Monday, April 30, 2007

இரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்

அன்று ஒரு நாள் மதிமயங்கும் மாலைப்பொழுது நாங்கள் வழமையாக சிறுவர் பெரியோர் வேறுபாடுகள் அற்று குவிக்கப்பட்டிருந்த மணலிலே இருந்து விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென வல்வெட்டித்துறையிலிருந்து பலத்த துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தங்கள் கேட்டன. அப்பா திடீரென எழுந்து சைக்கிளையும் எடுத்துக்கொண்டு என்ன நடந்தது என்று அறிய தனது ஆலமர அரட்டை நண்பர்களை நாடிச்சென்றார். பின் அப்பா வந்து நடந்ததை கூறினார்

ஆமாம் நான் கூறும் காலப்பகுதி இந்திய அமைதிப்படை இலங்கையில் அமைதியை ஏற்படுத்துமுகமாக தமிழர்தாயக பகுதியெங்கும் குவிந்திருந்தகாலமது. அன்று வழமை போல் தமது ரோந்து நடவடிக்கைகளுக்காக சென்ற இந்திய இராணுவத்தின் மீது சிறு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு சிவன் கோவிலின் பின் வீதியால் ஓடத்தொடங்கினான். அவனை துரத்திக்கொண்டு ஏராளமான இராணுவத்தினர் சென்ற வேளையில் கோயிலின் உட்புறம் ஒளிந்திருந்த விடுதலைப்புலிகளின் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே பல படையினர் இறக்க மற்றவர் தப்பித்திக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் வல்வெட்டித்துறை முகாமைச் சேர்ந்த படையினர் ஆவார்கள்.

இதையறிந்த பல குடும்பங்கள் என்ன நடக்க இருக்கிறதோ என்ற அச்சத்தில் இரவிரவோடு இரவாக எங்கள் கிராமத்தை நோக்கி படை எடுக்கின்றனர். ஆனாலும் மறுநாள்காலை வரை ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதிசெய்த பின்னர் தங்கள் அன்றாட கடமைகளுக்காக ஊர்திரும்புகின்றனர்.
எங்கள் அம்மம்மா கூட எங்கள் வீட்டில் விளைந்த காய்கறிகளை கொண்டு வல்வெட்டித்துறைச் சந்தைக்கு புறப்பட்டு விட்டா.."

காலை ஒரு பதினொருமணிளவில் தீடிரென பொலிகண்டி முகாமிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் வல்வெடடித்துறை சந்தியில் இறக்கி விடப்படுகின்றனர். அதாவது முதலில் சந்தை கட்டடத்துக்குள் புகுந்தவர்கள். அங்கே இயங்குகின்ற கலைச்சோலை புத்தக கடையில் வேலை செய்த அவரது மகன்களை சுட்டு விட்டு கடையையும்கொழுத்திவிட்டு பின் சந்தையின் உட்புறத்தினுள் சென்று கண்முடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தையும் வாள் வீச்சுக்களையும் செய்கிறார்கள். மக்கள் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முதலே எல்லாம் நடந்து முடிந்தது.

பின் அங்கிருந்து வெளியேறியவர்கள் நாளாபக்கமும் பிரிந்து சென்று மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீதும் வீடுவீடா சென்று தாக்குதல் நடத்துகிறார்கள் அதில் ஒரு குழு ஒரு திரையரங்கத்தை அப்படியே அழிக்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அனைத்து சத்தங்களும் தெளிவாக கேட்கிறது சத்தம் வரவர கிட்ட கேட்பது போல இருக்கவே நாங்கள் உடுப்பிட்டியை நோக்கி நகர்ந்தோம். ஆனால் வந்தவன் தீருவில் பகுதியை தாக்கிவிட்டு திரும்பி விடுகிறான் ஆனால் தீருவில் பகுதியை சேர்ந்தவர்கள் முன்னதாகவே இடம்பெயர்ந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் இருக்கவில்லை.

மாலை 5 மணியளவில் அப்பா என்னையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மாவைத் தேடி புறப்படுகிறார் தீருவில் தாண்டி சிவன் கோவிலின் முன் வீதியை அடைந்த போது அங்காங்கே மக்கள் பிணங்களை அகற்றுவதை காண முடிந்தது. நான் சிறுவன் என்பதனால் அப்பா உடனே தன் சாரத்தை கிழித்து என் கண்களை கட்டி விடுகிறார். சந்தையை அடைந்த நாங்கள் அம்மம்மாவை தேடுகிறோம். பின் அம்மம்மா ஒரு மூலையில் அழுதபடி இருப்பதை கண்டு ஆனந்தம் அடைகிறோம் .பின் அவாவையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறோம்
அம்மம்மா உட்பட 25 பேர் ஒரு மலசல கூடத்தினுள் ஒழிந்து தப்பிக்கொண்டனர்.

