Friday, October 12, 2007

திரட்டி செய்வது எப்படி???((விரிவான விளக்கம்))


இப்போது பல தளங்கள் ஓடைகளை(feed) திரட்டும் வசதியை தருகின்றன. சிலதளங்கள் தனியாகவும்சில தளங்கள் அனைத்து ஓடைகளை ஓரே ஓடையாக மாற்றும் வசதிகளை அளிக்கின்றன. இத்திரட்டும் வசதியை வைத்து..
* உங்களுக்கு பிடித்தமான வலைப்பதிவுகளை திரட்டலாம். அதை நீங்கள் உங்கள் வலைப்பூவிலோ அல்லது இணையத்திலோ உங்கள் வாசகருடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தி அங்கிருந்து படிக்ககலாம்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்!
முதல் சொன்னது போல பல தளங்கள் திரட்டும் வசதியை அளிக்கின்ற போதும் எனக்கு http://www.feeddigest.com/ என்ற தளம் தான் பிடித்திருக்கிறது இதை மையமாக வைத்து தொடர்வோம்


1)முதலில் இங்கே சென்று கணக்கை உருவாக்குங்கள்
2)இங்கே சென்று முதலில் உங்களின் ஒரு ஓடையை பொருத்துங்கள்


3)அழுத்தி வருகிற பக்கத்தில் உங்கள் தரவுகளை பதியுங்கள்
Digest Name -திரட்டியின் பெயர்(யுனிக்கோட்டையும் ஏற்றுக்கொள்ளும்)((முதலாவது))
Order Items By- என்பதில் ((இரண்டாவது))
item date மற்றும்
descending ஆகியவற்றை தெரிவு செய்யுங்கள்
Max Items to Show- எத்தனை விடயங்களை காட்டவிரும்புகிறீர்கள் (5 தொடக்கம் 10 வரை) சிறந்தது ((மூன்றாவது))
Output Encoding- UTF-8
Template- உங்கள் விருப்பம்(((நான்காவது))



வேற என்ன?? அம்முட்டும் தான் முடிஞ்சுதா?? அங்க தார ஓடையையே அல்லது HTML நிரலையோ நீங்கள் பொருத்த விரும்பிய இடத்தில் பொருத்துங்க.



Click here to add a feed to this digest என்பதை அழுத்தி நீங்கள் பின்னர் உங்களுக்கு விரும்பிய தளங்களின் ஓடைகளை எல்லாம் இணையுங்கள்

நான் செய்த திரட்டியை அருகில் பாருங்கள்.
இதில் http://thamizitnews.blogspot.com/
http://pkp.blogspot.com/
http://mayunathan.blogspot.com/
ஆகிய வலைப்பூக்கள் திரட்டப்படுகின்றன.

டிப்ஸ்;- புளாக்கர் வலைப்பூவுக்கான ஓடை http://yourblogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
புளாக்கர் வலைப்பூவின் பின்னூட்டத்துக்கான ஓடை http://yourblogName.blogspot.com/feeds/comments/default



அனைவருக்கும் றம்ழான் மற்றும் நவராத்திரி வாழ்த்துக்கள்

0 கருத்துக்கள்: