Wednesday, October 24, 2007

சிங்களத்தின் நிர்வாணமும் புத்தனும்

சிங்களமே வீரர்களை நிர்மாணக்கி மகிழ்ந்தீரே
புத்தன் இதையோ போதித்தான் உமக்கு
புத்தன் உயிருடன் இருந்தால் அவனும்
எதிர்த்திருப்பான் உமை.

மார்பிலே அம்பு சுமந்தது எம் பரம்பரை
உம் போல் அரை கோவணத்துடன் ஓடியதில்லை
அன்று துட்டகைமுனு சூழ்ச்சி செய்து தமிழனை வென்றானாம்
இன்று வென்ற வெற்றி வீரர் சாய்ந்திருக்க அவரை அம்மணமாக்கிறாய்

யாரை ஆனந்த படத்த இச்செயல்
வாக்களித்த சிங்கள செம்மரிக் கூட்டத்துக்காகவா
இல்லை வென்று விட்டானே என்ற வெறுப்பா
இது இன்றை வெற்றியில்லையே தொடரும் வெற்றிகளின்
ஒர் புள்ளிதானே!

கழுத்தில் சிவப்பு துணி கட்டி அலையும்
சிங்கள குள்ளநரியே
ஒர் துளி இரத்தம் கண்டு
புலியை கொன்று விட்டதாய் கொட்டமா அடிக்கிறாய்
அது வெற்றியின் போது சிந்திய வெற்றி திலகமடா

எம் வீரர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்கள்
மூச்சுக் காற்றையே நீ தொட முடியாது
அதுவும் உன்னை பொசுக்கும்

நீ பொசுங்கும் காலம் வெகு தொலைவிலில்லை!

இறந்த அனைத்து கரும்புலிகளுக்கும் சிரம்தாழ்த்தி நினைவு கூறுகிறேன்

ஓர் கோழையின் கவிதை

1 கருத்துக்கள்:

ஜெகதீசன் said...

உயிர் நீத்த கரும்புலிகளுக்கு என் வீர வணக்கங்கள்..