என் கண்கட்டப்பட்டிருந்தாலும் அப்போது வீசிய இரத்தவாடை இப்போதும் நாசியை விட்டு விலகமறுக்கிறது ஆமாம் அத்தாக்குதலில் மொத்தம் 83 அப்பாவி பொதுமக்ககள் அநியாயமமாக கொல்லப்பட்டிருந்தனர்

இந்திய தேசமே எம் தந்தை தேசம்
எங்களை ஏன் அழித்தாய்
எம்மால் அப்போது எமக்குள்
அழத்தான் முடிந்ததே

வேலியாகத் தானே பார்த்தோம் உன்னை
நீயே எம்மை மேய்ந்தாயே
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை
இரக்கமின்றியே நசித்துக் கொன்றாயே

காந்திய தேசமே காந்தியம் இதுதானா?
காலனின் கயிரெடுத்து நேரே வந்தாயோ
தமிழனின் உயிர் குடித்து
குலம் அழிக்க

வல்லரசு என்று கூறி வல்லூராகி வந்தாய்
வசந்தம் வீசிய வல்வெட்டித்துறையில்
வாடைவீசச் செய்தாய்
வதைகள் பல செய்தாய்

இந்திய ராணுவம் படுகொலைககள் செய்த இடங்கள்(எனக்கு தெரிந்தவை மட்டும்)
யாழ் வைத்தியசாலைப் படுகொலை
பிரம்படிப் படுகொலை

எம் இதயங்களில் என்று அந்த வடு மாறுமோ தெரியாது. ஆனாலும் இது தான் தமிழீழத்தின் தனிசோகக்கதை இல்லை ஆயிரமாயிரம் சோகங்கள் நிறைந்து. அனைத்தையும் பார்த்து விட்டு எமக்குள்ளே மவுனமாக அழுகிறோம். நாங்கள் சபிக்கப்பட்டவரா? வாழத்தான் ஆசையற்றரவரா? எமக்கு ஏன் வாழ அருகதை இல்லையா? எம்முன்னோர் கட்டிவளர்த்த தேசம் அதில் வாழ உரிமையில்லையா? வந்தவனும் போனவனும் தீண்டிப்பார்க்க நாங்கள் என்ன குரங்காட்டிக் குரங்குகளா?

எங்களுக்கு நீதி சொல் எவரும் இல்லையா?

Sunday, April 29, 2007

நீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர


நீங்கள் இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பரா? அப்படி பார்த்து ரசிக்கும் வீடியோக்களை உங்கள் வலைப்பூ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நீண்ட நேரத்தை செலவு செய்கிறீர்களா?
அது இப்போது இலகு ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிளிக்கில் உங்கள் விருப்ப வீடியோ உங்கள் வலைப்பூவை அடையும் அதற்க்கு இந்த தளம் உதவும்.

http://vodpod.com


இதில் இரண்டு வகையாக பகிரலாம்

முதலாவது வகை


இரண்டாவது வகை



ஒரே நேரத்தில் பலருடன் வீடியோ உரையாடல் செய்ய

அதாவது நீங்கள் ஒரே நேரத்தில் பலருடன் conversations. முறையில் உரையாட விரும்புகிறீர்களா? முதல் தடவையாக அதற்க்கு உதவி செய்கிறது. இந்த தளம். இது தங்களுடயதில் குரலும் தெளிவாக இருக்கிறது. என்று கூறுகிறது நீங்கள் எதற்க்கும் ஒருக்கால் முயன்று பாருங்கள்
http://oovoo.com/

Photo Sharing and Video Hosting at Photobucket

Thursday, April 26, 2007

புதுப் பொலிவுடன் ijigg என்ற ஒலிப்பதிவுத்தளம்

தமிழ் வலைப்திவர்கள் பலரால் விரும்பி பயன்படுத்ப்படும். ஒலிபதிவுத்தளமாகிய
www.ijigg.com இது இப்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள்
*playlist உருவாக்கலாம்
*கேட்கிறவற்றை நேரடியாக தரவிறக்கலாம்
*இலகுவான பதிவேற்றம்
*இலகுவான கையாள்கை




நான் முன்பு செய்த அறிவித்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்னும் 4 அல்லது 5 மணித்தியாளங்களில் அதற்கான விபரங்கள் அனைத்தும் வெளிவர இருக்கிறது
முன்பு செய்த அறிவித்தல் இங்கே

Monday, April 23, 2007

documentகளை காட்சிப்படுத்த

உங்களிடம் உள்ள document களை காட்சிப்படுத்த நினைக்கிறீர்களா?

