Saturday, September 29, 2007

ஜிமெயில் 9GB யில் காலலெடுத்து வைத்தது


அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் சேவை வழங்கிகள் தங்கள் மின்னஞ்சலின் இடக்கொள்ளளவை அதிகரிப்பதும் அல்லது வரையறையற்றதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தின ஆனால் கூகிள் மட்டும் நிதானமாக இருந்தது அது தனது மின்னஞ்சலின் தரத்தை மையப்படுத்தி நகர்வை மேற்கொண்டது.
ஏனெனில் பெரும்பாலான பாவனையாளர்களுக்கு இந்த 3GB என்பதே மிகப் பெரிய விடயமாக தான் இருந்தது

ஆனாலும் கடந்த தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது வாடிக்கையாளருக்கு 9GB ஐ வழங்கியது அதுவும் தான் தெரிவு செய்த நீண்ட நாள் அல்லது அதிகம் ஜிமெயிலை பயன்படுத்துவோர் என கருதுவோருக்கு வழங்கியிருக்கிறது. இதை அதன் பரிசோதனை முயற்சி என்னும் கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.


மொத்தத்தில் விரைவில் ஜிமெயில் தனது சேவையின் இடக்கொள்ளளவை அதிகரிக்கும் என நம்பலாம்.

கொசுறு:- எனது மின்னஞ்சலில் இன்னும் 500MB தாண்ட வழியை காணோம் அதுக்குள்ள 9GB எல்லாம் எதற்க்கு

Friday, September 28, 2007

வழியனுப் வாரீங்களோ??


யாகூ தனது 2வருட ஆயுள் கொண்ட போட்காஸ்டிங் சேவையை வருகிற ஒக்டோபர் 31ம் திகதி மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. இது வரை காலமும் ஒரு நல்ல போட்காஸ்டிங் சேவையாக இது இருந்ததா? என்று பலர் சந்தேகம் கொள்வதில் நீயாயம் இருக்கத்தான் செய்கிறது. யாகூ சேவைகளில் இது ஒரு கறையாக இருந்தது இனியும் இருக்கும்.


மக்கள் போட்காஸ்டிங்கை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும் அதிவிரைவு இணையத்தின் சாத்தியத்தினால் வீடியோவின் பரம்பலின் வேகத்துடன் இந்த ஒலிவகை போட்காஸ்டிங்கால் எதிர்த்து போராட முடியவில்லை, என்பதே சிலரின் கருத்து. ஆனாலும், இப்போதும் பல தளங்கள் போட்காஸ்டிங் சேவையில் சக்கை போடு போடுகின்றன என்பதை எவராலும் மறக்க முடியாது.

உதாரணமாக PodcastAlley, Podcast Pickle மற்றும் Odeo.


இத்தனை தளங்கள் இருக்க யாகூ மட்டும் மூட காரணம்

1) அது எப்போதும் முற்று முழுதான லாபத்தையே மட்டுமே கணக்கப் பண்ணும்


2) இதன் சேவைகள் கவரக்க கூடியதாக இல்லாமல் இருந்தது((இதில் பதிந்தால் வேறு இடத்தில் அதை பொருத்தி பகிர்ந்து கொள்ள முடியாது))


3)யாகூ தன் கவனத்தையும் பலத்தையும் வீடியோ தளத்தில் காட்ட நினைக்கிறது

சரி! எதுவாக இருந்தாலும் போட்ட BETA நாமம் கழலும் முன்னே அப்படியே புறப்பட்டு விட்டார் யாகூ மைந்தன். சரி எதுக்கும் கடைசியாய் போய் ஒருக்கா ஒப்பாரி வைத்துட்டு வாங்கோ!

Thursday, September 27, 2007

jajah வின் பட்டையை பொருத்திக் கதைப்போம்



இது தரும் பட்டனை பொருத்துவதன் மூலம் உங்கள் தளத்துக்கோ அல்லது வலைப்பூவுக்கு வருபவரோ உங்களை அழைத்து கதைக்கலாம்.

1) முதலில் jajahக்கு சென்று கணக்கு ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும் (இது முற்றிலும் இலவசம்)

2) உருவாக்குவதற்கான ஐகனை அழுத்துதல்



3)எங்கே சேர்க்க போகிறீர்கள் என்ற தகவல்களை வழங்குதல்




4)உங்கள் தளத்தில் சேர்க்கவிருக்கும் பட்டையை உங்களுக்கு விரும்பியது போல் மாற்றுதல்





5)எந்த எந்த நேரங்களில் அனுமதித்தல் என்ற வரையறைகளை பூர்த்தி செய்தல்



இனி பட்டைக்கான நிரலை வெட்டி உங்கள் தளத்திலோவலைப்பூவிலோ மின்னஞ்சல் ஊடாகவோ உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள். அவர் தனது போன் நம்பரை அழுத்துவதன் மூலம் உங்களுக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு இருவரும் கதைத்து மகிழலாம்.

இதன் சிறப்பு வசதி நீங்கள் விரும்பாதவரின் போன் நம்பரை தடைசெய்யும் வசதியும் உண்டு.

இது http://www.jaxtr.com போன்ற ஒரு சேவையே jaxtr ஐ நான் முதலியே அறிமுகப்படுத்தியிருந்ததை யாவரும் அறிவர்.

live.com மாறிட்டுதாமே!


மைக்ரோ சாப்ட் நிறுவனம் கூகிள் மற்றும் யாகூவுக்கு சாவல் விடும் வகையில் தனது தேடல் பொறியை மாற்றி அமைத்திருக்கிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகள்

1)தானாக எழுத்துப் பிழை திருத்தும்

2)விரைவான தேடல் முடிவு

3)நேர்த்தியான விளம்பரம்

என பல சேவைகளை முற்றிலுமாக மேம்படுத்திவிட்டதாக கூறிகிறது


நன்றி மற்றும் மேலதிக செய்திகள்;- microsoft


கொசுறு;-msn இருந்தது live க்கு மாறும் போதும் இப்படித்தான் பிதற்றியது ஆனாலும் அதனால் இன்னமும் கூகிளை கிட்டவும் நெருங்க முடியவில்லை

மொபைலுக்கான ஜிமெயில் ரெடி!




கூகிள் தனது மொபைலுக்கான ஜிமெயிலின் முழுமையான பதிப்பை வெளியிட்டது. இதனூடாக நீங்கள் வழமையாக ஜிமெயிலில் செய்கின்ற அனைத்தையும் செய்யமுடியும்.


உதாரணமாக:-archive, delete, report as spam, add a label, star or mark as read.




இதன் முழுமையான பலனையும் பெற வேண்டுமாயின் நீங்கள் Java application நிறுவுதல் அவசியமாகிறது




நன்றி;- googlesystem




Friday, September 21, 2007

இந்தியாவிற்கான போன்கால் இலவசமாக hack




*நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இந்த பக்கத்துக்குச் செல்லுங்கள்


*இரண்டாவதாக நீங்கள் உங்கள் போன் நம்பரை பதிய வேண்டும் உதாரணமாக அமெரிக்கா என வைத்தால் உங்கள் அமெரிக்க நம்பரை பதிதல் வேண்டும்


*மூன்றாவதாக நீங்கள் கதைக்க வேண்டிய நம்பரை பதிதல் வேண்டும் பதியும் போது இப்படி பதிதல் வேணடும்


உதாரணமாக +912225991212 என்றிருந்தால் +9122259912120 என்று போட வெணும் பின் நீங்கள் அந்த 0க்கு பதிலாக வரை போட்டு பத்து பத்து நிமிடங்கள் வரை கதைக்கலாம்

Thursday, September 20, 2007

ஐபோட்டில் கேம்கள்






ஆப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட்டில் தற்போது கேமையும் விளையாடக் கூடியவாறு இணைத்திருக்கிறார்கள். இனிவரும் ஐபொட் நனோ வகை பிளேயர்களிள் இவற்றை எதிர் பார்க்கலாம். அத்துடன் இவற்றுக்கு மீள் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதிலும் இரண்டு வகைகள் உண்டு.ஒன்று சாதாரண ஐபொட் போல வரும் மற்றையது ஐபோன் வெற்றியின் தாக்கமாக டச் கிறீனுடன் வருகிறது.



Tetris and Sudoku, as well as Namco Networks’ Ms. Pac-Man.போன்ற கேம்களுடன் 15 கேம்கள் வருகின்றன. ஒவ்வோர் கேமும் 5 டாலர்வரை போகின்றன

நன்றி
மீண்டும் வருவேன் என்று சொல்லித்தான் சென்றனான் அதுதான் வந்தனான்.
"மீண்டும் வருகிறேன்" "அன்புக்கு அடிமையாகிட்டேன்" என்றெல்லாம் பில்டப் விட விரும்பவில்லை. ஆடிய காலும் ஓடிய காலும் ஓய்ந்திராதாம் அதுபோல பதிந்த விரல்கள் ஒய்ந்திருக்க மறுக்கின்றன

Saturday, September 15, 2007

யாகூவின் புதிய தளம்



mash


யாகூ ஒன்று கூடல் வகையை (social network) சேர்ந்தததளத்தை தொடங்கியது இதற்க்கு முதல் இத்துறையில் சிறந்து விளங்கும் face book,hi5,myspace போன்றவற்றுடன் தல கூகிளின் ஆர்கூட்டும் இருக்கிறது இவற்றுடன் மோதுமா யாகூவின் mash!..







