் அமிக்கப்படலாம்

கொசுறு்- இந்த பாமரன் தன் அறிவுக்கு எட்டியதை புலம்பியுள்ளான் பிழைகள் இருப்பின் தெரிந்தவர்கள் மன்னித்து அதன் திருத்தத்தை பின்னூட்டமூடாக தெரிவிக்கலாம்

Tuesday, September 11, 2007

விண்டோஸ் லைவின் புளொக் எழுதி








விண்டோஸ் லைவ் சேவை அண்மையில் ஒரு எழுதியை வெளியிட்டது அதிலிருந்து நேரடியாக புளொக்கிங் மற்றும் மின்னஞ்சல் செய்யும் வசதிகள் உள்ளன மேலும் அதன் சிறப்பம்சங்கள்


*இதனைப் பயன்படுத்தி வடிவமைத்து கீழ்கண்ட புளொக் சேவைகளில் நேரடியாக பதிவேற்றலாம்
blogger, wordpress,மற்றும் பல


*குறிச்சொற்கள் வீடியோ போட்டோ ஓடியோ முதலியவற்றை நேரடியாக சேர்க்கலாம்


*இணைப்புக்கள் மற்றும் எழுத்துப் பிழை திருத்தும் வசதி


இதை பதிவிறக்க இங்கே

Monday, September 10, 2007

உங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய

நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை இலகுவாக எடிற் செய்ய இது உதவும்
http://www.jaycut.com/
இதன் பயன்கள்
1) ஒலிசேர்க்கலாம்
2)புகைப்படங்களை வைத்து விபரண வீடியோ தயாரிக்கலாம்
3)வீடியோவையும் இணக்கலாம்
4)எடிற் செய்து பதிவிறக்கலாம்
5)நேரே youtube க்கு மாற்றலாம்


Friday, September 7, 2007

வலைப்பதிவை விட்டுப் போக மனமின்றி போகிறேன்

இந்த பதிவுக்கு முதல் நான் இட்ட பதிவு நகைச்சுவையை மைய படுத்தியே எழுதினேன் அது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும் நாஸ்தீகர் லிஸ்ட் பதிவிலிருந்து நீக்கபடுகிறது. இயற்கை என்னை வலைப்பதிவை விட்டு போக தூண்டுகிறது இன்னும் புரியலையா?? அதுதாங்க நூலகத்துக்கு வந்து வலைபதியலாம், என்று பார்த்தால் அதுக்கிடையில ஒன்னுக்கு வருது போட்டு வாறன்.