  • .doc (Microsoft Word)
  • .pdf (Adobe Acrobat)
  • .txt (Plain text)
  • .ppt, .pps (Microsoft Powerpoint)
  • .xls (Microsoft Excel)
  • .ps (Adobe postscript)
  • .lit (MS reader ebook)
  • .rtf (Rich Text Format)
  • .odt, odp, etc. (Open Office)
  • .sxw, sxi, etc. (Open Office)

இதோ உங்களுக்கு உதவுகிறது இத்தளம்..



ஒருத்தர்
திருமந்திரத்தை இப்படி காட்சிப்படுத்தியிருந்தார்..




ஆங்கில மற்றும் சில மொழிகளின் கோப்புகளை அது தானாக வாசிக்கிறது. அங்கே பதிவேற்றிய கோப்புகளை நீங்கள் விரும்பிய வடிவில் தரவிறக்கலாம். (mp3 வடிவம் உட்பட)
சரி திருமந்திருத்தை கேட்கலாம் என்றால்? அது இப்படி வாசிக்கிறது ஏ ஏச் சீ .

கொசுறு்-நான் அடிக்கடி எழுத்துப்பிழை விடுவது வழக்கம். அதற்க்கு ஒர் நண்பன் என்னை திட்டி விட்டார். அதற்காக முதல் முறையாக நான் மீண்டும் சரிபார்த்து வெளிவிடுகிறேன். (நான் எழுதுறதை விட மீள் சரிபார்க்க நேரம் கூட எடுத்துச்சு



Saturday, April 21, 2007

சில பயன் மிக்க தளங்கள்



http://www.chesspark.com/ நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு சென்று ஒன்லைன்லில் விளையாடலாம் இங்கே பல தரமாக பிரித்துள்ளார்கள் விரும்பிய தரத்தை தெரிவு செய்து விளையாடலாம்






http://www.pdffiller.com/ உங்களிடம் உள்ள பைலை ஆக மாற்றி தரும்



http://www.30gigs.com 30gb கொள்ளவு கொண்ட மின்னஞ்சல்




http://www.5min.com/ தன்னை முதல் வீடியோ விக்கிபீடியா என்று கூறுகிறது


http://www.imgppl.com/ நீங்கள் வைத்திருக்கும் போட்டோவுக்கு vote எடுப்பு நடத்தலாம்

Friday, April 20, 2007

பதிவுகளை காட்டும் பெட்டி(widgetbox)



நீங்கள் விரும்பிய தளத்தின் அல்லது வலைப்பூவில் இடப்படுவதை திரட்டி அழகான பெட்டி மூலம் காட்ட விரும்புகிறீரா?? இதே அதற்க்கு வழி widgetbox என்ற தளத்தில் பதிந்து பின் நீங்கள் எந்த
தளத்தை திரட்ட நினைக்கிறீர்களே அதன் முகவரியை வழங்குங்கள் அதை இத்தளம் கிரகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதன் rss feed ஐ இட்டு பின் அந்த அந்த பெட்டியை
place widget----->installpanalnow------>install on (என்பதில் blogger ஐ தெரிவு செய்க)---->பின் உமது புளொக்கரில் அது சேர்க்கபட்டுவிடும்





இது எனது தளத்துக்கான பெட்டி இதை உமது தளத்தில் பொருத்த விரும்பினால்
getwitget----->select blogger--->பின் உங்கள் புளொக்கர் கணக்குக்கானதை கொடுத்தால் அது தானாக பதிவாகும் இது போல வேறு விரும்பிய இடத்தில் பொருத்த விரும்பினால்
புளொக்கரை தெரிவு செய்யாமல் getwidgetcode ஐ கிளிக் செய்து அது தரும் கோடிங்கை விரும்பிய இடத்தில் பொருத்தலாம்


தமிழ் மணத்துக்கான பெட்டி

Thursday, April 19, 2007

இலவச (F)பக்ஸ் மலிவான போன் கால்


இலவச பக்ஸ் இலவச pc2pc call மலிவான போன் call msn உடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அட்டகாசமாக தனது சேவையை அண்மையில் ஆரம்பித்திருக்கிறது இத்தளம்