Friday, September 14, 2007

iphone unlock மென்பொருள்



ஐபோனை unlock செய்ய முடியும் என சில நாட்களுக்கு முன் ஒரு அறிந்திருப்பீர்கள் unlock மென் பொருள் கீழே இருக்கிறது. அதை வைத்து unlock செய்ய முடியுமாம்
இப்படி தானாம் செய்வது





மேலதிக செய்தி;-http://www.iphonesimfree.com

Wednesday, September 12, 2007

கணணியை பழைய நிலைக்கு மாற்றலாம்

திமுக மற்றும் அதிமுக என்று பல கட்சிகள் வந்து தமிழ் நாடு குழம்பியுள்ள நிலையில் அண்ணாவிடம் மீண்டும் திமுக போனால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நல்லாயிருக்கு ஆனால் அது சாத்தியமற்றது ஆனால் உங்கள் கணணியில் கோளாறு இனம் காண படாவிடினும் உங்கள் கணணியை பழைய நிலைக்கு திருப்ப முடியும் அதற்க்கு உதவுகிறது system restore

எப்படி செல்வது??
start------>all programs-----> accessories---->system tools---->system restore

இவர்தான் ஆள்



இது எதற்க்கு பயன்படுகிறது???

நீங்கள் உங்கள் கணணியில் ஏதாவது மென்பொருளை நிறுவினால் அது நிறுவலில் ஏதாவது பிழை அல்லது அது தேவையில்லை என நினைப்பின் அதை நீக்க control panel இலுள்ள add/remove வசதியை பயன் படுத்துவீர்கள்; சில மென்பொருட்கள் சிஸ்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் நீங்கள் இல் அழித்தாலும் சில வழுச்செய்திகளை ஏற்படுத்து சந்தர்ப்பம் உள்ளது
அதற்க்கு மாற்று வழியே இது. இதானது உங்கள் கணணி மென்பொருள் நிறுவதற்க்கு முதல் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு சென்று மாற்றி விடும்

எப்படி செய்வது???
இங்கே இரண்டு தெரிவுகள் உள்ளன

*முதலாவது தெரிவை பயன்படுத்தி இறுதியாக நீங்கள் சிஸ்டத்தில் செய்த மாற்றத்தை நிவர்த்தி செய்யலாம்

*இரண்டாவது தெரிவை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஒரு புள்ளியை தெரிவு செய்து மாற்றலாம்

செய்யும் போது கவனிக்க வேண்டியவை??
நீங்கள் தெரிவு செய்த புள்ளிக்காலத்துக்கும் தற்போது உள்ள காலத்துக்கும் இடையில் சேமித்த பைல்களை தேவை எனில் சிடியிலோ அல்லது வேறு செமிபான் உதவியுடனோ கணணிக்கு வெளியே சேமிக்கவும் காரணம் கணணி முந்தைய நிலைக்க திரும்புவதால் உங்கள் பைல்கள் அமிக்கப்படலாம்

கொசுறு்- இந்த பாமரன் தன் அறிவுக்கு எட்டியதை புலம்பியுள்ளான் பிழைகள் இருப்பின் தெரிந்தவர்கள் மன்னித்து அதன் திருத்தத்தை பின்னூட்டமூடாக தெரிவிக்கலாம்

Tuesday, September 11, 2007

விண்டோஸ் லைவின் புளொக் எழுதி








விண்டோஸ் லைவ் சேவை அண்மையில் ஒரு எழுதியை வெளியிட்டது அதிலிருந்து நேரடியாக புளொக்கிங் மற்றும் மின்னஞ்சல் செய்யும் வசதிகள் உள்ளன மேலும் அதன் சிறப்பம்சங்கள்


*இதனைப் பயன்படுத்தி வடிவமைத்து கீழ்கண்ட புளொக் சேவைகளில் நேரடியாக பதிவேற்றலாம்
blogger, wordpress,மற்றும் பல


*குறிச்சொற்கள் வீடியோ போட்டோ ஓடியோ முதலியவற்றை நேரடியாக சேர்க்கலாம்


*இணைப்புக்கள் மற்றும் எழுத்துப் பிழை திருத்தும் வசதி


இதை பதிவிறக்க இங்கே

Monday, September 10, 2007

உங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய

நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை இலகுவாக எடிற் செய்ய இது உதவும்
http://www.jaycut.com/
இதன் பயன்கள்
1) ஒலிசேர்க்கலாம்
2)புகைப்படங்களை வைத்து விபரண வீடியோ தயாரிக்கலாம்
3)வீடியோவையும் இணக்கலாம்
4)எடிற் செய்து பதிவிறக்கலாம்
5)நேரே youtube க்கு மாற்றலாம்


Friday, September 7, 2007

வலைப்பதிவை விட்டுப் போக மனமின்றி போகிறேன்

இந்த பதிவுக்கு முதல் நான் இட்ட பதிவு நகைச்சுவையை மைய படுத்தியே எழுதினேன் அது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும் நாஸ்தீகர் லிஸ்ட் பதிவிலிருந்து நீக்கபடுகிறது. இயற்கை என்னை வலைப்பதிவை விட்டு போக தூண்டுகிறது இன்னும் புரியலையா?? அதுதாங்க நூலகத்துக்கு வந்து வலைபதியலாம், என்று பார்த்தால் அதுக்கிடையில ஒன்னுக்கு வருது போட்டு வாறன்.