Wednesday, September 12, 2007

கணணியை பழைய நிலைக்கு மாற்றலாம்

திமுக மற்றும் அதிமுக என்று பல கட்சிகள் வந்து தமிழ் நாடு குழம்பியுள்ள நிலையில் அண்ணாவிடம் மீண்டும் திமுக போனால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நல்லாயிருக்கு ஆனால் அது சாத்தியமற்றது ஆனால் உங்கள் கணணியில் கோளாறு இனம் காண படாவிடினும் உங்கள் கணணியை பழைய நிலைக்கு திருப்ப முடியும் அதற்க்கு உதவுகிறது system restore

எப்படி செல்வது??
start------>all programs-----> accessories---->system tools---->system restore

இவர்தான் ஆள்



இது எதற்க்கு பயன்படுகிறது???

நீங்கள் உங்கள் கணணியில் ஏதாவது மென்பொருளை நிறுவினால் அது நிறுவலில் ஏதாவது பிழை அல்லது அது தேவையில்லை என நினைப்பின் அதை நீக்க control panel இலுள்ள add/remove வசதியை பயன் படுத்துவீர்கள்; சில மென்பொருட்கள் சிஸ்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் நீங்கள் இல் அழித்தாலும் சில வழுச்செய்திகளை ஏற்படுத்து சந்தர்ப்பம் உள்ளது
அதற்க்கு மாற்று வழியே இது. இதானது உங்கள் கணணி மென்பொருள் நிறுவதற்க்கு முதல் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு சென்று மாற்றி விடும்

எப்படி செய்வது???
இங்கே இரண்டு தெரிவுகள் உள்ளன

*முதலாவது தெரிவை பயன்படுத்தி இறுதியாக நீங்கள் சிஸ்டத்தில் செய்த மாற்றத்தை நிவர்த்தி செய்யலாம்

*இரண்டாவது தெரிவை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஒரு புள்ளியை தெரிவு செய்து மாற்றலாம்

செய்யும் போது கவனிக்க வேண்டியவை??
நீங்கள் தெரிவு செய்த புள்ளிக்காலத்துக்கும் தற்போது உள்ள காலத்துக்கும் இடையில் சேமித்த பைல்களை தேவை எனில் சிடியிலோ அல்லது வேறு செமிபான் உதவியுடனோ கணணிக்கு வெளியே சேமிக்கவும் காரணம் கணணி முந்தைய நிலைக்க திரும்புவதால் உங்கள் பைல்கள் அமிக்கப்படலாம்

கொசுறு்- இந்த பாமரன் தன் அறிவுக்கு எட்டியதை புலம்பியுள்ளான் பிழைகள் இருப்பின் தெரிந்தவர்கள் மன்னித்து அதன் திருத்தத்தை பின்னூட்டமூடாக தெரிவிக்கலாம்

2 கருத்துக்கள்:

ஜெகதீசன் said...

//
பெரியார் மீண்டும் திமுகவை பொறுப்பேற்கிறார்
//
இதற்கு முன் பெரியார் எப்போது தி.மு.க விற்கு பொறுப்பேற்றிருந்தார் என சொல்ல முடியுமா நண்பரே???

பெரியார் திமுக காரர் இல்லை. வேண்டுமானால் "திமுக அண்ணாவிடம் போனால் எப்படி இருக்கும்" என்று கேட்கலாம்.

அடுத்து இருக்குற மேட்டர்.. பயனுள்ளது........
தலைப்பும் மேல இருக்குற சில வரிகளும் இடுகையை சூடாக்குறதுக்காகவா?

தமிழ்பித்தன் said...

ஆமால்ல மாத்திட வேண்டியதுதான்