வீடியோ online மீக்சர்

என்ன மலைநாட்டான் திடிரென போட்டியெல்லாம் அறிவிக்கிறார் எப்படி அதை எடிற் பண்ணுறது என்று விழிக்கிறீரா கவைலையை விடுங்கள் கீழே உள்ள தளத்துக்கு சென்று எந்தவொரு அறிவும் இன்றி மிக்ஸ் பண்ணமுடியும் போட்டியில் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்




http://mixercast.com/

skype ஐ மேம்படுத்த

அதாவது ஸ்கைப் மசஞ்சரை எப்படியெல்லாம் மேம்படுத்தி உபயோகிக்கலாம் என்று சில விளக்கம்



http://testing.onlytherightanswers.com/ இது நீங்கள் குறிப்பிட்ட 15 மொழிகளில் கதைப்பதை அந்த 15 மொழிகளுக்கள் மாற்றி மறுமுனையில் உள்ளவரை கேட்கச் செய்யலாம்





http://crazytalk4skype.reallusion.com/ இது அனிமேசன் உருவங்களை காட்டி மற்றவரை கேலி கிண்டல் செய்யலாம்




http://ww2.henok.com:55001/SkypeMuter/ இது ஸ்கைப்பின் மீடியா அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது

Tuesday, April 17, 2007

எப்படி firefox இல் வின்டோ பிளேயரை இயக்குவது


நான் சில காலத்துக்கு முன் இணைய நண்பன் ஆலோசனையின் பேரில் firefox க்கு மாறினேன் சில காலம் பாவித்த பின்புதான் தெரிந்தது தலையிடி அதாவது பிளேயர் எதுவும் அதிலே இயங்கவில்லை இதனால் மனமுடைந்து எக்ஸ்புளொளர் திரும்பினேன் (அதாவது கணணியில் பிளேயர் இருந்தும் அது இல்லாததைப் போல் காட்டிக்கொண்டது) பின்பு அதே நண்பனின் ஆலோசனையில் பிளேயர்களை மீண்டும் intall செய்தால் பிரச்சினை தீரும் என்றார் நானும் real player flash player போன்றவற்றை மீண்டும் install செய்தேன் பின்பு அவை வேலை செய்தன ஆனால் எனக்கு வின்டோஸ் பிளேயரை மீண்டும் install செய்ய விருப்பமில்லை ஏனெனில் அது எனது கணணியுடன் வந்ததுமல்லாமல் வீஸ்டா பதிப்பு என்பதால் அதை செய்யாமல் நிறுத்திவிட்டேன் நீண்ட சிலகால தேடல் மற்றும் கலந்துரையாடல்களின் பின் ஒரு சிறிய Firefox plugin ஐ சேர்த்து இயங்கப் பண்ணலாம் என்பதை அறிந்து கொண்டேன் அதாவது உங்கள் கணணியில் இருக்கும் பிளேயரை மாற்றாது அதை உலாவியுடன் இணைத்துவிடும் முயற்சி முதலில் சில வேளை நீங்கள் இப்படியானதை பயன்படுத்தியிருப்பீர்கள் அப்படியானால் வேறு பிளேயர்களுக்கும் இப்படியான வழி இருந்தால் கூறவும் அடுத்து பயர்பொக்ஸில் சில தளங்களின் எழுத்துரு (தமிழ்) குழம்பி தெரிகிறதே இதற்க்கு என்ன தீர்வு???? தெரிந்தால் கூறுங்கள்


இது வரை உங்கள் பயர்பொக்ஸ் உலாவியில் இப்படியான பிரச்சினை இருந்தால் உடனே அதை நிறுவி பயன்படுத்துங்கள் இது வெறும் 250kb தான்
இங்கே தரவிறக்குங்கள்
சரி உங்களிடம் ஓர் கேள்வி யார் அந்த இணைய நண்பன்
(சரி சிறு க்குளுத்தாரேன் அவர் நெடுக கதைத்த படிதான் இருப்பார்)

Monday, April 16, 2007

esnips இன் வானொலி சேவை

தனது சேவையை விஸ்தரிக்கும் அல்லது மேம்படுத்தும் நோக்கில் பல அரிய சேவைகளை புகுத்தியது
playlist
radio



playlist பற்றி தெரியும் அதாவது பதிந்த பாடல்களை ஒர் தொகுப்பாக மாற்றுவது மற்றையது இந்த றேடியோ இது நீங்கள் பதிந்த பாடல்களை வரிசைக் கிரமமாக அடுக்கிவைத்து விட்டு வாசகர் தளத்துக்கு வரும் பொழுது தானாகவே இயங்கும் படி அமைக்கலாம் இடையிடையே உங்கள் புலம்பல்களை சேர்க்கலாம்

அழகழகான பல player ம் தருகிறது

THATHUVA PAADALKAL...

Sunday, April 15, 2007

அனிமேசன் பார்த்து மகிழ



நீங்கள் அனிமேசன் ரசிகரா அப்படியானால்் நீங்கள் கட்டாயமாக சென்று பார்க்க வேண்டிய தளம்
இங்கே சிறுவர்களை கவரக்கூடிய பல அனிமேசன்கள் உண்டு

Friday, April 13, 2007

ஒரு கல்லில் 40 மாங்காய்



நீங்கள் ஒரு கல்லில் 2 மாங்காய் கேள்விபட்டிருப்பீர்கள் இது வலைப்பூவை மேம்படுத்துவதற்க்கு தேவையான அனைத்தையும் ஒரு குடையின் கீழ் வழங்குகிறது அதாவது சிறந்த சேவைகளை தெரிந்து எடுத்து வழங்குகிறது அதாவது மொத்தம் 40 சேவைகள் அப்ப இனி பல தளங்கள ஏறியிறங்கத்தேவையில்லை இதிலே நான் அறிமுகம் செய்த commentful முதல் கொண்டு வாக்கெடுப்பு வசதி மற்றும் வருகையாளர் கணிப்பான் முதலியனவும் உள்ளன

அமாய்யா நெசமாவே ஒரு கல்லில் 40 மாங்காய்தான்

Wednesday, April 11, 2007

நாடும் நடப்பும்(காட்டூன் பத்திரிகை தரத்தில்)

நாடும் நடப்பும் என்ற தலைப்பில் நான் இனி காட்டுன்கள் பிரசுரிக்க இருக்கிறன் இதற்க்கும் வழமையானன ஆதரவையும் ஆலோசனையையும் வேண்டி நிக்கிறன் இன்றைய காட்டுன்

செய்தி்:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையிரனால் சுட்டுக்கொலை
kobitoon1


கொழுவி என்னைக் குறிவைத்து தக்கபித்தாவில் காட்டமான பின்னூட்டம் இட்டுள்ளார் இதை போர்நிறுத்தக்குழு ஏன் கண்டிக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம் இதை நாம் வன்மையாக கண்டித்து கீழ் வரும் அறிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்
அதாவது எனக்கு முதல் இப்படி இவர் இசையும் கதையும் வெளியிட்டது தெரியாத நிலையில் அப்படியான கருத்தை வெளியிட்டோம் அதற்க்கு மன்னிப்பும் கோருகிறோம் அவ் அறிவித்தலால் மனம் பாதிக்கப் பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம் அவருக்கு மனநிலை வெகுவிரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்குறோம் அத்துடன் இந்தப்பாடலை கொழுவிக்காக தமிழ்பித்தன் டெடிக்கேட் செய்கிறான்



அவர் வெளியிட்ட பின்னூட்ட இடுகைக்கான இணைப்பு
http://snegethyj.blogspot.com/2007/04/i.html

கொழுவியின் பின்னூட்டம்
//தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.//

நீங்கள் அந்த தொழில்நுட்பத்தை தங்கையிடம் கேளுங்கோ. அவ சொல்லித் தராட்டி உடனை அதை ஒரு பதிவாப் போட்டு விட்டு உங்கள் ஆங்கில நண்பிகளிடம் கேட்டு 108 மெயில் பண்ணுங்கோ. அதில 98 மெயிலுக்கு பதில் வரும். பிறகு அந்த சிதம்பர ரகசியத்தை எமக்கும் சொல்லுங்கோ.. உப்பிடித் தான் தங்கச்சி தடையளைப் போடுவா.. நீங்கள் தடையளை உடைச்செறிஞ்சு பாய்ஞ்சு வாங்கோ.. உடைச்செறியிற நேரம் கொம்பியுட்டர் கவனம்.


எனது பின்னூட்டம்
கொழுவிக்கு யார் மீதோ கோவம் போல கிடக்கு அதுதான் இங்க வந்து கத்துதறார் நீங்கள் நேர அவரிடம் சென்று கொழுவலாமே ஏன் இன்னொரு வீட்டில் வந்து சத்தம் இடுகிறீர் கொழுவியியும் பிழையில்லை நான் எனது இசையும் கதையையும் முதல் தடவை வலைப்பதிவில் அறிமுகம் என்று சொன்னவுடன் இங்கவந்து ஆத்திரத்தை கொட்டித்தீர்த்து விட்டுப் போய்விட்டார் கொழுவி வீரனாய் நேருக்கு நேர் கொழுவுவார் என்று பார்த்தால் இப்படி கோழையாட்டம் செய்யிறியளே சரி உமக்கு பிறசர் ஏதும் இருக்கே அப்படியானால் இப்படியான அறிகுறிகள் இருக்கத்தான் செய்யும்

"நாம் என்றும் பொறுமை காப்போம்"

உரையாடல்களைப் பதிவுசெய்ய


உரையாடல்களை ஸ்கைப்பில் செய்யும் போது பதிவு செய்ய இம்முறையும் உதவும் அவர்கள் தரும் மேலதிக வசதிகள்
Call Recording to MP3
Skype Call Transfer
Video Recording
Rich Mood Editor
Answering Machine
VideoMail
Mega Emotion Sounds
Auto Chat Reply
Birthday Reminders
Skype Status Change
Chat Recording
Email Forwarding
Contact Personalization
Auto Start Applications
Skype Blogging
Skype Podcasting

http://www.pamela-systems.com/
சரி இனிப்போய் தரவிறக்கி பதிவு செய்கிற வேலையைப் பாருங்கள்

Tuesday, April 10, 2007

சயந்தன் சோமி ரகசியம் என்ன?

ஆமாம் எல்லோரையும் எதிர்பார்ப்புக்குள்தள்ளிய பதிவு இதோ இங்கே பெரிதாக ஒன்றும் பொரிதாக செய்வதற்க்கு இல்லை தமிழனே அதை சொல்லித்தராத போது ஒடியந்து உதவிய அனைத்து ஆங்கில வலைநண்பர்களுக்கும் நன்றி இது பற்றி அறிந்து கொள்ள நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் 78 வந்த பதில்கள் 62 கைவசம் உள்ள இது தொடர்பான திட்டங்கள் 9
தேவையானவை
ஒலிவாங்கி(மைக்)-USB யூடானது சிறந்ததாம்
மற்றும் ஸ்கைப் தூதுவன் இவையிருந்தால் நீங்களும் சம்பாசனை செய்யலாம் இல்லாவிட்டால் பதிவிறக்க http://www.skype.com/intl/en/download/skype/windows/



http://www.prettymay.net/download.htm
மேலே உள்ள தளத்துக்குச் சென்று PrettyMay Voice Plugin for Skype Download என்பதை தரவிறக்கி நிறுவீக்கொள்ளுங்கள் பின் உங்கள் நண்பனை ஸ்கைப் மூலம் அழைத்து சம்பாசனை செய்ய ஆரம்பியுங்ககள் ஆரம்பிக்கும் போது அது பதியவா என்று கேட்கும் அனுமதி வழங்குங்கள் அது பதிவு செய்யும் பின் அதை உங்கள் கணணிக்கு பதிவிறக்கி கேளுங்கள் அது stereo முறையில் இருப்பதைக் காணலாம் பின் அதை ஏதாவது ஓடியோ எடிட்டர் மூலம் அதை mono வுக்கு மாற்றுங்கள்
நல்ல தொரு சம்பாசனையை எதிர்பார்க்கிறேன்(எனது எதிர்வு கூறல் பிழைத்து விட்டது நான் நினைத்தது சொதிக்குப் பிறகு புட்டெண்டுதான் ஆனால் ஆணமாம் அதைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து ஐநா சபைக்கு அறிக்கை சமர்பிக்க போகிறார்களாமாமே அதைப் பதிவேற்றியது சயந்தன் அல்ல தக்க தக்க அக்கா ஹி..ஹி )

கீழே உள்ள எனது உரையாடலை கேளுங்கள் இது பரிச்சார்த்தம்தான் வெகு விரைவில் அறிவியல் சார்ந்த உரையாடலை எதிர்பார்க்கலாம் (நேற்றே பதிந்தது பதிவேற்றிப்பார்த்தேன் முடியவில்லை பின் மற்றதை பதிவேற்றிவிட்டு பதிந்து விட்டேன் இப்பொது அதை போடுகிறென்

Monday, April 9, 2007

வீடியோ பதிவிறக்கி


அதிசயத்தக்க வகையில youtube googlevideo veoh போன்ற அனைத்து வீடியோத்தளங்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கச் செய்கிறது இது தரவிறக்க வெகத்தையும்(4மடங்கு) அதிகரிக்கிறது பலரால் மிகவும் விரும்பப் படுகிறது
இதைத் தரவிறக்க இங்கே சுட்டுங்கள்

Sunday, April 8, 2007

online ல் வைத்தே கொப்பின் fomate மாற்ற


விரும்பிய கோப்புக்கு மாற்றவும் youtube லிருந்து தரைவிறக்கவும் இந்தத் தளம் பயன்படுகிறது அதாவது http://www.mediaconverter.org/index.php இந்தத் தளம் online யினிலேயே கோப்பை மாற்றுகிறது எந்த வேண்டாத மென்பொருளையும் உங்கள் கணணியில் நிறுவ வெண்டியதில்லை நீங்கள் formate மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் அவர்கள் போப்பை மாற்றி விட்டு தரவிறக்கத்தை உங்கள் மின்னஞசலுக்கு அனுப்புவார்கள் ஆனால் ஒரு கோப்பின் ஆகக் கூடிய அளவு 50mb
kathal2 copy

Saturday, April 7, 2007

இலவச போன் உலகம் முழுக்க



http://www.justvoip.com
இலவசமாக கீழ்கண்ட நாடுகளுக்கு mobile or landline களுக்கு பேசி மகிழுங்கள் ஆனாலும் எந்தெந்த நாடுகள் வந்தாலும் நம்ம இந்தியா அல்லது இலங்கை என்பன இடம் பெற வில்லையே என்பது கவலையே வெகுவிரைவில் அவற்றுக்கும் வழிபிறக்க வேண்டும்
* Argentina
* Australia
* Austria
* Belgium
* Brazil
* Bulgaria
* Canada
* Chile
* Cyprus
* Czech Republic
* Denmark
* Estonia
* Finland
* France
* Germany
* Greece
* Hong Kong (+mobile)
* Hungary
* Ireland
* Italy
* Japan
* Latvia
* Luxembourg
* Malaysia
* Mexico [guadalajara]
* Mexico [mexico City]
* Mexico [monterrey]
* Monaco
* Netherlands
* New Zealand
* Norway
* Panama
* Peru
* Poland
* Portugal
* Puerto Rico (+mobile)
* Russian Federation
* Singapore
* Slovak Republic
* Slovenia
* South Korea
* Spain
* Sweden
* Switzerland
* Taiwan
* Thailand
* United Kingdom
* United States (+mobile)
* Venezuela

Wednesday, April 4, 2007

உங்கள் கணணியை இந்த டாக்ரிடம் காட்டுங்கள்


உங்கள் கணணியில் என்ன மென் பொருட்கள் இல்லை என்று இவர் சுட்டிக்காட்டுவார் அத்துடன் நீங்கள் விரும்பும் மென் பொருளையும் பதிவேற்றித்தருவார் அல்லது உங்கள் கணணியை அவர் பரிசோதிப்பதை நீங்கள் விரும்பாவிடின் உங்கள் கணணியில் இல்லாததை சென்று பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்
உங்கள் கணணியை இந்த டாக்டரிடம் காட்டுங்கள் (பரிசோதிக்க)
http://www.filehippo.com/updatechecker/
அல்லது இங்கே மருந்து வாங்கி சொந்த மருத்துவம் செய்யுங்கள்(பதிவறக்க)
http://www.filehippo.com

Tuesday, April 3, 2007

குரல் வழிப் பின்னூட்டங்கள்(4)


இதுவும் மைக்மூலம் குரல்வழிப் பின்னூட்டம் இடுவதற்க்கு சிறந்த தளம் ஆகும்
இதன் சிறப்பு வேறுதளத்துக்கு போகாமலே இங்கேயே பதிந்தை கேட்க முடியும் வேறு ஒன்றும் சொல்லும் படியாக இல்லை http://www.mychingo.com
கீழே உள்ள பெட்டி மீது அழுத்த இன்னொருதளத்துக்குச் செல்லும் அங்கெ வைத்து ஒலிவாங்கியுடன்(மைக்) உதவியுடன் கரலைப் பதிந்து கருத்து இட்டு விட்டு பின் தமிழ்பித்தன் தளத்துக்கவந்த கேட்டும் பாருங்கள்


Monday, April 2, 2007

குரல் வழிப் பின்னூட்டங்கள் (3)



///வடுவூர் குமார் said...
திட்ட- மன்னிக்கவும், சொல்ல இப்போது மைக் இல்லை.///

இதை வைத்து யோசித்த போது ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் எத்தனை பேர் கணிணி(கம்பியூட்டர்) பாவிப்பார்கள் அவர்களிடமிருந்து எவ்வாறு குரல் வழிக்கருத்தை பெறுவது என்று யோசித்தேன் ஏனென்றால் வடுவூர் குமார் தினம் எனக்கு கருத்து இடுபவர்களில் ஒருவர் அவரின் ஆதங்கத்தை தீர்க்க வேண்டியது தமிழ்பித்தனின் பொறுப்பு என நினைக்கிறேன்

அனேகம் வாசகர்கள் அலுவலகத்திலிருந்து வலைப்பூ வாசிப்பார்கள் அவர்கள் அலுவலகத்தில் சில வேளை ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் இருக்கலாம் அவர்கள் குரல் வழி கருத்து இடுவது இயலாது அதற்க்கு விடையாக கிடைத்த தளம் இது,

http://www.snapvine.com




(ஒலிவாங்கி(மைக்) இல்லாமல் இருக்கலாம் ஆனால் தொலைபேசி இல்லாமல் இருக்குமோ அதன் மூலமும் கருத்தை தெரிவிக்கச் செய்யலாம் கருத்தைக் காட்சிப்படுத்தவும் முடியும்

இத்தளத்தினரிடம் பதிந்து அவர்கள் தரும் நிரலை( கோடிங்கை) பொருத்தவும் வரும் வாடிக்கையாளர்கள் அதன் மீது அழுத்த அது அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கத்தையும் இரகசிய நம்பர் ஒன்றையும் தரும் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து இரகசிய நம்பரை அவர்கள் சொல்லும் நேரத்தில் பதிந்தால் அவர்கள் கருத்துச் சொல் அனுமதிப்பார்கள் நீங்கள் கருத்தைச் சொல்லி முடிந்தவுன் # அழுத்தவும்

1 ஐ அழுத்தினால் கருத்துச் சேர்க்கப் படும்
2 ஐ அழுத்தினால் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம்
3 ஐ அழுத்தினால் கருத்து சேர்க்கப் படாமல் நிராகரிக்கப் படும்
2 ஐ அழுத்தியிருப்பீர்களானால் மீண்டும் மீண்டும் இதே ஓழுங்கில் வரும்

கொசுறு: இந்த இலக்கத்துக்கு அழைக்க முற்றிலும் இலவசமே (கட்டணம் என்றால் யாரய்யா கருத்துப் போடுவார்கள்)


கையில் தொலைபேசியை எடுங்கோ தமிழ்பித்தனை நோக்கி திட்டல் எனும் பாச அம்பு கொடுங்கோ
இனி சந்தோசமாக எல்லாம் வடிவாக திட்டுங்கோ வழக்கம் போல் அருகில் கருத்துப் பெட்டி இருக்கிறது

பல பாசநெஞ்சங்களின் வேண்டுகோளுக்கு இணங்க
1 ஆங்கில தமிழ் ஒலி நடை தவிர்க்கப்படுகிறது
2 பூரண விளக்கம் அளிக்கப்படும்

Sunday, April 1, 2007

குரல் வழிப் பின்னூட்டங்கள்


பலரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பலரின் அவசர தேவையையும் கருத்தில் கொண்டு தமிழ்பித்தன் இவ்வாரம் முழுவதையும் இது சம்மந்தமான தளங்களை அலச இருக்கிறது அந்த வகையில் இன்று பார்க்கப் போகும் தளம் இது வாகும்
http://www.springdoo.com/
இதன் மூலம் ஒலி வழி மற்றும் ஒளி வழிப் பின்னூட்டங்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் இதன் எமக்கு தெரிவிக்கப் பட்ட கருத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது இதன் சிறப்பம்சம் ஆகும் எமது தளத்தில் வைத்தே இயக்கி கேட்க முடியும் பதிவு போட்டவர் பின் கேட்டும் மகிழலாம் ஆனால் பதிவு போட வேறு தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும அருகில் எனது உதாரணப் பெட்டியில் ஏதாவது திட்டிவிட்டுப்போங்கோ நல்லா திட்டுங்கோ....
அம்புதொடுக்க
Springdoo Me

தொடுத்த அம்புக்கள்

இலவச இணைய சேவை கூகிள் அறிமுகம்


இலவச இணைய சேவையை கூகிள் அறிமுகம் செய்தது ஆனால் இது ஏப்பிரல் பூல் செய்தியா என பலரையும் சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது அதாவது நீர் முலம் இணைய இணைப்பை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது அனாலும் இது எந்த எந்த இடங்களுக்கு சாத்தியப்படும் என்று அது குறிப்பிடவில்லை ஆனாலும் கூகிள் இது வரை இப்படி ஏப்ரல் பூல் செய்தி வெளியிட்டது கிடையாதாம் நாமும் அப்படி அமைய வேண்டுவோம் 8 mb/s ம் வேகம் ஆம்மமாடி
அதாவது இது கழிவறை நீரின் மூலம் அனுப்பப் படுமாம்
கீழே மேலதிக செய்தி
http://www.google.com/tisp/install.html


பிந்திய செய்தி
கூகிள் இது முட்டாள் செய்தி என அறிவித்தது
http://www.google.com/tisp/notfound.html